இந்தியாவில் மிகப் பெரிய 'சோலார் பவர் பிளான்ட்'டை ராஜஸ்தானில் அமைக்க அதானி திட்டம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டில் மின்சார உற்பத்தியை மேம்படுத்து மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் மோடியின் கனவாக விளங்குவது சூரிய மின்சார உற்பத்தி தான்.

 

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான அதானி குழுமத்தின் தலைவர் கொளதம் அதானி, 10,000 மெகா வாட் மின்சார உற்பத்தி திறன் கொண்டு சோலார் பிளான்ட் தளத்தை ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைத்து அமைக்க உள்ளார்.

அதானி குழுமம்

அதானி குழுமம்

இந்குழுமத்தின் கிளைகளில் ஒன்றான Adani Renewable Energy Park நிறுவனமும் ராஜஸ்தான் மாநில அரசும் இணைந்து 50 -50 என்ற முதலீட்டு அளவில் இப்புதிய சோலார் பிளான்டை அமைக்க உள்ளனர். இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளது.

மேலும் இத்திட்டப் பணிகள் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

முதலீடு

முதலீடு

இத்திளத்தை அமைக்கச் சுமார் 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என Adani Renewable Energy Park நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தொகை சோலார் பேனல் தயாரிப்பு, உதிரிபாகங்கள், உற்பத்தி தளம் அமைக்க ஆகிய அனைத்தும் இதில் அடங்கும்

5,000 மெகா வாட்

5,000 மெகா வாட்

இதில் இருந்து கிடைக்கப்பெறும் 5,000 மெகா வாட் அதானி குழுமம் பயன்படுத்திக்கொள்ளும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு
 

வேலைவாய்ப்பு

இத்தளத்தை அமைப்பதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மத்திய அரசின் இலக்கு

மத்திய அரசின் இலக்கு

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1,00,000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் தளங்களை அமைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

மேலும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் 500 மெகாவாட் திறன் கொண்ட 25 சோலார் தளைங்களை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

அதானி பவர்

அதானி பவர்

இந்தியாவில் அனல் மின் உற்பத்தியில் சிறந்து விளங்குவது அதானி பவர் நிறுவனம் தான், இந்நிறுவனம் சுமார் 10,480 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதுமட்டும் அல்லாமல் நிலக்கரி மூலம் 40 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani to set up country's largest solar park of 10,000 MW in Rajasthan

Adani Group has set a target of 10,000 mega watts (MW) of solar power by 2022 and signed a joint venture agreement with the Rajasthan Government which will emerge as the largest such integrated facility in India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X