ஸ்மார்ட் சிட்டி மூலம் இந்திய மக்களுக்கு என்ன பயன்..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் வளர்ச்சி மிகுந்த மற்றும் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நகரங்களைத் தேர்ந்தெடுத்து மக்களின் வாழ்வியல் முறையை இன்றைய மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு ஈடு செய்யும் வகையில் மேம்படுத்தும் திட்டம் தான் இந்த ஸ்மார்ட்சிட்டி.

 

இத்திட்டத்தை மத்திய அரசு அதிகளவிலான கவனத்தைக் கொண்டு செயல்படுத்தி வரும் நிலையில், இத்தகைய திட்டத்தின் மூலம் இந்திய மக்களுக்கு என்ன பயன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம் வாருங்கள்...

மக்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது?

மக்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது?

சிறந்த நகரத் திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்நகரங்கள் இருப்பதால், குடிமக்களால் கஷ்டமில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

அரசு சேவைகள் இணைய வழியில் வேகமாகவும் மற்றும் குறைந்த செலவிலும் வழங்கப்படும். இந்த நகரத்தில் மிகச் சிறந்த வசதிகள் இருப்பதால், உள்ளூரின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இந்தத் திட்டங்கள் உற்பத்தித் திறன் மற்றும் சேவைகளை மேம்படுத்த வழிநடத்தும்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அல்லது தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அந்நகரத்தின் சேவைகளுக்கான தரம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவார்கள்.

 பிற சிறப்புகள்
 

பிற சிறப்புகள்

அரசாங்க சேவைகள், போக்குவரத்து மற்றும் அதன் நிர்வாகம், சக்தி, சுகாதாரப் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய துறைகளில் இந்த ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்பம் புகுத்தப்பட உள்ளது.

சாதாரண நகரங்களை விட வேகமாகச் செயல்பட்டு நடவடிக்கைகளை எடுக்கும் விதமாகவே ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும்.

இணைய நிர்வாகம் மற்றும் குடிமக்கள் சேவைகள்

இணைய நிர்வாகம் மற்றும் குடிமக்கள் சேவைகள்

இணைய நிர்வாகம் மற்றும் குடிமக்கள் சேவைகள் ஆகியனவும் கூட ஸ்மார்ட் சிட்டிகளால் பலன் பெறுகின்றன. பொதுவான தகவல்களைப் பெறுதல், புகார்களை நிரப்புதல் மற்றும் அதன் பின்வரும் சூழல்கள் ஆகியவை எளிதாகவும் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் மூலம் மிகவும் திறமையாகவும் செய்யப்படும்.

இணையவழி வணிகம்

இணையவழி வணிகம்

இணையவழி வணிகம் போன்றவை இணையச் சேவைகள் மூலம் மிகவும் வேகமானவையாக இருக்கும். இந்த நகரம் புத்திசாலித்தனமான முறையில் திட்டமிடப்பட்டுள்ளதால் நகரத்தின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கும். இதன் மூலம் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சக்தி

மின்சக்தி

எதிர்காலத்திற்காக நாம் சேமிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக மின்சக்தி உள்ளது. எனவே தான் ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சக்தியைச் சேமிப்பதற்காகச் சில சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் செலவாகும் மின்சக்தியின் அளவையும் மற்றும் அதற்கு ஆகும் செலவையும் காட்டும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்ஸ் என்ற மின்னணு சாதனங்கள் இந்நகரங்களில் பொருத்தப்பட்டிருக்கும்.

'கிரீன் பில்டிங்ஸ்'

'கிரீன் பில்டிங்ஸ்'

மின்சக்தியைச் சேமிக்கும் திட்டத்தில் மற்றொரு பகுதியாக இருப்பது பசுமை கட்டிடங்கள் எனப்படும் 'கிரீன் பில்டிங்ஸ்' உள்ளன. இந்தக் கட்டிடம் மற்றும் அதைப் பயன்படுத்தும் வழிமுறைகள் என அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு ஏற்றவையாகவும் மற்றும் கட்டிடம் இருக்கும் காலத்தில் வளங்களைத் திறமையாகப் பயன்படுத்தவும் செய்யுமாறு இருக்கின்றன.

புதுப்பிக்கத்தக்க மின்சக்திகள்

புதுப்பிக்கத்தக்க மின்சக்திகள்

நாட்டின் சில பகுதிகளில் காற்றாலை, சூரிய சக்தி மற்றும் பயோ-மாஸ் போன்ற புதுப்பிக்கத்தக்க மின்சக்திகளை சக்தி ஆதாரங்களாகப் பயன்படுத்த உள்ளனர். ஸ்மார்ட் சிட்டிகளிலும் இந்தக் கருத்து ஊக்குவிக்கப்படும்.

கழிவு மேலாண்மை

கழிவு மேலாண்மை

மக்கள் தொகை வேகமாக வெடித்து வரும் இந்நாட்களில் அதன் விளைவாகக் கழிவுகளின் அளவும் அதிகரித்து வருகிறது. எனவே தான் குடிமக்களுக்குப் பயனுள்ள வகையில் ஸ்மார்ட் சிட்டிகளில் கழிவு மேலாண்மைக்கும், தலையாய ஒரு இடம் கொடுக்கப் பட்டுள்ளது.

இங்குள்ள சில திட்டங்களின் மூலம் கழிவுகள் மூலம் மின்சக்தி மற்றும் எரிபொருள்கள் உருவாக்கப்படும். கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்தல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் கழிவுகளின் அளவை ஸ்மார்ட் சிட்டிகளில் குறைக்க முயற்சிகள் எடுக்கப்படும்.

குடிநீர்

குடிநீர்

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கும் குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் சரியான முறையில் அவற்றைப் பயன்படுத்துவதற்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

இந்நகரங்கள் மிகவும் நன்றாகத் திட்டமிடப்பட்டவையாக இருப்பதால், தண்ணீர் ஒழுகும் இடங்களை எளிதில் கண்டறிந்து அவற்றைச் சரி செய்திட முடியும். மேலும், நிலத்தடி நீர் மற்றும் நிலத்தின் மேல் உள்ள நீர் ஆகியவற்றின் தரத்தை பல்வேறு விதமான பகுப்பாய்வு முறைகளால் ஆராய்ந்து, குடிமக்கள் பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதும் ஸ்மார்ட் சிட்டிகளில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இயக்கம்

இயக்கம்

தற்போதைய சூழலில் நகர வாழ்க்கை முறையானது சுறுசுறுப்பாக இயக்கம் பெற்றிருக்கும் தெருக்களால் நிரம்பியுள்ளது. இந்நகரங்களின் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கியே ஓய்வு நேரங்களில் பெருமளவு கரைந்து விடுகிறது. எனவே தான் போக்குவரத்தினைச் சரியான முறையிலும் மற்றும் நெரிசலைக் குறைவாக இருக்குமாறு செய்து உயர் தரமான வாழ்க்கை முறையைக் கொடுக்க வேண்டும் என்பதை ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஒரு குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

வாகன நெரிசல்...

வாகன நெரிசல்...

வாகனம் நிறுத்தும் இடங்களைப் பெரியதாக மற்றும் சிறப்பானதாக உருவாக்கியும், இணைப்புகளைச் சிறப்பாக உருவாக்கியும் மற்றும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தச் செய்வதும் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாக உள்ளது.

பல்வேறு வழிமுறைகளிலான போக்குவரத்தை அறிமுகம் செய்தல், பொருட்களை ஒரே ஒப்பந்தத்தின் மூலம் எடுத்துச் செல்லுதல், ஆனால் இதற்காகக் குறைந்தபட்சம் இரண்டு மாறுபட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துதல் ஆகியவையும் ஸ்மார்ட் சிட்டியின் 'ஸ்மார்ட்' திட்டங்களில் ஒன்றாக உள்ளன.

ஸ்மார்ட் சிட்டியும்... இந்திய மக்களும்...

ஸ்மார்ட் சிட்டியும்... இந்திய மக்களும்...

இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கையும் முன்னேற்றம் அடையும் என்பது உறுதி! இதனைப் பராமரிப்பதில் குடிமக்களாகிய நம்முடைய பங்கும் உள்ளது என்பதை நினைவில் கொள்வோம்! வெல்வோம்!

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Benefits of Smart Cities to the Citizens

A smarty city is a smarter version of an urban city where digital technologies or information and communication technologies (ICT) are used to enhance quality and performance of the services available in the city.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X