அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்புகளை இந்திய ஐடி நிறுவனங்கள் பறிக்கவில்லை.. நிர்மலா சீதாராமன் விளக்கம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: இந்திய ஐடி நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் சுமார் 4,11,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளதாk நாஸ்காம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2,000 கோடி டாலர் வரி...

2,000 கோடி டாலர் வரி...

இத்தகைய வேலைவாய்ப்புகள் மூலம் அமெரிக்க அரசு 2011-2015 வரையிலான காலகட்டத்தில் சுமார் 2,000 கோடி டாலரை வரியாக அமெரிக்க அரசு வருமானம் அடைந்துள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய ஐடி துறை

இந்திய ஐடி துறை

அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்திய ஐடி துறையின் பங்கு என்கிற தலைப்பில் அறிக்கையை வாஷிங்டனில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மேலும் நாஸ்காம் அளித்துள்ள தகவல்களின் படி இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. 4.11 லட்ச பணியாளர்களின் 3 லட்சம் பணியாளர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள், இதில் இந்தியர்களின் பங்கு மிகவும் குறைவே என நிர்மலா சீதாராமன் விவரித்தார்.

டிசிஎஸ், இன்போசிஸ்
 

டிசிஎஸ், இன்போசிஸ்

அமெரிக்காவின் இந்திய ஐடி நிறுவனங்களின் செயல்பாட்டில் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய - அமெரிக்கா...

இந்திய - அமெரிக்கா...

அமெரிக்கச் சந்தையில் இந்திய பணியாளர்களைப் பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட முடியும், அவர்களின் செலவு குறைகிறது, புதுமைகளைப் புகுத்த முடியும், புதியனவற்றை அறிமுகம் செய்ய முடியும், சந்தைப் பங்களிப்பை அதிகப்படுத்த முடியும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

200 கோடி டாலர் முதலீடு

200 கோடி டாலர் முதலீடு

இந்திய நிறுவனங்கள் 200 கோடி டாலர் வரை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்துள்ளன. பல அமெரிக்க மக்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது.

ஆர்.சந்திரசேகர்

ஆர்.சந்திரசேகர்

நாஸ்காம் அமைப்பின் தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறும்போது பார்சூன் 500 நிறுவனங்களில் 90 சதவீதத்துக்கு மேலான நிறுவனங்களுக்கு இந்திய ஐடி நிறுவனங்கள்தான் சேவையை வழங்குகின்றது எனத் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian IT companies support over 4 lakh jobs in US, says Nasscom

Indian IT companies have been playing a big role in creating jobs in the US besides being responsible for generating million of jobs at home.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X