ஈரான் ஒப்பந்தம்: கச்சா எண்ணெய் விலை 4 டாலர் வரை குறைய வாய்ப்பு.. இந்தியாவிற்கு வந்த புது பிரச்சனை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வியன்னா: ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கத் தலைமையிலான 6 சக்திவாய்ந்த நாடுகளுடன் முக்கிய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை வியன்னா நகரில் கையெழுத்திட்டது.

இதற்கான பேச்சுவார்த்தை கடந்த 20 மாதங்களாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

10 வருடம்

10 வருடம்

இத்திட்டத்தின் படி அடுத்த 10 வருடங்களுக்கு இந்நாட்டின் அணுசக்தி பயன்பாடுகளைக் குறைத்து, உலக நாடுகளின் ஆய்வுகளுக்கு ஈரான் உட்படுத்தப்பட உள்ளது.

 ஈரான்

ஈரான்

அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக ஈரான் நாட்டின் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள வங்கி கணக்குகளை உலக நாடுகள் பரிங்கமாக முடக்கியது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தற்போது வங்கி கணக்குள் மீதுள்ள கட்டுப்பாடுகளை விலக்கவும், ராணுவ உதவியும் அளிக்கவும் உலக நாடுகள் ஒப்புக்கொண்டது. இதனால் இந்தியாவிற்கு என்ன பிரச்சனை?? தொடர்ந்து படியுங்கள்...

முடங்கிய கணக்குகள்

முடங்கிய கணக்குகள்

இதன் மூலம் உலக நாடுகள் முடக்கிய கணக்குளில் உள்ள 100 பில்லியன் டாலர் நிதி, எண்ணெய் உற்பத்திக்கான அனுமதி மற்றும் உலக நாடுகளின் ராணுவ உதவியும் ஈரான் பெற உள்ளது.

அடித்தது ஜாக்பாட்...

 

எண்ணெய் உற்பத்தி
 

எண்ணெய் உற்பத்தி

அடுத்த 10 ஆண்டுகளுக்குக் கூடுதல் நிதிதேவைக்காக, ஈரான் தேவைக்கு அதிகமாக இருக்கும் எண்ணெய் சந்தையில், தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

இதன் மூலம் இந்திய நிறுவனங்களான ஒஎன்ஜிசி, ஆயில் இந்தியா போன்றவை அதிகளவிலான லாபத்தைப் பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவில் டாலர் இருப்பு அளவு பாதிக்கப்பட உள்ளது. எப்படி?

நாணய பரிமாற்றம்

நாணய பரிமாற்றம்

இன்றைய தினம் முதல் இந்தியா, ஈரான் நாட்டிடம் இருந்து ரூபாய் நாணயத்தைக் கொண்டு எண்ணெய் இறக்குமதி செய்தது. தற்போது சர்வதேச வர்த்தகத்தில் ஈரான் திறந்துவிடப்பட்டுள்ளதால் இனி இந்தியா டாலரைக் கொண்டு இறக்கமதி செய்யும் சூழல் ஏற்படும்.

எண்ணெய் விலை சரிவு

எண்ணெய் விலை சரிவு

நேற்றைய வர்த்தகத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 1.07 டாலர் குறைந்து 56.78 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஈரான் தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால் 3 - 4 டாலர் வரை எண்ணெய் விலை குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை

இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் மும்பை பங்குச் சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று லாபத்தைச் சந்தித்து வருகிறது.

0.5 மில்லியன் பேரல்

0.5 மில்லியன் பேரல்

தற்போதைய நிலையைப் பார்க்கும்போது ஈரான் தனது நிதிதேவைக்காக அடுத்த ஆறு மாதத்தில் எண்ணெய் உற்பத்தி 0.5 மில்லியன் பேரல் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 சதவீத தேவை

10 சதவீத தேவை

இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியில் 10 சதவீத தேவையை ஈரான் நாட்டிடம் இருந்து பூர்த்திச் செய்கிறது.

Eurasia குரூப்

Eurasia குரூப்

இந்த ஒப்புந்தம் குறித்து Eurasia குரூப் தலைவர் ஐயன் பெர்மர் தனது சமுகவளைதளப் பக்கத்தில் கூறுகையில்,

1. இந்த ஒப்புந்தத்தின் மூலம் ஷியா ஈரான் மற்றும் சன்னி சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையையான போட்டி சூட்டுப்பிடிக்கும். இப்போட்டியில் ஈரான் வெற்றிபெற அதிகவாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

2. 10 வருட ஒப்புந்தத்தின் மூலம் சர்வதேச சந்தை வர்த்தகத்திற்கு ஈரான் தயாராகியுள்ளது.

3. ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிரான போராட்டத்தில் ஈரான் வலிமைபெறும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டார்.

 

இதுவும் சதி பண்ணுதே..

இதுவும் சதி பண்ணுதே..

சீன பொருளாதாரச் சரிவு இந்தியாவை இப்படியும் பாதிக்கும்!சீன பொருளாதாரச் சரிவு இந்தியாவை இப்படியும் பாதிக்கும்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big gains likely for Indian firms as Iran pumps more oil; crude prices may drop $4/barrel

Iran on Tuesday reached an agreement on its nuclear programme with six world powers led by the US, a development that could end a nearly four-decade-old standoff with the West.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X