டிசிஎஸ், ரிலையன்ஸ் நிறுவனங்களை ஓரம்கட்டிய இந்தியன் ஆயில் காரப்பரேஷன்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் லாபகரமான நிறுவனம் என்னும் பெயரை பெறச் சந்தையின் முன்னணி தனியார் நிறுவனங்கள் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கும் வேளையில் டிசிஎஸ், ரிலையன்ஸ் நிறுவனங்களை ஓரம்கட்டி இந்தியன் ஆயில் காரப்பரேஷன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

 

அதுவும் 118 கோடி ரூபாய் வித்தியாசத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைத் தட்டிச் சென்றது ஐஓசி.

செம போட்டி பாஸ்

செம போட்டி பாஸ்

இரு காலாண்டுகள் மந்தமாகச் செயல்பட்டதால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 23 வருடமாக நிலைத்திருத்த இடத்தை டிசிஎஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் கைப்பற்றியது.

இந்நிலையில் ஜூன் காலாண்டில் டிசிஎஸ், ரிலையன்ஸ் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் இடத்தில் ஐஓசி

முதல் இடத்தில் ஐஓசி

நாட்டின் முன்னணி நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை விடவும் 118 கோடி ரூபாய் அதிகமாக லாபம் பெற்று ஐஓசி முதல் இடத்தில் பெற்றுள்ளது.

7 வருட உயர்வு
 

7 வருட உயர்வு

ஜூன் மாத காலாண்டில் நிலவிய குறைவான எண்ணெய் விலை, மத்திய அரசிடம் இருந்து கிடைத்த முழுமையான தொகை ஆகியவை இந்த அரசு நிறுவனத்தை அதிகளவிலான லாபத்தைப் பெற உதவியது.

இக்காரணங்களால் ஐஓசி நிறுவனம் கடந்த வருத்தை விடவும் 2 மடங்கு அதிக லாபத்தைப் பெற்று, மொத்த லாப அளவை 6,436 கோடி ரூபாயாகப் பதிவு செய்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் 7 வருடங்களில் காணாத வளர்ச்சியை ஐஓசி இக்காலகட்டத்தில் கண்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இக்காலகட்டத்தில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தித் துறையில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டதால் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு 5,256 கோடி ரூபாயாகக் குறைந்தது.

டிசிஎஸ்

டிசிஎஸ்

இப்பட்டியலில் 25,668 கோடி ரூபாய் வருவாயுடன் ஐஓசி, ரிலையன்ஸ் நிறுவனங்களுக்குப் பிறகு டாடா குழுமத்தில் அதிக லாபத்தைத் தரும் டிசிஎஸ் நிறுவனம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL again loses most profitable tag, this time to IOC

Within two quarters of losing its 23-year-old reign as the country's most profitable company to TCS in the December quarter, Reliance Industries was again humbled in the June quarter, this time by Indian Oil.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X