சம்பளத்தை வாரி இறைக்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள்.. கொண்டாட்டத்தில் பாலிவுட் ஹீரோக்கள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் இண்டர்நெட் சார்ந்த நிறுவனங்களில் அதிகளவிலான முதலீடு குவிந்து வருவதால், கிடைக்கும் பணத்தைத் தாறுமாறாகச் செலவு செய்து நிறுவனங்கள், தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்திற்காக முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுடன் இணைந்து வருகின்றனர்.

சாதாரண நிறுவனங்களை (Offline companies) ஒப்பிடும் போது இண்டர்நெட் சார்ந்த நிறுவனங்கள் இவர்களுக்கு 200 சதவீதம் அதிகச் சம்பளத்தை அளிக்கிறது.

நிறுவன வளர்ச்சி

நிறுவன வளர்ச்சி

நிறுவன விளம்பரத்திற்காகப் பெரிய ஸ்டார்களுடன் இணையும் போது, நிறுவனத்தின் வர்த்தகம் மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் 30 முதல் 200 சதவீதம் வரை வரிவாக்கம் அடைவதாகச் சந்தை ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கிறது.

4 மாதம்

4 மாதம்

கடந்த நான்கு மாதத்தில், நிறுவன விளம்பரத்திற்காக இண்டர்நெட் நிறுவனத்துடன் இணையும் பாலிவுட் ஸ்டார்களின் சம்பளம் மள மளவென உயர்ந்துள்ளதாகச் சந்தை ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கிறது.

வாங்க யார் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

 

 

அமிதாப் பச்சன்
 

அமிதாப் பச்சன்

பாலிவுட் உலகின் பிக் பி என அழைக்கப்படும் அமிதாப் பச்சன் அவர்களிடம் ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனமான சோமேட்டோ நிறுவனம் விளம்பரத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஏற்கனவே அமிதாப் பச்சன், ஃபஸ்ட்கஃரை என்னும் நிறுவனத்துடன் இணைந்துள்ளார். சோமேட்டோ நிறுவனத்துடன் இணைந்தால் ஆன்லைன் நிறுவனங்களில் இது 2வது. அதுமட்டும் அல்லாமல் இவரது சம்பளம் 80 சதவீதம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

 

அமீர் கான்

அமீர் கான்

சாதாரண நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக்கொள்ளும் போது அமீர் கான் அவர்களின் சம்பளம் 9 முதல் 10 கோடி ரூபாய், ஆனால் ஸ்னாப்டீல் இவருக்கும் 14-15 கோடி ரூபாய் அளித்துள்ளது.

ஷாருக் கான்

ஷாருக் கான்

yepme நிறுவனத்துடன் இணைந்துள்ள ஷாருக் கான் அவர்களின் சம்பளம் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இண்டர்நெட் அல்லாத நிறுவனத்தின் விளம்பர தூதராக இருக்கும்போது இவருக்கு 8-12 கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளமாகக் கிடைக்கிறது.

ஹிரித்திக் ரோஷன்

ஹிரித்திக் ரோஷன்

நடிப்பிலும், நடனத்திலும் கலக்கும் ஹிரித்திக் ரோஷன் ஆன்லைன் ஆடை விற்பனை நிறுவனமான மைன்திரா நிறுவனத்துடன் அறிப்படாத தொகைக்கு இணைந்துள்ளார்.

ஓஎல்எக்ஸ்

ஓஎல்எக்ஸ்

ஆன்லைன் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ் நிறுவனத்துடன் காமெடி ஷோ தொகுப்பாளர் கபில் சர்மா இணைந்துள்ளார். இதன் மூலம் இவரது சந்தையும் சரி, சம்பளமும் சரி பல மடங்கு உயர்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

பிபாஷா பாசு

பிபாஷா பாசு

ஈகாமர்ஸ் துறையில் துவக்க நிறுவனமான டிரன்க் லேபிள் நிறுவனத்தின் பிராண்ட் மாடலாகப் பிபாஷா பாசு அதிகப்படியான தொகைக்கு இணைந்துள்ளார்.

வித்யா பாலன் மற்றும் சோனம் கபூர்

வித்யா பாலன் மற்றும் சோனம் கபூர்

இந்நிலையில் சந்தையின் முன்னணி துவக்க நிறுவனங்கள் வித்யா பாலன் மற்றும் சோனம் கபூர் ஆகியோருடன் விளம்பரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இண்டர்நெட் நிறுவனங்கள்

இண்டர்நெட் நிறுவனங்கள்

இந்தியாவில் இண்டர்நெட் சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் குவிந்துள்ளதாலும், மக்கள் மத்தியில் அதிகளவிலான விழிப்புணர்வு உள்ளதாலும், இத்தருணத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது.

இதன் காரணமாகத் தான் விளம்பரத்தின் மீதான முதலீடும் செலவுகளும் இத்தகைய நிறுவனங்கள் அதிகரித்துள்ளது.

 

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ecommerce cos like Zomato, yepme offer 200% more than offline brands to sign up Bollywood celebs

Sundar Pichai has been named as the CEO of Google. Apart from Pichai, Indra Nooyi, Satya Nadella, Shantanu Narayan and Ajaypal Singh Banga have made India proud by heading giant companies.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X