புதிய 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரூ1.14 செலவு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய நாணயங்களுக்கு மறக்க முடியாத பல வரலாறுகள் உள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

 

சமீபத்தில் 1 ரூபாய் நோட்டுகளின் அச்சுச் செலவுகள் குறித்துத் தகவல் அறியும் சட்டத்திற்கு (RTI) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு SPMCIL அமைப்புப் பதில் அளித்துள்ளது.

இதில், மத்திய அரசு வெளியீடும் ஓரே ரூபாய் தாள் 1 ரூபாய் தான். இதனை அச்சடிக்க 1.14 ரூபாய் செலவு செய்யப்படுவதாக இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

(இந்திய நாணயங்களை பற்றிய நாம் அறியப்படாத உண்மைகள்!!)

அச்சு பணி நிறுத்தம்..

அச்சு பணி நிறுத்தம்..

ரூபாய் தாள்களின் மதிப்புகளை விடவும் அச்சுச் செலவுகள் அதிகமாகியுள்ளதை அடுத்து மத்திய அரசு ஒரு ரூபாய் தாள்களின் அச்சு பணிகளை 20 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தியது. இதன் பின் 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்களைின் அச்சுப்பணிகளையிம் முழுமையாக நிறுத்திவிட்டு நாணயங்கள் தயாரிப்பை அதிகரித்தது.

டிசம்பர் 2014

டிசம்பர் 2014

இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நிதியமைச்சகம் மீண்டும் ரூ.1 நோட்டுகளை வெளியீடுவதாக அறிவித்தது. இவ்வறிப்பின் படி மார்ச் 6ஆம் தேதி மத்திய அரசு ராஜஸ்தான் மாநிலத்தின் நாத்வாரா பகுதியில் வெளியிட்டது.

புதிய ரூபாய் தாள்கள்

புதிய ரூபாய் தாள்கள்

இப்புதிய ரூபாய் தாள்களில் அசோக சின்னம் சத்யமேவே ஜெயதே என்னும் வாக்கியம் இல்லாமல் அச்சடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சதுரடிக்கு 900 கிராம் என்ற வீதத்தில் 110 மைக்ரான் தடிமத்தில் உள்ளது.

நிதித்துறை செயலாளர்
 

நிதித்துறை செயலாளர்

மேலும் ஒரு தாள்கள் மட்டும் தான் இந்தியாவில் மத்திய அரசு அச்சடிக்கப்பட்டு நிதித்துறை செயலாளர் கையெழுத்து பதிவுடன் வெளியிடப்படும். பிற அனைத்தும் ரூபாய் நோட்டுகளும் ரிசர்வ் வங்கி அச்சடித்து ஆர்பிஐ கவர்னர் கையெழுத்து அச்சடிக்கப்பட்டு இருக்கும்.

செலவு

செலவு

இதனை அச்சடிக்க 1.14 ரூபாய் செலவு செய்யப்படுவதாக எஸ்பிஎம்டிஐஎல் அமைப்பு (Security Printing and Minting Corporation of Indian Limited) தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Relaunched Re 1 Note Costs Government Rs 1.14!

The Security Printing and Minting Corporation of Indian Limited (SPMCIL) has replied to an RTI query that the cost of printing one rupee note is Rs 1.14!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X