அட... வங்கியில இத்தனை வகைகள் இருக்கா?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் பல்வேறு பயன்பாடுகளையும், இடத்தையும் பொருத்து பலவகையான வங்கிகள் செயல்பட்டு வருகிறது. புதிதாக உரிமம் வழங்கப்பட்டுள்ள வங்கிகள் இந்தியாவில் பல்வேறு வகைப்பட்ட நிலைகளில் பல பொறுப்புக்களுடனும் நோக்கத்துடனும் இந்திய வங்கி அமைப்பில் செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இந்தியாவில் 6 வகையான வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இதை முழுமையாகப் பார்ப்போம் வாருங்கள்..

நுகர்வோர் வங்கிகள் (கன்ஸ்யூமர்ஸ் பாங்க்)

நுகர்வோர் வங்கிகள் (கன்ஸ்யூமர்ஸ் பாங்க்)

ஏற்கனவே உள்ள வங்கிகளில் தற்போதைய புதுவரவு இந்த நுகர்வோர் வங்கிகள். இது போன்ற வங்கிகள் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் காணப்படுகிறது.

இதன் முக்கிய நோக்கம் நுகர்வோர்களுக்கு நீடித்து உழைக்கும் நுகர்வு பொருட்களான கார், டிவி, வாஷிங் மெஷின் ஆகியவற்றை வாங்குவதற்கான கடன்களை அளிப்பதாகும். இந்தக் கடனை நுகர்வோர்கள் தவணை முறையில் திரும்பச் செலுத்தலாம்.

பரிமாற்ற வங்கிகள் (எக்ஸ்சேஞ்ச் பாங்க்)

பரிமாற்ற வங்கிகள் (எக்ஸ்சேஞ்ச் பாங்க்)

ஹாங்காங் பாங்க், பாங்க் ஆஃப் டோக்கியோ மற்றும் பாங்க் ஆஃப் அமெரிக்கா ஆகியவை இந்தப் பரிமாற்ற அல்லது அயல் நாட்டு வங்கிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

இந்த வங்கிகளின் முக்கிய நோக்கம் அயல் நாட்டு வர்த்தகத்திற்கு நிதியுதவி செய்வது. இவை அடிப்படையில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பணத்தை அனுப்புவது, அயல் நாட்டுச் செலுத்துகை பில்களைத் தள்ளுபடி அடிப்படையில் செலுத்துவது (டிஸ்கவுண்டிங்), தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது விற்பது மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன.

கூட்டுறவு வங்கிகள்
 

கூட்டுறவு வங்கிகள்

இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் 1912-இன் கீழ் பதிவுசெய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் சிறிய விவசாயிகள், மாத சம்பளம் ஈட்டும் பணியாளர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ஆகியோருக்குக் கடன் அளிக்கின்றன.

இந்த வங்கிகள் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களிலும் அமைந்திருக்கும். இவற்றின் செயல்பாடுகள் பிற வர்த்தக வங்கிகளைப் போன்றே இருக்கும்.

வர்த்தக வங்கிகள்

வர்த்தக வங்கிகள்

இந்தியாவில், வர்த்தக வங்கிகள் நிறுவனங்கள் சட்டம் 1956-இன் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. 1969 ஆம் ஆண்டு இந்திய அரசு 14 வர்த்தக வங்கிகளை அரசுடைமையாக்கியது. வைப்புகள், கடன்கள் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான கொள்கைகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வர்த்தக வங்கிகள் தொழில் புரிவோருக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்டன.

இந்த வங்கிகள் பொது மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று அவற்றைத் தொழில் புரிவோர்க்குக் குறுகிய காலக் கடன்களை ரொக்கமாகவோ அல்லது கூடுதல் பற்று (ஓவர் ட்ராப்ட்) மூலமாகவோ வழங்குகின்றன.

இந்த வங்கிகள் காசோலை (செக்) வசூல், பில் பரிமாற்றம் மற்றும் பணச் செலுத்துகை போன்ற பல்வேறு சேவைகளைத் தருகின்றன.

மத்திய மற்றும் தேசிய வங்கிகள்

மத்திய மற்றும் தேசிய வங்கிகள்

மத்திய வங்கிகள் பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ளன. இந்தியாவில் இது ரிசர்வ் வங்கி எனவும், அமெரிக்காவில் ஃபெடரல் வங்கி எனவும் இங்கிலாந்தில் பாங்க் ஆஃப் இங்க்லேண்ட் எனவும் இயங்கி வருகிறது.

இந்த மத்திய வங்கிகள் பெரும்பாலும் மற்ற வங்கிகளுக்கு வங்கியாகச் செயல்படுகின்றன. காகித ரூபாய் தாள்கள் வெளியிடுவது, அரசிற்கு வங்கியாகச் செயல்படுவது, அன்னிய செலாவணியை நெறிமுறைப் படுத்துவது உள்ளிட்ட தனிச்சிறப்பு வாய்ந்த பணிகளை இவை செய்கின்றன. இந்த மத்திய வங்கிகள் இலாப நோக்கமற்றவை.

தொழில் மற்றும் வளர்ச்சி வங்கிகள்

தொழில் மற்றும் வளர்ச்சி வங்கிகள்

இந்த வங்கிகள் பெரும்பாலும் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலமாகவும், நீண்ட காலக் கடன்களை நிறுவனங்களுக்கு அளிப்பதன் மூலமாகவும் பணத்தைச் சேகரிக்கின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் தொழில் நிறுவனங்களுக்கு நீண்ட காலக் கடன் அளித்து அவற்றை விரிவு படுத்தவும் நவீனப் படுத்தவும் உதவுகின்றன.

இந்தியாவில், இதுபோன்ற வங்கிகள் சுதந்திரத்திற்குப் பின் பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இவற்றில் இந்திய தொழில் முதலீட்டுக்கழகம் (ஐஎஃப்சிஐ), இந்திய தொழில் நிதி மற்றும் முதலீட்டுக் கழகம் (ஐசிஐசிஐ) மற்றும் இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (ஐடிபிஐ) ஆகியவை முக்கியமானவை.

டாடாவின் கனவு

டாடாவின் கனவு

10 ஆண்டுகளில் டிசிஎஸ் மாதிரி 25 நிறுவனங்கள்: இது டாடா அதிபரின் புதிய கனவு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X