சென்னை: உலக நாடுகளில் அதிகளவில் தங்க நகைகளை வாங்கும் பட்டியலில் கடந்த 10 வருடமாகவே இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் முதல் இடத்தைப் பிடிக்க இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து போட்டி போட்டு வருகிறது.
இந்நிலையில் வெல்த்-எக்ஸ் என்னும் ஒரு ஆய்வு நிறுவனம் இந்தியாவில் அதிகச் சொத்து மதிப்புடையை நகை கடை உரிமையாளர்களைப் பட்டியலிட்டுள்ளது.
இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது யார் தெரியுமா?? "என் தங்கம் என் உரிமை"

டிஎஸ் கல்யானராமன்
வெல்த்-எக்ஸ் நடத்தி ஆய்வில் முதல் இடத்தைப் பிடித்தது கல்யான் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி.எஸ்.கல்யானராமன்.

1.3 பில்லியன் டாலர்
கேரள மாநில திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கல்யான் ஜூவல்லர்ஸ் உலக நாடுகளில் மொத்த 83 கிளைகளைக் கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் கல்யானராமன் 1993ஆம் ஆண்டுத் தனது தொழிலை வெறும் 25 இலட்ச ரூபாய்க் கொண்டு துவங்கினார்.
தற்போது இவரது சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலராகும்.

83 கிளைகள்
வெளிநாடுகளில் 13 கிளை மற்றும் இந்தியாவில் 70 கிளைகளை நிறுவி சுமார் 8,500 பணியாளர்களைக் கொண்டு இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை மகிப்பெரிய அளவில் நடத்தி வருகிறது.

பையர்ஸ்டார் டயமண்ட்ஸ்
கல்யானராமன் அவர்களைத் தொடர்ந்து நிரவ் மோடி 1.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் வைர வியாபார குடும்பத்தில் இருந்து வந்ததால் இத்துறையில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தார்.
இவர் பையர்ஸ்டார் டயமண்ட்ஸ் நிறுவனத்தை 1999ஆம் ஆண்டுத் துவங்கினார்.

மற்றொகு கேரள வணிகர்
மூன்றாம் இடத்தில் கோழிக்கோடு பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மலபார் கோல்ட் அன்ட் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.பி.அகமத் 1 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பீமா ஜுவல்லர்ஸ்
இந்நிறுவனத்தின் தலைவர் பி. கோவிந்தன் 620 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிறுவனம் இந்தியாவில் 40 கிளைகளும், மத்திய கிழக்கு நாடுகளில் 10 கடைகளையும் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது.

மூவர்
டாப் பத்து இடங்களில் மூன்று இடங்களை ஓரே நிறுவனத்தைச் சேர்ந்த மூவர் பெற்றுள்ளனர்.
கிரன் ஜெம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லபாய் எஸ் பட்டேல் (590 மில்லியன் டாலர்) பாபுபாய் லக்கானி (470 மில்லியன் டாலர்), மாவ்ஜி பாஸ் பட்டேல் (410 மில்லியன் டாலர்) ஆகியோர் 5, 8, 9 இடங்களைப் பிடித்தனர்.

6வது இடம்
லக்ஷமி டயமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வசந்த் கஜிரா 580 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதல் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தர்மநந்தன் டயமண்ட்ஸ்
வைர வியாபாரியான லால்ஜிபாஸ் பட்டேல் தர்மநந்தன் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவரின் சொத்து மதிப்பு 480 மில்லியன் டாலர் பெற்று 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ராஜேஷ் எக்ஸ்போர்
இந்நிறுவனத்தின் தலைவரான ராஜேஷ் மேத்தா 310 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் 10 இடத்தில் உள்ளார்.

கேரளா
அதிகச் சொத்து மதிப்புடைய டாப் 10 பணக்கார நகை கடை உரிமையாளர்களில் 3 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.