ஜட்டி முதல் கார் வரை காசு பாத்துட்டோம்.. அடுத்தது என்ன?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் உள்ளதால் பெரு நிறுவனங்கள் கூட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைக் கூர்ந்து கவனித்து வருகின்றன. சமயம் வாய்க்கும்போது, எலியை முதலைக் கவ்வுவது போல கைப்பற்றிக் கொள்ளவும் அவை தயங்குவதில்லை.

 

(அனில், முகேஷ் அம்பானியை ஒன்று சேர்த்த பத்ம விபூஷண் விருது..!)

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களும் கூடத் துவக்க நிறுவனங்களின் வளர்ச்சியில் பணம் பார்க்கக் கிளம்பியுள்ளனர்.

(உங்கள் வாழ்க்கையை நரகமாக்கும் கிரெடிட் கார்டு பற்றிய சில ரகசியங்கள்..!)

விளம்பரம்

விளம்பரம்

பனியன், மதுபானம், லாரி, கார், குளிர்பானம், டாய்லட் க்ளீனர் என அனைத்து விளம்பரங்களிலும் நடிக்கும் சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், அந்த வருமானத்தை மேலும் பெருக்க, வளர்ச்சி மிகுந்த நிறுவனங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

சச்சின் முதல் ரன்பீர் வரை..

சச்சின் முதல் ரன்பீர் வரை..

இன்றைய நிலையில் இந்தியாவில் துவக்க நிறுவனங்களுக்குப் பஞ்சமில்லை, இதில் வெற்றிபெறும் நிறுவனத்தைத் தேடுவதுதான் கஷ்டம்.

இதற்காக 11 பேர் கொண்ட குழுவை வைத்துக்கொண்டு சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ரன்பீர் கபூர், அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்.

யுவராஜ் சிங்
 

யுவராஜ் சிங்

உதரணமாகக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் துவங்கிய யூவிகேன் நிறுவனத்திற்குக் கிடைத்த 10 மில்லியன் டாலர் முதலீட்டை ஹெல்தியன்ஸ், வயோமோ, எடுகார்ட் மற்றும் மூவ் ஆகிய 4 நிறுவனத்தில் சுமார் 1 - 2 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளார்.

ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்

இன்றைய தலைமுறையினரின் கனவுக் கண்ணன் எனக் கூறப்படும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சாவன்.காம் என்னும் இணையதள இசை நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை வைத்துள்ளார்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

Ziddu.com என்னும் சிங்கப்பூர் இணையதள நிறுவனத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் 125,000 டாலர் முதலீடு செய்துள்ளனர்.

அதுமட்டும் அல்லாமல் அமிதாப் பச்சன் ஸ்டாம்பீட் கேபிடல், ஜஸ்ட் டயல் போன்ற பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

முதலீட்டு நிறுவனங்கள்

முதலீட்டு நிறுவனங்கள்

இவர்கள் மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டு நிறுவனங்களும் தற்போது இந்தியாவில் துவக்க நிறுவனத்தில் அதிகளவிலான முதலீட்டை பதிவு செய்து வருகிறது. உதரணமாக ஓலா கேப்ஸி, டாக்ஸி பார் ஸ்யூர் போன்றவை.

நிறுவனங்களுக்கு ஜாக்பாட்

நிறுவனங்களுக்கு ஜாக்பாட்

துவக்க நிறுவனங்களுக்குப் பிரபலங்களின் முதலீடு சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை அளிக்கிறது. இதனால் நிறுவனம் செயல்படும் துறையைப் பற்றிச் சிறிதளவும் தெரியாத பிரலங்கள் என்றாலும் நிறுவனங்கள் கண்களை மூடிக்கொண்டு இணைத்துக்கொள்கிறது.

ஹெல்தியன்ஸ்

ஹெல்தியன்ஸ்

இந்நிறுவனத்தில் யுவராஜ் சிங்கின் முதலீட்டுக்கு பிறகு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹெல்தியன்ஸ் சுமார் 15 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

உதராணமாக ரஜினி அல்லது கமல் உங்கள் வீட்டிற்கு வந்தால் என்ன நடக்கும். அடுத்த நாள் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் உங்களது புகைப்படமும், வீடும் இருக்கும். இதேதான் நிறுவனங்களில் நடக்கிறது.

பிரபலங்களின் பார்வை

பிரபலங்களின் பார்வை

இன்றைய நிலையில் அதிக வருவாய் அளிக்கும் துறைகளாகப் பிரபலங்கள் பார்ப்பது 3 துறைகள் தான். ஆடை, தனிப்பட்ட சுகாதார நலன் (personal care) மற்றும் விருந்தோம்பல் (hospitality) ஆகியவை மட்டுமே, முடிந்தால் நீங்களும் முதலீடு செய்ய நீங்களும் துவங்கலாம்.

அம்மாடியோவ்..

அம்மாடியோவ்..

சாதாரண ஊழியர்களை விட 205 மடங்கு அதிக சம்பளம்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Celebrities also bitten by the start-up bug

Bollywood superstars and sporting heroes are going beyond endorsing brands to investing in start-ups.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X