ஏர்பஸ் நிறுவனத்தின் மில்லியன் டாலர் டீலை கைப்பற்றியது மஹிந்திரா.. மேக் இன் இந்தியாவில் ஒரு மைல்கள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரீஸ்: உலகின் முன்னணி பயணிகள் விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திற்கு, உதிரிபாகங்களைத் தயாரிக்கும் மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தைப் பாரீஸ் ஏர் ஷோவில் மஹிந்திரா குரூப் கைப்பற்றியுள்ளது.

 

இது மேக் இன் இந்தியா திட்டத்தில் ஒரு மைல்கள் எனக் குறிப்பிடால் மிகையாகாது.

பெங்களூரில் உற்பத்தி

பெங்களூரில் உற்பத்தி

இத்திட்ட மதிப்பு பற்றிய தகவல்களைத் தெரிவிக்க மஹிந்திரா குழுமம் மறுத்துவிட்டது. ஆயினும் ஏர்பஸ் நிறுவனத்திக்குச் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் பெங்களூர் அருகில் நார்சபுரா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா ஏரோஸ்டக்சர்ஸ் தளத்தில் உற்பத்தி செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜெர்மனிக்கு ஏற்றுமதி

ஜெர்மனிக்கு ஏற்றுமதி

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வருடாந்திர அடிப்படையில் ஜெர்மனியில் உள்ள இந்நிறுவனக் கிளைக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

ஏர்பஸ் நிறுவனத்தின் உற்பத்தி திட்டத்தைக் கைப்பற்றியதன் மூலம் இந்நிறுவனத்தில் உற்பத்தி மற்றும் வடிவமைப்புத் துறையில் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.

ஆனந்த் மஹிந்திரா
 

ஆனந்த் மஹிந்திரா

இதுகுறித்து மஹிந்திரா குழுமமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா கூறுகையில், இத்தகையைப் பெரும் திட்டத்தைப் பெற நீண்ட திட்டமுறைகள் மற்றும் தகுதிகள் தேவைப்படுகிறது. இந்த உற்பத்தைத் திட்டத்தைக் கைப்பற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

மேலும் ஏர்பஸ் நிறுவனத்திற்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் திட்டத்தைக் கைப்பற்றியதன் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய உற்பத்தி பொருட்களின் மீதான நம்பிக்கை உயரும்.

மஹிந்திரா

மஹிந்திரா

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 16.98 பில்லியன் டாலராகும். மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mahindra bags multi-million dollar Airbus deal

The Mahindra Group today clinched a multi-million dollar aerospace contract with European consortium Airbus at the Paris Air Show, marking a major milestone in the ‘Make in India’ initiative.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X