அதீத வறுமைக் கோட்டின் மக்கள் தொகை 10% ஆக சரிவு.. வரலாறு காணாத நிகழ்வு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு எனக் கருதப்படும் அளவிற்கு உலக மக்களின் வறுமைக் கோட்டின் அளவு 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என உலக வங்கி மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

 

ஆயினும் ஆப்பிரிக்காவில் இதன் அளவு இன்றும் கேள்விக்குறியாக உள்ளது எனவும் உலக வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.

ஜிம் யாங் கிம்

ஜிம் யாங் கிம்

உலக நாடுகளில் இதுவரை யாரும் கண்டிராத வகையில் உலக மக்களின் அதீத வறுமை என்னும் Extreme Poverty அளவு முதல் முறையாக இந்த வருடம் 10 சதவீதத்திற்கும் குறைவாகச் சரிய உள்ளது. இது ஒரு சரித்திர நிகழ்வு என உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் தெரிவித்தார்.

பெரு நாட்டு..

பெரு நாட்டு..

பெரு நாட்டின் லீமா நகரில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அமைப்புகள் வருகிற அக்டோபர் 9 -11 தேதிகளில் முக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்கிறது. இக்கூட்டத்தில் உலக வங்கி அதீத வறுமை அளவுகள் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

70.2 கோடி மக்கள்
 

70.2 கோடி மக்கள்

உலக வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 9.6 சதவீதம், அதாவது 70.2 கோடி மக்கள் அதீத வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாகவும், அவர்கள் ஆப்பிரிக்கா (Sub-Saharan Africa) மற்றும் ஆசிய பகுதிகளில் அதிகளவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

90.2 கோடியில் இருந்து சரிந்தது...

90.2 கோடியில் இருந்து சரிந்தது...

கடந்த 2012ஆம் ஆண்டு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களின் அளவு 90.2 கோடியாக இருந்தது, மக்கள் தொகையில் 13 சதவீதம், அதேபோல் 1999ஆம் ஆண்டில் இதன் அளவுகள் 29 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்

என்ன காரணம்

உலக நாடுகளில் Extreme Poverty என்ற அதீத வறுமையைச் சரிவிற்கு முக்கியக் காரணம் வளரும் நாடுகள் சந்தித்து வரும் அதீத பொருளாதார வளர்ச்சி (உதாரணமாக இந்தியா, வியட்நாம்) மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் செய்யப்பட்டு வரும் அதிகளவிலான முதலீடு ஆகியவை முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் உலக நாடுகளில் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகப் பல சமுக அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இவர்களின் உதவியின் மூலமாக அதீத வறுமைக் கோட்டின் அளவு 10%க்கும் குறைவாகச் சரிந்துள்ளது எனக் கிம் விவரித்தார்.

அளவீடுகள்

அளவீடுகள்

கடந்த வருட ஆய்வில் ஒரு சராசரி மனிதனின் தினசரி வருமானம் 1.25 அமெரிக்க டாலராக இருந்தால் அவர்களை Extreme Povertyயின் கீழ் சேர்க்கப்படும்.

ஆனால் இந்த வருடம் இதன் அளவு 1.90 டாலராக உயர்ந்துள்ளது இதன் மூலம் உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது தெரிகிறது.

2030ஆம் ஆண்டு இலக்கு..

2030ஆம் ஆண்டு இலக்கு..

உலக வங்கியின் இலக்கின் படி 2030ஆம் ஆண்டுக்குள் உலகில் அதீத வறுமைக் கோட்டின் கீழ் யாரும் இருக்கக் கூடாது என்பது தான்.

'ஐடி பசங்க'

'ஐடி பசங்க'

'ஐடி பசங்க' நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..?'ஐடி பசங்க' நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..?

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Extreme poverty to fall below 10%: World Bank

Extreme poverty will this year fall to less than 10 per cent of the global population for the first time, although there is still “great concern” for millions in Africa, a World Bank report said today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X