ரூ.3,000 கோடி நிதி திரட்ட பங்குச்சந்தையில் காத்துக்கிடக்கும் 3 நிறுவனங்கள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய பங்குச்சந்தையில் இறங்குவதன் மூலம் 3,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டும் திட்டத்தில் பயணிகள் விமான நிறுவனமான இண்டிகோ, பணிநியமன நிறுவனமான டீம்லீஸ் மற்றும் ஈகாமர்ஸ் துறையின் முன்னணி நிறுவனமாகத் திகழும் இன்ஃபிபீம் ஆகிய 3 நிறுவனங்களும் இறங்கியுள்ளது.

இம்முன்று நிறுவனங்கள் தனது ஐபிஓ விண்ணப்பங்கள் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் சமர்ப்பித்துள்ளது.

இண்டிகோ

இண்டிகோ

இந்தியாவில் லாபகரமாகச் செயல்படும் பயணிகள் விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான இண்டர்குளோபல் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் தனது 10 சதவவீத பங்குகளை ஐபிஓ சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் 2,000 -2,500 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட உள்ளது.

டீம் லீஸ் மற்றும் இன்ஃபிபீம்

டீம் லீஸ் மற்றும் இன்ஃபிபீம்

இந்நிலையில் பணிநியமன (Staffing) நிறுவனமான டீம் லீஸ் 450-500 கோடி ரூபாய் வரையும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இகாமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான இன்ஃபிபீம் நிறுவனம் ரூ.400 கோடி வரையும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இன்டிகோ, டீம்லீஸ், இன்ஃபிபீம் நிறுவனங்களைத் தொடர்ந்து கேப் காஃபி டே, மேட்ரிக்ஸ் மற்றும் ஆர்பிஎல் வங்கி ஆகியவை கடந்த வாரம் செபியிடம் தனது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது.

ஜிவிகே குரூப் (GVK)

ஜிவிகே குரூப் (GVK)

இந்தியாவில் மிகப்பெரிய கட்டுமானம் நிறுவனமான ஜிவிகே குரூப் தனது ஏர்போர்ட் பிஸ்னஸ் நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஜிவிகே ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் 3,000 கோடி ரூபாய் வரை நிதிதிரட்ட திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் மும்பை மற்றும் பெங்களூரு ஏர்போர்ட்-களை நிறுவியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big day for IPOs: IndiGo, Infibeam, Teamlease expect to raise over Rs. 3,000 cr

In a big day for IPOs, at least three companies — low-cost carrier IndiGo, staffing firm Teamlease and e-retailer Infibeam — have lined up public offers to raise an estimated over Rs. 3,000 crore from investors.
Story first published: Tuesday, June 30, 2015, 13:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X