6 வருடத்தில் இல்லாத வறட்சி இந்த ஆண்டு இந்தியாவில் உருவாகும்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் ஜூன் - செப்டம்பர் மாதங்களுக்கான பருவ மழை பற்றாக்குறை கணிப்புகள் 10 சதவீத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளதால், 6 வருடத்தில் காணாத வறட்சி இந்தியாவில் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வுத் துறை திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

 

இந்தியாவிற்கான எல் நினோ பருவநிலையும் அதிகளவில் குறைந்து காணப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.

விவசாயம் பாதிப்பு

விவசாயம் பாதிப்பு

இப்பருவமழை பற்றாக்குறையினால் ஜூன் - செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் மொத்த விவசாய நிலத்தில் 50% அதிகமான விளைநிலங்கள் மழை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படும்.

பணவீக்கம்

பணவீக்கம்

இதனால் இந்தியாவில் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு, உணவுப் பொருட்களின் விலைகள் அதிகளவில் உயர்வது மட்டும் அல்லாமல், உணவு பணவீக்கமும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய பொருளாதாரத்தில் 15 சதவீதம் விவசாயத்தைச் சார்ந்து உள்ளது. மேலும் இத்துறையை நம்பி 125 கோடி இந்திய மக்கள் உள்ளனர்.

வானிலை ஆய்வுத் துறை
 

வானிலை ஆய்வுத் துறை

17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் பருவமழையில் அதிகளவிலான மாற்றம் எதுமில்லாமல் நிலையான மழையைப் பதிவு செய்யும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

நிலையான மழை பதிவால் பருத்தி, எண்ணெய் விதைகள், நெல் மற்றும் தானியங்களின் உற்பத்தி அளவு பாதிக்காமல் உயர்வு நிலையை அடையும்.

கணிப்புகள்

கணிப்புகள்

கடந்த வாரம் ஜூன் - செப்டம்பர் மாத காலகட்டத்தில் இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை 9% மட்டுமே கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இதன் அளவு 10 சதவீதமாக உயர்ந்துள்ளது விவசாய உற்பத்தியில் அதிகப்படியான பாதிப்பை உருவாக்கும் எனத் தெரிகிறது.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fears of drought loom as monsoon rainfall deficit widens to 10%

Raising fears of the first drought in six years, the weather department on Monday said India's monsoon rainfall deficit had widened to 10% as a strengthening El Nino weather pattern trimmed rainfall.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X