ரூ.5,000 கோடி மதிப்புள்ள சிமெண்ட் உற்பத்தி ஆலைகளைக் கைப்பற்றியது பிர்லா கார்ப்பரேஷன்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரான்ஸ் நாட்டின் முன்னணி சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் உற்பத்தி நிறுவனமான லஃபராஜ் இந்திய கிளையின் இரண்டு சிமெண்ட் உற்பத்தி ஆலைகளைப் பிர்லா கார்பரேஷன் நிறுவனம் 5,000 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.

 

இதனால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 19 சதவீதம் வரை உயர்ந்தது.

5,000 கோடி ரூபாய்

5,000 கோடி ரூபாய்

லஃபராஜ் இந்தியா நிறுவனத்தின் ஜார்கண்ட் மற்றும் சட்டிஸ்கர் பகுதியில் உள்ள சிமெண்ட் உற்பத்தி ஆலைகளைப் பல நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் பிர்லா கார்ப் 5000 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது.

எதற்கு இந்த விற்பனை?

எதற்கு இந்த விற்பனை?

லஃபராஜ் நிறுவனம், உலகளவில் தனது வர்த்தகம் மற்றும் விற்பனையை ஹோல்சிம் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. இந்த இணைப்பிற்காகத் திட்ட முறைகளை வேகப்படுத்த இந்திய சந்தையில் உள்ள தனது சொத்துக்களை லஃபராஜ் நிறுவனம் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இவ்விரு தொழிற்சாலைகளையும் லஃபராஜ் நிறுவனம் பிர்லா கார்ப் நிறுவனத்திற்கு விற்கிறது.

உற்பத்தி

உற்பத்தி

இவ்விரு உற்பத்தி ஆலைகளிலும் வருடத்திற்கு 5.15 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

ஒப்பந்தம்
 

ஒப்பந்தம்

மேலும் இந்த ஒப்பந்தத்தை, பிர்லா நிறுவனத்தின் நடப்புக் கணக்கில் உள்ள சொத்துகள் மற்றும் தொடர் கடன் திட்டங்கள் மூலம் நிர்வாக ஒப்புதல்களுடன் கைப்பற்ற உள்ளதாகப் பிர்லா கார்பரேஷன் அறிவித்துள்ளது.

பிர்லா கார்ப்

பிர்லா கார்ப்

இந்நிறுவனம் இந்திய சந்தையில் பல வருடங்களாகச் சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் வருடத்திற்கு 15 மில்லியன் டாலர் சிமெண்ட் உற்பத்தி செய்து இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

பிர்லா

பிர்லா

பிர்லா நிறுவனத்தை பற்றி பிற செய்திகளை அறிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Birla Corp pips global giants to scoop up Lafarge India's eastern assets for Rs 5000 crore

Birla Corp shares surged as much as 17 per cent to Rs 534.90 on Monday after it announced the acquisition of two cement units from Lafarge India for an enterprise value of Rs 5,000 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X