20 பில்லியன் டாலர் முதலீடு.. 20 ஜிகாவாட் சோலார் மின்சாரம்.. 3 நாட்டு நிறுவனங்கள் இணைப்பு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் பசுமை மற்றும் பாதுகாப்பான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தில் 3 நாட்டு நிறுவனங்கள் இணைந்து 20 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. இப்புதிய நிறுவனத்தின் பெயர் எஸ்பிஜி கிளின்டெக்.

 

ஜாப்பான் நாட்டின் டெலிகாம் மற்றும் இண்டர்நெட் நிறுவனமான சாப்ட்பாங்க், இந்தியாவின் முதலீட்டு நிறுவனமான பார்தி எண்டர்பிரைசர்ஸ், தைவான் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளது.

20 பில்லியன் டாலர் முதலீடு

20 பில்லியன் டாலர் முதலீடு

சோலார் மின்சார் உற்பத்தி திட்டத்தில் இதுவரை துவங்கப்பட்ட திட்டங்களில் இதுவே மிகப்பெரிய அதிகப்படியான அன்னிய முதலீட்டை பெற்றுள்ளது.

சாப்ட்பாங்க் தலைமை

சாப்ட்பாங்க் தலைமை

இப்புதிய எஸ்பிஜி கிளின்டெக் நிறுவனத்தில் சாப்ட்பாங்க் தலைமையில் செயல்பட உள்ளது, மற்ற இரு நிறுவனங்களும் மைனாரிட்டி பார்ட்னர்கள் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இந்நிறுவனத்தில் பங்கு பிரிவினை பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மிகப்பெரிய அன்னிய முதலீடு

மிகப்பெரிய அன்னிய முதலீடு

இந்தியாவில் இதுவே மிகப்பெரிய அன்னிய முதலீடாக விளங்குகிறது. அடுத்த தலைமுறை இந்தியாவை உருவாக்கும் மோடி அரசின் ஒரு மைல்கல்லாக இத்திட்டம் இருக்கும்.

மசயோஷி சன்
 

மசயோஷி சன்

மோடி எங்களை இண்டர்நெட் துறையில் மட்டும் தான் முதலீடு செய்ய வேண்டினார், ஆயினும் renewable energy துறையிலும் நீங்கள் வெற்றிப்பெறும் வாய்ப்புகள் உள்ளது என கூறினார். அதன் பின் இத்துறையை பற்றி நன்கு ஆராய்ந்து திட்ட வடிவத்துடன் பிரதமர் மற்றும் எனர்ஜித்துறை அமைச்சரை சந்தித்தோம்.

இதன் பின்னரே 20 ஜிகாவாட் renewable energy தளத்தை அமைக்கும் திட்டத்தை உருவாக்க முழுமையான நம்பிக்கை கிடைத்தது என சாப்ட்பாங்க் நிறுவனத்தின் சீஇஓ மசயோஷி சன் தெரிவித்தார்.

1 பில்லியன் டாலர்

1 பில்லியன் டாலர்

கடந்த அக்டோபர் மாதம் இந்நிறுவனம் இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 10 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தது. இதன் படி கடந்த 9 மாதத்தில் ஈகாமர்ஸ் துறை, ஸ்னாப்டீல், ஓலா கேப்ஸ் மற்றும் ஹவுசிங்.காம் நிறுவனங்களில் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

மோடி அரசு கொடுத்த நம்பிக்கை

மோடி அரசு கொடுத்த நம்பிக்கை

இந்தியாவில் 20 பில்லியன் முதலீட்டு திட்டத்துடன் இறங்கியுள்ள சாப்ட்பாங்க் நிறுவனம் கூறுகையில், "மோடி அரசு கொடுத்த நம்பிக்கையும், இந்தியாவில் இருக்கும் வளர்ச்சிக்கான சாத்தியகூறுகளும் முதலீட்டை இரட்டிப்பாக (20 பில்லியன் டாலர்) எங்களை உந்தியுள்ளது" என தெரிவித்தது.

நேஷ்னல் சோலார் மிஷன்

நேஷ்னல் சோலார் மிஷன்

மத்திய அரசு நேஷ்னல் சோலார் மிஷன் என்னும் திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் தற்போது எஸ்பிஜி கிளின்டெக் நிறுவனமும் இணைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SoftBank, Bharti, Foxconn form JV

SoftBank Corp, Bharti Enterprise and Foxconn Technology, on Monday announced a joint venture, SBG Cleantech, to promote adoption of clean and safe energy in India, which investing $20 billion to generate 20 GW (gigawatt) of solar power.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X