ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்துடன் இணைந்தார் 'பாபா ராம்தேவ்'..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய கலைகளில் ஒன்றான யோகாவிற்கு உலகின் பல நாடுகளிலும், இந்தியாவிலும் நிபுணர்கள் உள்ள போதிலும், இன்றளவில் யோகாவிற்குப் புகழ்பெற்றவர் என்றால் அது பாபா ராம்தேவ் தான்.

 

ராம்தேவ் தலைமையில் செயல்படும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் இந்திய மக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்க நாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ஃப்யூச்சர் குரூப் உடன் இணைந்தள்ளது.

இன்று முதல் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் அனைத்துப் பொருட்களும் பிக் பஜார் மற்றும் ஈசி டே தொடர் கடைகளில் கிடைக்கும்.

கிஷோர் பியானி

கிஷோர் பியானி

நாங்கள் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் உணவு கடைகளைப் பார்வையிட்டோம். இவர்களின் பொருட்கள் அனைத்தும் இந்திய மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக உள்ளது. மேலும் இவை சந்தையில் புரட்சியை ஏற்பதும் என நம்புகிறேன்.

இதனால் இந்தக் கூட்டணியில் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை எங்களது தொடர் கடைகளில் விற்க திட்டமிட்டுளோம் என ஃப்யூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானி தெரிவித்துள்ளார்.

1,000 கோடி ரூபாய் வர்த்தகம்

1,000 கோடி ரூபாய் வர்த்தகம்

இக்கூட்டணி அடுத்த 20 மாதத்தில் ரிஷிகேஷ் பகுதியில் அலுவலகத்தை அமைத்து சுமார் 1,000 கோடி ரூபாய் வர்த்தகத்தைப் பெற உள்ளது எனத் தெரிவித்தார்.

உணவு விடுதி மற்றும் 240 கடைகள்
 

உணவு விடுதி மற்றும் 240 கடைகள்

இரு நிறுவன கூட்டணியில் ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்தின் 240 கடைகளிலும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தயாரிப்புகள் கிடைக்கும். அதேபேல் பெங்களூரு மற்றும் ஹரித்வார் பகுதிகளிலும் உணவு கூடங்கள் அமைக்கப்பட உள்ளது.

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

எங்களது நிறுவன பொருட்களின் விற்பனையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்க ஒரு இந்திய நிறுவனத்தைத் தேடி வந்த நிலையில், ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

இந்தியா சில்லறை வர்த்தகத்தில் கிஷோர் பியானியை இவரை விடவும் பெரிய மனிதரைப் பார்க்க முடியாது. விற்பனை மட்டும் அல்லாது உற்பத்தியிலும் ஃப்யூச்சர் குரூப் உடன் பங்குகொள்ள விரும்புகிறோம் எனப் பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

நூடில்ஸ்

நூடில்ஸ்

இந்தியாவில் மேகி நூடில்ஸ் தடை செய்யப்பட்ட நிலையில், சந்தையில் வெற்றிடமான நூடில்ஸ் விற்பனையைக் கவர பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கடந்த மாதம் ஆட்டா நூடில்ஸ் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ramdev products to now sell at Big Bazaar, Easy Day outlets

Patanjali products will be available in all Future Group retail outlets in 240 cities. Future Group and Patanjali Ayurveda have food parks in Bangalore and Haridwar, respectively.
Story first published: Friday, October 9, 2015, 17:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X