சபாஷ் 'ப்ளிப்கார்ட்': குழந்தைகளைத் தத்தெடுக்க பெண் ஊழியர்களுக்கு ரூ.50,000 வரை நிதியுதவி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவில் மகப்பேறு மற்றும் தந்தைமை (paternity) கட்டுப்பாடுகளுக்கு மத்திய அரசு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட், தனது பெண் ஊழியர்களுக்குக் குழந்தைகளைத் தத்தெடுக்க 50,000 வரை நிதியுதவி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

 

இச்செயல் இந்திய கார்பரேட் உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. இதைத் துவக்கிய ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு ஒரு சல்யூட்.

(பிளிப்கார்ட் நிறுவன செய்திகள்)

ப்ளிப்கார்ட்

ப்ளிப்கார்ட்

இந்தத் தத்தெடுப்புக் கொடுப்பனவு (adoption allowance) வருகிற ஜூலை 10ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இத்தொகையைக் குழந்தையைத் தத்தெடுக்கும் பணியில் சட்ட ரீதியாகவும், தரக நிறுவன செலவுகள் அல்லது பிற செலவுகளுக்கும் ஊழியர் பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

புதிய வீடு.. புதிய வாழ்க்கை..

புதிய வீடு.. புதிய வாழ்க்கை..

இந்தியாவில் கடந்த ஜனவரி - மார்ச் மாத காலத்தில் சுமார் 1,368 குழந்தைகளுக்குப் புதிய வீடு (தந்தை, தாய்) கிடைத்துள்ளதாக மத்திய தத்தெடுத்தல் அமைப்பு (CARA) தெரிவித்துள்ளது.

புதிய திட்டம் வகுத்த பிளிப்கார்ட்
 

புதிய திட்டம் வகுத்த பிளிப்கார்ட்

12 மாதத்திற்குக் குறைவான குழந்தையைத் தத்தெடுக்கும் பெண் ஊழியர்களுக்கு நிலையான மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும்.

1 வருடத்திற்கும் அதிக வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்கும் ஊழியருக்கு சம்பளத்துடன் 3 மாத முழு விடுமுறையும், 4 மாத வளைந்த தன்மை பணி நேரம் வேலை அளிக்கப்படும் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

 

ஆண் பணியார்களுக்கு

ஆண் பணியார்களுக்கு

குழந்தையைத் தத்தெடுக்கும் ஆண் பணியாளருக்கு சம்பளத்துடன் 6 மாத விடுமுறை, 4 மாத வளைந்த தன்மை பணி நேரம் வேலை செய்யும் சலுகையும் பிளிப்கார்ட் அளிக்கிறது.

கூடுதல் விடுமுறை

கூடுதல் விடுமுறை

இதற்குப் பின்னரும் ஊழியர்களுக்கு விடுமுறை தேவைப்பட்டால், சம்பளம் இல்லாமல் 3 மாதம் வரை விடுமுறை பெற்றுக்கொள்ள முடியும், உங்களது பணிக்கு நிறுவனம் உத்திரவாதம் அளிக்கிறது.

மருத்துவச் செலவுகள்

மருத்துவச் செலவுகள்

மேலும் பணியாளரின் பிரசவ செலவுகளையும் பிளிப்கார்ட் நிறுவன ஏற்க உள்ளது. சுக பிரசவமாக இருந்தால் 65,000 ரூபாய் வரையும், சி-செக்ஷன் ஆக இருந்தால் 80,000 ரூபாய் வரை நிறுவனம் சலுகை அளிக்கிறது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

இத்தகைய ஊக்கத்தை இந்திய நிறுவனங்கள் அனைத்தும் அளித்தால் இந்தியாவில் தந்தை தாயற்ற குழந்தைகள் இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கண்டிப்பாக குறையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart offers Rs. 50,000 allowance to employees for adoption

After relaxing maternity and paternity policies, e-commerce major Flipkart is now offering an allowance of Rs. 50,000 to employees looking to adopt children.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X