இந்தியாவின் வளர்ச்சி அளவை 7 சதவீதமாகக் குறைத்தது மூடிஸ் அமைப்பு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை 10 சதவீதமாக அதிகரித்துள்ளதை அடுத்து நாட்டின் உற்பத்தி அளவு பாதிக்கும் எனக் கணக்கிட்டு மூடிஸ் முதலீட்டுச் சேவை அமைப்பு 2015ஆம் நிதியாண்டுக்கான உற்பத்தி அளவை மையமாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சி அளவை 7.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைத்துள்ளது.

 

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய பொருளாதாரத்தில் 15 சதவீதம் விவசாய உற்பத்தியாகும். இந்நிலையில் பருவமழை பற்றாக்குறையினால் விவசாயப் பொருட்களின் உற்பத்தி குறைந்தால், உணவு பொருட்களுக்கான பற்றாக்குறை அதிகரிக்கும், இதன் விலையும் அதிகரிக்கும். எனவே பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உணவு பணவீக்கம் உருவாகும்.

காலதாமதம்

காலதாமதம்

மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாலும், நாட்டின் வளர்ச்சி அளவு கணிப்புகளை 7 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மூடிஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

7.5 சதவீதம்

7.5 சதவீதம்

மேலும் இந்த அளவு மிகவும் குறைந்த காலகட்டத்தில் 7.5 சதவீதமாக மீண்டும் அதிகரிக்கப் பல வாய்ப்புகள் உள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மதிப்பீடு
 

மதிப்பீடு

இந்நிலையில் மூடிஸ் அமைப்பு இந்திய சந்தையை முதலீட்டுச் செய்யக் குறைவான மதிப்பீடான 'Baa3' அளித்துள்ளது.

பிற அமைப்புகள்

பிற அமைப்புகள்

இதைத் தொடர்ந்து உலக வங்கி, ஐஎம்எப் போன்ற பிற அமைப்புகளும் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை குறைக்க துவங்கும். இதனால் இந்தியா சந்தைக்கு கிடைக்கப்பெறும் அன்னிய முதலீட்டு அளவு பாதிக்கும்.

பருவமழை பற்றாக்குறை

பருவமழை பற்றாக்குறை

இந்தியாவில் ஜூன் - செப்டம்பர் மாதங்களுக்கான பருவ மழை பற்றாக்குறை கணிப்புகள் 10 சதவீத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளதால், 6 வருடத்தில் காணாத வறட்சி இந்தியாவில் உருவாகும்.

6 வருடத்தில் இல்லாத வறட்சி இந்த ஆண்டு இந்தியாவில் உருவாகும்!

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Moody's cuts India's 2015 growth forecast to around 7%

Moody's Investors Service cut its forecast for India's economic growth to around 7 percent this year from 7.5% because of lower-than-expected rainfalls in the ongoing monsoon season.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X