பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்த 'இஸ்ரோ' உடன் இணையும் ரயில்வே துறை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்துத் துறைகளில் ஒன்றான ரயில்வே துறையின் பாதுகாப்பு மற்றும் திறனை மேம்படுத்த, இத்துறை செயற்கைகோள் உதவியுடன் புகைப்படங்களை எடுக்க இந்திய ரயில்வே துறை 'ஐஎஸ்ஆர்ஓ' அமைப்புடன் இணைந்துள்ளது.

பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்த 'இஸ்ரோ' உடன் இணையும் ரயில்வே துறை!

இத்திட்டத்தில் ஐஎஸ்ஆர்ஓ மற்றும் ரயில்வே துறை ஜிபிஎஸ், ஜிஐஎஸ், ஆர்எஸ் எனப்படும் ரிமோட் சென்சிங் ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மேலும் இத்திட்டத்திற்கான முதலீடு குறித்த தகவல்களை ரயில்வே துறை தெரிவிக்கவில்லை. இப்புதிய திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வே துறை புதிய பரிமானத்தில் வளர்ச்சி அடைய உள்ளது.

பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்த 'இஸ்ரோ' உடன் இணையும் ரயில்வே துறை!

இப்புதிய திட்டத்தில் பணியாற்றும், ரயில்வே துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இத்திட்டத்தில் இஸ்ரோ உதவியுடன் இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே தடங்கள் மற்றும் ரயில்வே துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கட்டுமானம், நிலம், தொழிற்சாலை என அனைத்தையும் மிகப்பெரிய அளவில் ஜிஐஎஸ் மேப்பிங் செய்யப்பட உள்ளது எனத் கூறினார்.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கூடிய விரைவில் இந்திய ரயில்வே மற்றும் ஐஎஸ்ஆர்ஓ அமைப்புகள் கையெழுத்திடும் என இந்திய ரயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Railways to tie up with ISRO for enhanced safety

Indian Railways will join hands with ISRO to get online satellite images for improving safety and enhancing efficiency.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X