'மேக் இன் இந்தியா' திட்டத்தின் 2வது அத்தியாயம் விரைவில் துவங்கும்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் உருவாக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டம் இந்தியா பொருளாதார வளர்ச்சியைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் இவ்வேளையில், மத்திய அரசிடம் இருந்து இத்திட்டம் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

(ரூ.640 கோடி அபராதத்துடன் '100 வருட' வர்த்தகத்தைக் கொண்டாடும் 'நெஸ்லே'..!)(ரூ.640 கோடி அபராதத்துடன் '100 வருட' வர்த்தகத்தைக் கொண்டாடும் 'நெஸ்லே'..!)

உற்பத்தித் துறை

உற்பத்தித் துறை

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்தியாவில் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் நோக்கில் மேக் இன் இந்தியா திட்டத்தின் 2வது பாகத்தை மேக் இன் இந்தியா 2.0 என வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா 1.0..

மேக் இன் இந்தியா 1.0..

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தில், இந்தியாவில் உற்பத்தித் துறையில் புதிய வர்த்தகம் மற்றும் வர்த்தக வரிவாக்கம் செய்துகொள்ள வழிமுறை மற்றும் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டது.

அப்போ மேக் இன் இந்தியா 2.0?

மேக் இன் இந்தியா 1.0..
 

மேக் இன் இந்தியா 1.0..

இன்னும் சில மாதங்களில் வெளியிட உள்ள மேக் இன் இந்தியா 2.0 திட்டத்தில் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கும், அதற்கான திறன்களை இந்தியாவிலும், இந்திய மக்களிடமும் வளர்க்க இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறையில் ஒரு புரட்சி...

உற்பத்தித் துறையில் ஒரு புரட்சி...

இப்புதிய திட்டம் வெறும் பிரச்சாரமாக மட்டும் இருக்காது, இந்திய மக்கள் மத்தியில் Skill இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மிகப்பெரிய அளவில் வளர உள்ளது. இதனால் உற்பத்தித் துறை மட்டும் அல்லாது மக்கள் மற்றும் நிறுவனங்களின் திறனும் உயரும்.

மேலும் இந்திய உற்பத்தித் துறை ராகெட் வேகத்தில் வளர மத்திய அரசு ஸ்டாட்அப் இந்தியா என்னும் திட்டத்தை அறிவிக்க உள்ளது. இத்திட்டம் கண்டிப்பாக இந்திய உற்பத்தித் துறையில் ஒரு புரட்சியை உண்டாக்கும் என மத்திய அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.

 

உதாரணம்..

உதாரணம்..

உலக நாடுகளில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகளின் உற்பத்திக்குத் தனி இடம் உண்டு, இதேபோல இந்தியாவின் உற்பத்தித் திறனும் உயர இத்திட்டங்கள் கண்டிப்பாக உதவும்.

இதற்காக டெல்லி அரசு, உலகில் உள்ள சிறந்த கல்வி முறைகள் மற்றும் பயிற்சிகளை இந்தியாவிற்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

 

மேக் இன் இந்தியா Mittelstand திட்டம்...

மேக் இன் இந்தியா Mittelstand திட்டம்...

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 30 சிறந்த நிறுவனங்களை இந்திய சந்தையில் முதலீடு செய்யும் நோக்கத்துடன் மத்திய அரசு சமீபத்தில் மேக் இன் இந்தியா Mittelstand திட்டத்தை நிறுவியது குறிப்பிடத்தக்கது.

Mittelstand என்றால் ஜெர்மானிய மொழியில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்று பொருள்.

 

அமெரிக்கா பயணம்

அமெரிக்கா பயணம்

பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) செல்ல உள்ள அமெரிக்கப் பயணத்தில் போர்டு, லாக்ஹீட் மார்டின், ஐபிஎம், பெப்சி கோ, டூபாண்ட், மெர்க் அண்ட் கோ, குவால்கம், மற்றும் அபாட் ஆகிய நிறுவன தலைவர்களை நேரடியாக நீயூயார்க் நகரில் சந்தித்துப் பேச உள்ளார்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

மேக் இன் இந்தியா 1.0 திட்டத்தின் மூலம் இந்தியாவில் ரயில்வே, பார்மா மற்றும் மருத்துவ உபகரணங்கள், இன்சூரன்ஸ் போன்ற முக்கியத் துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேக் இன் இந்தியா 2.0 திட்டத்தைக் கொண்டு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலம் இத்துறைகளை வளர்க்கத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

ஸ்டாட் அப் இந்தியா

ஸ்டாட் அப் இந்தியா

இத்திட்டத்தைத் தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு வாரியம் வடிவமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi's Dream Make in India scheme: version 2.0 to be launched soon

India is set to launch version 2.0 of Prime Minister Narendra Modi's flagship 'Make in India' initiative to turn around the nation's manufacturing sector.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X