அல்ட்ரா பணக்காரர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியாவுக்கு நான்காவது இடம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நிறுவனம், குளோபல் வெல்த் 2015 என்ற தலைப்பில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் 'அல்ட்ரா ஹய்' பணக்காரர்கள் அதிகம் கொண்டு நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

அது என்ன அல்ட்ரா ஹய் பணக்காரர்கள்?

அது என்ன அல்ட்ரா ஹய் பணக்காரர்கள்?

100 மில்லியன் டாலருக்கு (சுமார் 630 கோடி ரூபாய்) அதிகமாகச் சொத்துகளை வைத்துள்ளவர்கள் அல்ட்ரா ஹய் பணக்காரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். அதாவது மிகப் பெரும் பணக்காரர்கள்.

இந்தியா 4வது இடம்

இந்தியா 4வது இடம்

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நடத்திய ஆய்வில் இந்தியா 928 அல்ட்ரா ஹய் பணக்காரர்கள் கொண்டு இப்பிட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. வழக்கம் போல் இந்த வருடமும் இப்பிட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தைப் படித்துள்ளது.

இந்தியா மற்றும் சீனா

இந்தியா மற்றும் சீனா

உலக நாடுகள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளன.

இவற்றில் சீனா அமெரிக்காவிற்கு போட்டியாகவும், இந்தியா சீனாவிற்குப் போட்டியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாப் 5 நாடுகள்
 

டாப் 5 நாடுகள்

இந்நிலையில் இப்பட்டியலில் டாப் 5 இடங்களைப் பிடித்துள்ள நாடுகளை இப்போது பார்ப்போம். 2014ஆம் ஆண்டின் நிலையை வைத்து பாஸ்டன் கன்சல்டிங் குரூப் இந்த ஆய்வை மேற்கொண்டது, இதில் அமெரிக்கா 5,201 அல்ட்ரா ஹய் பணக்காரர்களைக் கொண்டு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அதைத் தொடர்ந்து சீனா (1,037), பிரட்டன் (1,019), இந்தியா (928) மற்றும் ஜெர்மனி (679) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

இந்தியா

இந்தியா

கடந்த வருடம் இந்தியாவில் இதன் எண்ணிக்கை வெறும் 284 மட்டுமே, ஆனால் இந்த வருடம் இதன் அளவு 928 ஆக உயர்ந்துள்ளது.

ஆசிய பசிபிக் பகுதி

ஆசிய பசிபிக் பகுதி

2014ஆம் ஆண்டு ஆய்வின் படி ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள அல்ட்ரா ஹய் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 47 டிரில்லியன் டாலராகும். 2016ஆம் ஆண்டில் இதன் அளவு 57 டிரில்லியன் டாலராக உயரும் எனப் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India has fourth largest ultra-high-net-worth households: Report

India is home to the fourth largest number of ultra-high-net-worth households that have more than 100 million dollars in private wealth, according to a new report topped by the US.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X