பாலியல் குற்றங்களில் சிக்கிக் கொண்ட இந்திய சீஇஓக்கள்..!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பெண்கள் பாதுகாப்பு இந்தியாவில் ஒரு கவலைக்குரிய கேள்விக்குரிய நிலைமையை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக, பெண்களுக்கு எதிரான மிருகத்தனமான எண்ணிலடங்காத நடவடிக்கைகள் முக்கியச் செய்தியாக இடம் பிடித்துள்ளன. தெருக்களில் மற்றும் வீடுகளில் மட்டுமல்ல, தற்போது பணிபுரியும் இடங்களிலும் அவர்களுக்குப் பாதுகாப்புக் கேள்விக்குரியதாக மாறியுள்ளது என்பது மிகவும் வருந்தக்கூடிய விஷயம்.

 

ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரி உச்சக்கட்ட அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளார் என்பதுடன் அவர் நிறுவனத்தில் பணிபுரியும் எந்த ஒருவரையும் கேள்வி கேட்க முடியும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

ஆனால், சில நேரங்களில், அவர்களும் கூடத் தங்களுடைய தவறுகளால் மற்றவர்களின் கேள்விகளுக்கு ஆளாவது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த நிறுவனத்தின் மதிப்பையே கேள்விக்குறியாக்கும் அளவிற்கு சூழ்நிலைகள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளது. இப்படி நிறுவனத்தின் மரியாதையை ஏலம் விட 5 சீஇஓக்களை இப்போது பார்போம் வாருங்கள்..!

பனீஷ் மூர்த்தி, ஐகேட்

பனீஷ் மூர்த்தி, ஐகேட்

பனீஷ் மூர்த்தி முதன் முதலாக இன்போசிஸ் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப வல்லுனராகத் தனது வேலையைத் துவங்கினார். அந்த நிறுவனத்தின் ஒரு பொறுப்பான பணியாளராக இருந்தும் அவர் அந்த நிறுவனத்திலிருந்து 2003 ஆம் ஆண்டுச் சக பெண் பணியாளரிடம் விதிகளுக்குப் புறம்பாக நடந்ததால் வெளியேற நேரிட்டது. அவர் தன் மீது வைக்கப் பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், அவர் தனது பதவியிலிருந்து விலக நேரிட்டது.

ஐகேட்

ஐகேட்

அவர் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி Quintant Services என்ற நிறுவனத்தைத் துவங்கினார், பின்னர் ஐகேட் நிறுவனம் வாங்கப்பட்டு அதில் பனீஷ் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனத்திலும் சக பெண் ஊழியரை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றும்சாட்டப்பட்டது.

புதிய நிறுவனம்
 

புதிய நிறுவனம்

இதனால் இந்த நிறுவனத்திலும் இருந்து வெளியேறி தற்போது ஹெல்த்கேர் துறையில் புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.

பிரதீப் ஸ்ரீவஸ்தவா, ஐடியா செல்லுலர்

பிரதீப் ஸ்ரீவஸ்தவா, ஐடியா செல்லுலர்

ஐடியா நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு பிரதீப் ஸ்ரீவஸ்தவா, தன் மீது வைக்கப்பட்ட ஒரு பாலியல் புகார் காரணமாகப் பணியிலிருந்து விலக நேரிட்டது. அவர் அந்த நிறுவனத்தில் தலைமை மார்கெட்டிங் அதிகாரி ஆக இருந்தார்.

அந்த நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணிபுரியும் அன்விதா பிரபாகரா என்ற பெண் பிரதீப்பிற்கு எதிராக 2010 ஆம் ஆண்டு ஒரு புகார் அளித்தார். தன்னைவிட 25 வயது மூத்தவரான பிரதீப் தனக்கு ஆபாசம் நிறைந்த சற்றும் பொருந்தாத மின்னன்சல்களை அனுப்பியதாகத் தனது புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.

வீடியோகான்

வீடியோகான்

அன்விதா பிரதீப் தனக்கு அனுப்பிய அந்த விவரங்களைப் பிரின்ட் செய்து சமர்ப்பிக்கவும் செய்தார். எனினும் இந்த ஆதாரங்கள் போதுமானவையாக இல்லாததால் நீதிமன்றம் அவற்றைக் கொண்டு பிரதீப்பை குற்றவாளியாகக் கருத முடியாது எனக்கூறி புதிய விசாரணைக்கு உத்தரவிட்டது.

பிரதீப் பின்னர்ப் பதவியிலிருந்து விலகி வீடியோகான் நிறுவனத்தில் சேர்த்தார்.

டேவிட் தாவிதார், பென்குயின், கனடா

டேவிட் தாவிதார், பென்குயின், கனடா

தன் பட்டப்படிப்பிற்குப் பிறகு, டேவிட் தாவிதார் மும்பையில் செயல்பட்டு வந்த ஹிம்மத் என்ற புரட்சி நாளிதழில் பத்திரிக்கையாளராகச் சேர்ந்தார். அது மூடப்பட்ட பிறகு கீநோட் எனப்படும் மற்றுமொரு நாளிதழில் சேர்ந்தார். தாவிதார் மேலும் ஜென்டில்மேன் என்கிற நாளிதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அவர் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளதுடன் டெல்லியில் செயல்பட்டு வரும் அலெப் புக் கம்பெனி என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருந்தார்.

அவர் பென்குயின் நிறுவனத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டுச் சேர்ந்து அவருடைய தேர்ந்த அறிவின் மூலம் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக 2009 ஆம் ஆண்டுப் பதவி ஏற்றார்.

டேவிட் தாவிதார்

டேவிட் தாவிதார்

பின்னர் 2010 ஜூன் மாதம், லிசா ரண்டல் என்ற சக பெண் பணியாளர் அவருக்கு எதிராகப் பாலியல் புகாரைப் பதிவு செய்தார். இதனால் பென்குயின் நிறுவனத்தின் நன்மதிப்புக் கேள்விக்குரியதாகியது. இதனால் அவர் பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

லிசா 5,23,000 அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்டு அவர் மீது வழக்குத் தொடர்ந்தார். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு முடித்து வைக்கப்பட்டது.

சி வெங்கட்ரமணா, நால்கோ

சி வெங்கட்ரமணா, நால்கோ

சி வெங்கட்ரமணா தேசிய அலுமினிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியாக இருந்தபோது 2002 ஆம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு பெண் பணியாளரிடம் அவர் முறைகேடாக நடந்ததாக அவர் மீது பாலியல் வழக்குத் தொடரப்பட்டது.

தேவ் சாட்டர்ஜி

தேவ் சாட்டர்ஜி

தேவ் சாட்டர்ஜி, ரிடிப் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது நன்கு அறியப்பட்டவர். இவரும் தன் பணியின் போது பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

பெண்கள்

பெண்கள்

இவர்களைப் போல் பலர் பெண்களின் சகிப்பு தன்மையின் மூலம் வெளிச்சத்திற்கு வராமல் இன்னமும் தவறுகளைச் செய்து வருகின்றனர் என்பதே உண்மை.

முதல் இடத்தை பிடித்தது இந்தியா

முதல் இடத்தை பிடித்தது இந்தியா

அமெரிக்கா, சீனா நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா..!

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Famous Indian CEO Sex Scandals

There is no doubt that CEOs enjoy the highest level of power in any company and can also ask questions to anyone within the company. But, at times, even the CEOs have to answer others in the company for all the wrong reasons.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X