பிஎஸ்என்எல்லை லாபகரமாக்க மோடி மும்முரம்... ரவி சங்கர் பிரசாத்துடன் முக்கிய ஆலோசனை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபக்கரமாகவும், மேம்படுத்தவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதனை தனது முக்கியப் பணியாகவும் கருதியுள்ளார் பிரதமர் மோடி.

 

இதற்காகப் புதன்கிழமை இத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை தனிப்பட்ட முறையில் மோடி சந்தித்தார். இக்கூட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைச் சரிவு பாதையில் இருந்து மீட்டெக்கும் திட்டங்களைக் குறித்துச் சுமார் 45 நிமிடத்திற்கு ஆலோசனை செய்தார்.

போட்டி

போட்டி

மத்திய அரசு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனத்தைக் கொண்டு தனியார் நிறுவனங்களுடன் போட்டிப்போட திட்டமிட்டுள்ளது. மோடியின் திட்டப்படி அடுத்த 5 வருடங்களில் இப்பொதுத்துறை நிறுவனம் புதிய பரிமாண வளர்ச்சியை அடையும்.

மோடி

மோடி

இந்நிறுனங்களை ( பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்) மீட்டெடுக்கும் திட்டத்தில் பிரதமர் மோடி மிகவும் தீவரமாக உள்ளார். மேலும் அவர் இந்நிறுவனத்தின் மொத்த வடிவமைப்பு மற்றும் செயல்முறை விளக்கங்களைக் கோரியுள்ளார் எனத் இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 வருடத்திற்கு முன் லாபம்

10 வருடத்திற்கு முன் லாபம்

பிஎஸ்என்எல் நிறுவனம் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக்காலாத்தில் 10,000 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியது இதன் பின் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

2014ஆம் ஆண்டில் இந்நிறுவனம் சுமார் 7,500 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ரவி சங்கர் பிரசாத்
 

ரவி சங்கர் பிரசாத்

2014-15ஆம் ஆண்டில் மத்திய அரசின் சில திட்ட மாற்றங்களின் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் 2.1 சதவீதம் வரை அதிகரித்ததுள்ளதாகத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

மார்ச் மாத கணக்கின் படி இந்நிறுவனத்தில் (பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இணைப்பில்) சுமார் 47 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 7.72 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi discusses BSNL revival plan with Prasad

Prime Minister Narendra Modi met Telecom Minister Ravi Shankar Prasad earlier this week to review the plans for revival of the state-run BSNL.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X