இந்த நிறுவனம் தான் 'பெஸ்ட்'.. மற்றதெல்லாம் 'வொஸ்ட்'...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் ஊழியர்கள் பணிப்புரிய ஏற்ற, டாப் 10 நிறுவனங்களை கிரேட் பிளேஸ் டூ வொர்க் என்னும் ஒரு ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

இந்த ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு வருடமும் பல நாடுகளில் உள்ள நிறுவனங்களை தனது பிரத்தியேக முறை கொண்டு ஆய்வு செய்து வருகிறது. இதனால் உலக நாடுகளில் இந்நிறுவன முடிவுகள் மிகவும் மதிக்க தக்க வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் டாப் 10 இடங்கள் பிடித்துள்ள நிறுவனங்களை இப்போது பார்போம். சத்தியமா இதுல இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இடம் பெறவில்லை.

10வது இடம்...

10வது இடம்...

கிரேட் பிளேஸ் டூ வொர்க் நிறுவன ஆய்வில் இடம்பெற்ற நிறுவனங்களில் 10வது இடத்தைப்பிடிப்பது லைப்ஸ்டைல் இண்டர்நேஷ்னல்.

லேண்டுமார்க் குரூப் நிறுவனத்தின் கிளை நிறுவனமான இது இப்பட்டியலில் 10 இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் லைப்ஸ்டைல், மேக்ஸ், ஸ்பிளாஷ் மற்றும் ஹோம் சென்டர் போன்ற கடைகளை சிறப்பாக நடத்தி வருகிறது.

 

ஃபோர்ப்ஸ் மார்ஷெல்

ஃபோர்ப்ஸ் மார்ஷெல்

உற்பத்தி நிறுவனமான ஃபோர்ப்ஸ் மார்ஷெல் இப்பட்டியலில் 9வது இடத்தை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தில் பணியாளர்களுக்கு தங்களின் ஐடியாக்களை மெய்படுத்த அவ்வப்போது சந்தர்ப்பம் அளிப்பதாக இந்நிறுவன பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

அக்கார்ட் இந்தியா

அக்கார்ட் இந்தியா

நாளை வர்த்தக உலகை மாற்றி அமைக்ககூடிய பயிற்சிகளை அளிக்கும் அக்கார்ட் இந்தியா இப்பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது.

இன்டூட் டெக்னாலஜி
 

இன்டூட் டெக்னாலஜி

806 பணியாளர்களை கொண்ட இந்த ஐடி நிறுவனத்தில் ஒரு பெண் பணியாளர்களுக்கு 4.64 சதவீத அளவில் ஆண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் இந்நிறுவனத்தில் இன வேற்றுமை சற்று குறைவாகவே உள்ளது.

இந்நிறுவனம் 7வது இடத்தை பிடித்துள்ளது.

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடெக்ட்

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடெக்ட்

2,228 பணியாளர்களை கொண்ட இந்நிறுவனம் இப்பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் நுகர்வோர் பொருட்களை அதிகளவில் விற்று வருகிறது.

எஸ்ஏபி லேப்ஸ்

எஸ்ஏபி லேப்ஸ்

இந்தியாவில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெர்மானிய நிறுவனம் எஸ்ஏபி லேப்ஸ் இப்பட்டியலில் 5வது இடத்தை பெற்றுள்ளது.

எந்த ஒரு நிறுவனத்திலும் இல்லாத ஒரு பழக்கும் இந்நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் உள்ளது. இங்கு பணியாளர்களுடன் நிறுவன தலைவரும் காலை உணவை சாப்பிடுவார்கள்.

 

 

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்

கிரேடிட் கார்டு மற்றும் நிதிச்சேவை நிறுவனமான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இப்பட்டியலில் 4வது இடத்தை அசத்தலாக பெற்றது.

இந்நிறுவனத்தில் 1 பெண் ஊழியருக்கு 1.4 சதவீதத்தில் மட்டுமே ஆண் பணியாளர்கள் உள்ளனர்.

 

மேரியாட் ஹோட்டல்ஸ்

மேரியாட் ஹோட்டல்ஸ்

உலக நாடுகளில் உயர்தர ஹோட்டகளை வைத்துள்ளது மேரியாட் ஹோட்டல்ஸ் நிறுவனம் இந்தியாவில் 6500 பணியாளர்களை கொண்டு மிகப்பெரிய அளவில் தனது வர்த்தகத்தை செய்து வருகிறது.

இந்நிறுவனம் 3 வது இடத்தை பிடித்துள்ளதுள்ளது.

 

இரண்டு இடங்கள்

இரண்டு இடங்கள்

முதல் இரண்டு இடங்களை பிடித்த நிறுவனங்களை பார்க்கும் முன் நீங்களே யூகம் செய்துக்கொள்ளங்கள். உங்களது கணிப்புகளை பார்போம்.

கூகிள் இந்தியா

கூகிள் இந்தியா

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான கூகிள் நிறுவனத்தின் இந்திய கிளை, டாப் 10 இந்திய நிறுவனங்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

உங்களது யூகம் சரியாக இருந்ததா?? இல்லையா கவலை வேண்டாம். மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது.

 

 

ஆர்எம்எஸ்ஐ

ஆர்எம்எஸ்ஐ

ஐடி சேவை நிறுவனமான ஆர்எம்எஸ்ஐ இப்படியலில் முதல் இடத்தை பெற்று சந்தையின் முன்னணி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்நிறுவனம் தனதி பணியாளர்களுக்கு அதிகளவிலான சம்பளத்தையும், சிறந்த சூழ்நிலையை அமைத்துக் கொடுத்துள்ளது. இதனால் இந்நிறுவம் முதல் இடத்தை பெற்று இன்று இந்தியாவை கலக்கியுள்ளது.

இந்த நிறுவனத்தை பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம் ஆகையால் உங்களது கணிப்புகள் பொய்யாகி இருக்கலாம்.

 

கிரேட் பிளேஸ் டூ வொர்க்

கிரேட் பிளேஸ் டூ வொர்க்

இந்தியாவில் இந்நிறுவனம் 20 துறைகளில் சுமார் 700 நிறுவனங்களை முழுமையாக ஆய்வு செய்ததுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's best companies to work for 2015

Over 700 organisations applied to be considered for a spot on the Best Workplaces List - India's Best Companies To Work For 2015. Great Place To Work® Institute follows one of world's most rigorous, credible and comprehensive methodologies to identify the organisations that make it to this prestigious list.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X