உயிர் வாழத் தள்ளுபடி தான் ஓரே வழி.. ஈகாமர்ஸ் நிறுவனங்களின் உண்மை நிலை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்திய ஈகாமர்ஸ் சந்தையின் மூன்று முன்னணி நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்கள் பண்டிகைகள் முன்னிட்டு 80 சதவீதம் வரை தள்ளுபடி அளித்துச் சந்தையில் விதவிதமான பெயர்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சந்தை மற்றும் பொருளாதார வல்லுநர்கள், ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தள்ளுபடிகளைக் குறைத்து நிறுவனத்தின் நிதி நிலையைக் கவணிக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர். ஆனால் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் எங்களுக்கு வேறு வழி இல்லை என்று புலம்புகிறது.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்..
 

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்..

தள்ளுபடி விற்பனையின் முதல் நாளில் பல முக்கியத் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிரடியான சலுகையை அறிவித்து வாடிக்கையாளர்கள் கவர்ந்த பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனம், சந்தையில் நிலைத்திருக்க அதிரடியான சலுகைகள் அவசியமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

பிராண்டு நிறுவனங்கள்

பிராண்டு நிறுவனங்கள்

ஆனால் நிறுவனங்கள் கூறுகையில், ஈகாமர்ஸ் தளங்களில் சலுகையுடன் விற்கப்படும் பெரும்பாலான பொருட்கள் மார்கெட்டில் டிரென்ட் இல்லாத பொருட்கள் தான் (பழைய பொருட்கள்) அல்லது சந்தையில் புதிதாகக் குதிக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகள் தான் எனப் பிராண்ட் நிறுவனங்கள் கூறுகிறது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

ஈகாமர்ஸ் தளங்களில் மைக்ரோமாக்ஸ், ஓனிடா, பிபிஎல், மோட்டோரோலா போன்ற பல நிறுவனங்கள் இன்றும் தனது பழைய பொருட்களுக்குத் தள்ளுபடிகளுடன் விற்று வருகிறது. இதற்குக் காரணம் பழைய பொருட்களை விற்றால் போதும் என்ற நோக்கத்தில் விற்கப்படுபவை.

இதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், சாம்சங் கேலக்ஸி மற்றும் சோனி டிவிகள் அறிமுகச் சலுகையுடன் விற்பனை செய்தகிறது. இதற்கு முக்கியக் காரணம் விற்பனை இலக்கு தான். இந்நிறுவன கிளைகளில் கூட இதே சலுகையை நீங்கள் பெறலாம்.

செக் பண்ணி பாருங்க பாஸ்.

ஆடை மற்றும் இதர பொருட்கள்
 

ஆடை மற்றும் இதர பொருட்கள்

அதேபோல் உலகின் முன்னணி ஆடை நிறுவனங்கள் தங்களின் புதிய பொருட்களுக்கு அதிரடியான சலுகை அறிவிக்க முன் வருவதில்லை. குறிப்பாகக் கேப், யுஎஸ் போலோ, வரங்கலர் மற்றம் கால்வின் கிளன் நிறுவனங்கள் இதற்கு உதாரணம்.

விற்பனை அதிகரிப்பு

விற்பனை அதிகரிப்பு

இத்தகையைத் தள்ளுபடி விற்பனை காலங்களில் ஈகாமர்ஸ் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை சுமார் 1.2 மடங்கு அதிகமாக உள்ளது, இதனால் விற்பனை 5 மடங்கு உயர்கிறது என ஒரு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

இச்சலுகையில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களுமே சரியான விலையில், லாபத்துடனே ஈகாமர்ஸ் நிறுவனங்கள் விற்பனை செய்கிறது என இத்துறை வல்லுநர் தெரிவித்தார். (இதனால் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு எவ்விதமான நஷ்டமும் இல்லை)

ஷூ விற்பனை

ஷூ விற்பனை

பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்கள் ஷூ (காலணி) விற்பனைக்குச் சுமார் 60- 80 சதவீத சலுகையை அறிவித்துள்ளது.

இவை அனைத்தும் விற்பனை நிறுவனங்களின், சீசன் என்ட் சேல் தான். இத்தகைய விற்பனை எந்த ஒரு நிறுவனத்தின் சமீபத்திய பொருட்களுக்கு 60- 80 சதவீத சலுகை வழங்கப்படமாட்டாது.

வாடிக்கையாளர்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை.

கடைகளிலும் கிடைக்கும்..

கடைகளிலும் கிடைக்கும்..

முன்னணி நிறுவனங்கள் மற்றும் புதிய பொருட்களுக்கு ஈகாமர்ஸ் நிறுவனத்தில் சலுகை வழங்கப்பட்டால், அவை 4 -10 சதவீதம் வரையிலேயே இருக்கும். இது இந்நிறுவன கடைகளிலேயே நமக்குக் கிடைக்கும்.

விழாக்கால விற்பனை

விழாக்கால விற்பனை

இந்திய சந்தையில் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் விழாக்கால விற்பனையைச் செவ்வாய்க்கிழமை துவங்கிய நிலையில், ஸ்னாப்டீல் திங்கட்கிழமையே தனது விற்பனையைத் துவங்கியது.

உயிரும்.. தள்ளுபடியும்..

உயிரும்.. தள்ளுபடியும்..

இத்தகைய விழாக்காலம் மற்றும் சிறப்புத் தள்ளுபடி விற்பனையின் மூலம் தான் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் சந்தையிஸ் நிலைத்திருக்க வேண்டி நிலை உருவாகியுள்ள என முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இத்தகைய விற்பனையைக் குறைக்க முடியாது என்றும் உறுதியாகக் கூறுகிறது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை சில தொழில்நுட்ப கோளாறுகளோடு துவங்கினாலும் சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

நொடிக்கு 25 பொருட்கள் விற்பனை

நொடிக்கு 25 பொருட்கள் விற்பனை

முதல் நாள் விற்பனையில் முதல் 10 மணிநேரத்தில் 10 லட்சம் பொருட்கள் விற்பனை செய்து கலக்கியுள்ளது பிளிப்கார்ட். இந்தியா முழுவதும் சுமார் 6 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு ஒரு நொடிக்கு 25 பொருட்களைப் பிளிப்கார்ட் விற்பனை செய்து ஈகாமர்ஸ் சந்தையை அசத்தியுள்ளது.

16 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்

16 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்

இந்த விற்பனை அறிவிப்பின் காரணமாகக் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 16 லட்சம் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்துள்ளதாக இந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

அமேசான்

அமேசான்

செவ்வாய்க்கிழமை விற்பனை அமேசான் நிறுவனத்தின் வரலாறு சாதனை என்றும், கடந்த தீபாவளி பண்டிகை விற்பனையை ஒப்பிடுகையில், இது 4 மடங்கு அதிகம் என அமேசான் தெரிவித்துள்ளது.

விநியோகம்

விநியோகம்

ஈகாமர்ஸ் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகளவில் பெங்களூரு, டெல்லி, சென்னை, லூதியான, லக்னோ மற்றும் போப்பால் ஆகிய பகுதிகளில் இருப்பதால் இந்நிறுவனங்களின் விநியோக பணியாளர்கள் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் விநியோக பணியில் ஈட்டுப்பட்டுள்ள ஊழியர்களுக்குப் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் பிக்அப் மற்றும் டிராப் வசதிகளை அளித்து வருகிறது.

அதுமட்டும் அல்லாமல் 24 மணிநேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவையும் பிளிப்கார்ட் வைத்துள்ளது.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart, Amazon play it safe; focus on better financials instead of extravagant discounts

There's no better time for a bargain — India's three biggest online market places touted discounts of as much as 80% as they launched a festive season shopping. But what's the real story of ecommerce industry.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more