30 நாட்கள் காத்திருங்கள்.. 10 மடங்கு பெரியதாக வருகிறேன்: ராகுல் யாதவ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தான் துவங்கிய ஹவுசிங்.காம் நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றப்பட்ட ராகுல் யாதவ், தனது பேஸ்புக் பக்கத்தில் 30 நாட்கள் காத்திருங்கள், 10 மடங்கு பெரியதாக வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுசிங்.காம் நிறுவனத்தின் சீஇஓவான ராகுல் யாதவ், முதலீட்டாளர்களுடனான வாக்குவாதத்தில் தான் துவங்கிய நிறுவனத்திலேயே இருந்து வெளியேற்றப்பட்டார்.

ராகுல் யாதவ் பதிவினால் ஹவுசிங்.காம் நிறுவனத்திற்கு டவுசர் கழன்று உள்ளது.

(சிறு முதலீட்டில் தொழில் தொடங்க ஆசையா? இதோ 8 அட்டகாசமான ஐடியாக்கள்!!)

பேஸ்புக் பதிவு

பேஸ்புக் பதிவு

பாதை எளிமையாக இருந்தால், உங்களுக்கான குழிகளைத் தோண்டிக்கொள்ளுங்கள். போட்டி இல்லையென்றால் புதிய இலக்கை வைத்தக்கொள்ளுங்கள், இப்படி உங்களையே நீங்கள் வலிமையாக்கிக் கொள்ளுங்கள்.

இம்முறை 100 மடங்கு பெரியதாக வரப்போகிறேன். (ஹவுசிங்.காம் 10மடங்கு)

30 நாட்கள் காத்திருங்கள்! எனத் தனது பதிவை முடித்தார்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

ராகுல் யாதவின் இந்தப் பதிவிற்குப் பின் ப்ளூகேப்.காம் என்னும் ஒரு நிறுவனம் தனது இணையதளத்தில் கிரிக்கெட் விரரான யுவராஜ் சிங் தனது யுவிகேன் நிறுவனத்தின் மூலம் ராகுல் யாதவின் புதிய நிறுவனமான நெக்ஸ்ட்ஹவுசிங்.காம் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாகக் கேளி செய்திருந்தது.

முதலீடு செய்தது உண்மையா?

யுவிகேன்

யுவிகேன்

இதனை எதிர்த்து யுவிகேன் நிறுவனம் ப்ளூகேப்.காம் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யும் பணியில் ஈட்டுப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியானது.

அடிச்சு கேட்டாலும் சொல்லக் கூடாது...

முதலீடு
 

முதலீடு

ராகுல் யாதவின் புதிய நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீட்டுச் செய்திகள் யாவும் உறுதியானது இல்லை. இதுகுறித்து ராகுல் யாதவ் அவர்களும் பதில் அளிக்கவில்லை.

ஹவுசிங்.காம்

ஹவுசிங்.காம்

இந்நிறுவனத்தின் மூலையாகச் செயல்பட்ட ராகுல் யாதவ் வெளியேறியதால் ஹவுசிங்.காம் தனது அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்ட போராடி வருகிறது.

ஐஐடி பாம்பே

ஐஐடி பாம்பே

26 வயதாகும் ராகுல் யாதவ் ஐஐடி பாம்பே கல்லூரியில் பட்டம் பெற்றவர். ஹவுசிங்.காம் நிறுவனம் ராகுல் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து 2012ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது.

தொடர் வளர்ச்சி

தொடர் வளர்ச்சி

மக்கள் மத்தியிலும், சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியிலும் ஹவுசிங்.காம் நிறுவனம் பிரபலம் அடைந்து மிகுந்த நம்பிக்கை அளித்தது. இதன் பின் இந்நிறுவனத்தின் வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்தது.

சண்டை

சண்டை

2015ஆம் ஆண்டுத் துவக்கத்தில் சிகோயா கேப்பிடல் நிறுவனத்தின் தலைவர் சைலேந்திர சிங்-கிடம் சண்டையிட்டதன் மூலம் ராகுல் செய்திகளில் இடம்பெற்றார்.

பணியாளர்களுக்கு 200 கோடி ரூபாய்

பணியாளர்களுக்கு 200 கோடி ரூபாய்

இதன் பின் சமீபத்தில் தனது 200 கோடி ரூபாய் சொத்துக்களையும் நிறுவன பணியாளர்களுக்கு அளிக்கப்போவதாக அறிவித்தார். இதனால் இந்தியா முழுவதும் இவர் கண் சிமிட்டும் நேரத்தில் பிரபலம் ஆனார்.

நெருக்கடி

நெருக்கடி

ராகுல் யாதவின் இத்தகைய நடவடிக்கையின் மூலம் நிறுவத்திற்கு முதலீட்டாளர்கள் வாயிலாகவும், வர்த்தக ரீதியில் பல பிரச்சனைகளை ஹவுசிங் .காம் சந்தித்தது. இதன் காரணமாகவே யாதவ் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்.

887 கோடி

887 கோடி

கடந்த 3 வருடத்தில் இந்நிறுவனம் சுமார் 139.5 பில்லியன் டாலர், ஆதாவது 887 கோடி ரூபாய் நிதிதிரட்டியுள்ளது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இந்நிறுவனத்தில் ஜப்பான் சாப்ட் பாங்க்,ஹீலியான் வென்சர் பார்ட்னர்ஸ், குவால்கம் பார்னர்ஸ் மற்றும் நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ் ஆகிய முதலீட்டு நிறுவனங்கள் ஹவுசிங்.காம் நிறுவனத்தில் துவக்க காலத்திலேயே துவங்கியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yadav says he will be back with new venture in a month

Rahul Yadav, a co-founder of online property search portal Housing.com, which fired him earlier this month, has announced on his Facebook page that he will be back in 30 days.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X