பனீஷ் மூர்த்தி நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர் நிதியுதவி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: ஐகேட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குநரான பனீஷ் மூர்த்தி, இந்நிறுவன பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவுகள் அளித்த குற்றத்திற்காக நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 

இதன் பின் தனது ஐகேட் நண்பர்கள் மற்றும் பெயர் வெளியிடப்படாத சிலரின் நிதியுதவியுடன் பிஎம் ஹெல்த் அண்ட் லைப் கேர் என்னும் நிறுவனத்தைத் துவங்கினார்.

12 மில்லியன் டாலர்

12 மில்லியன் டாலர்

இந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காகப் பிஎம் ஹெல்த் 10 முதல் 12 மில்லியன் டாலர் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிதியுதவியின் மூலம் இந்நிறுவனம் இந்தியாவில் 50 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

ஜிகி.காம்

ஜிகி.காம்

இதுவரை இந்நிறுவனம் சுமார் 5 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டி தனது பணிகளைச் செய்து வருகிறது. இந்நிலையில் பிஎம் ஹெல்த் அண்ட் கேர் நிறுவனம் சில வாரங்களுக்கு முன் ஜிகி.காம் என்னும் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஈகாமர்ஸ்

ஈகாமர்ஸ்

இதன் மூலம் வேதியியலாளர்கள் மற்றும் மருந்தாளர்கள் வாடிக்கையாளர்களை எளிமையாகத் தொடர்புகொள்ள முடியும். மேலும் இந்த இணையத் தளத்தில் வாடிக்கையாளரின் உடல் நிலம் குறித்த தகவல்களைச் சேகரித்து வைக்கவும் வசதிகள் உண்டு.

50 நகரங்கள்
 

50 நகரங்கள்

முதற்கட்டமாக இந்நிறுவன சேவை இந்தியாவின் 5 முக்கிய நகரங்களில் செயல்படுத்தப்படும், இதில் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகியவை அடங்கும். மேலும் அடுத்த 18 மாதத்திற்குள் இச்சேவை 50 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் பனீஷ் மூர்த்தித் தெரிவித்துள்ளார்.

பனீஷ் மூர்த்தி பற்றி பிற செய்திகளுக்கு..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Phaneesh Murthy's new venture to raise $10-12mn

Former iGate CEO Phaneesh Murthy founded PM Health and Life Care is planning to raise $10-12 million in Series A round of funding by the end of the calendar year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X