ரூ.6,000 கோடி வரி ஏய்ப்பு செய்த 900 நிறுவனங்களுக்குத் தடை: செபி திடீர் அறிவிப்பு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கப் பெரு நிறுவனங்கள், பணக்காரர்கள் தங்களது பிரதிநிதிகளாகப் பல புதிய நிறுவனங்களைத் திறந்து பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் சுமார் 5000 - 6,000 கோடி ரூபாய் வரையிலான வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளதாக செபி கண்டுபிடித்துள்ளது.

இவ்வாறு வரி ஏய்ப்பு செய்த 900 நிறுவனங்களுக்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, முதலீட்டுச் சந்தையில் இருந்து முற்றிலுமாகத் தடை செய்துள்ளது.

செபி

செபி

தடை செய்யப்பட்ட 900 நிறுவனங்கள் பற்றி முழு விபரங்களைச் செபி அமைப்பு வருமான வரித்துறையுடன் வழங்கியுள்ளது.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

இதனைக் கொண்டு வருமான வரித்துறை அனைத்து நிறுவனங்களின் மீதும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள உள்ளது.

பெயர் வெளியீடு

பெயர் வெளியீடு

தடை செய்யப்பட்ட 900 நிறுவனங்கள் பற்றி விபரங்களைச் செபி மற்றும் வருமான வரித்துறை ஆகிய இரு அமைப்புகளும் அளிக்க மறுத்துவிட்டது.

யு.கே. சின்ஹா

யு.கே. சின்ஹா

இதுகுறித்துச் செபி அமைப்பின் தலைவர் யு.கே. சின்ஹா கூறுகையில், பட்டியலிட்டுள்ள 900 நிறுவனங்கள் இந்திய சந்தையில் 6000 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது, மேலும் இவை அனைத்தும் உடனடியாகத் தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கறுப்புப் பணம் ஒழிப்பு

கறுப்புப் பணம் ஒழிப்பு


இந்தியாவில் கறுப்புப் பணம் ஒழிப்பை முழுமையாகக் கொண்டு வர ஒவ்வொரு துறையிலும் உள்ள இடர்களைத் தகர்த்து வருகிறோம், கூடிய விரைவில் முழுமையான நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் எனவும் சின்ஹா கூறினார்.

பண மோசடி

பண மோசடி

இந்தியாவில் இத்தகைய கருப்பு பண மோசடி ஐபிஓ மற்றும் ஜிடிஆர் எனப்படும் இரண்டாம் தர சந்தைகளில் அதிகளவில் நடைபெறுகிறது என அவர் தெரிவித்தார்.

மேலும் இத்தகைய மோசடிகளைச் செய்யப் பல குழுக்கள் இந்தியா முழுவதும் உள்ளது, அதனை உடைத்தெறிய சில காலம் தேவைப்படுவதாகச் சின்ஹா தெரிவித்தார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sebi busts billion-dollar 'tax evasion shops' in stock market

Suspecting tax evasion of at least Rs 5,000-6,000 crore, regulator Sebi has clamped down on a large number of organised syndicates who had set up 'shops' to convert black money into legitimate-looking funds through the stock market platform.
Story first published: Thursday, July 23, 2015, 14:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X