4 வருடத்தில் கார்ப்பரேட் வரியை 25% ஆகக் குறைக்க மத்திய அரசு முடிவு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் நிறுவனங்கள் சிறந்த வர்த்தக நிலையை அடையவும் தொடர்ந்து அதிகளவிலான வருவாய் பெற மத்திய அரசு 2017ஆம் நிதியாண்டில் கார்ப்பரேட் வரியை 1 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் கார்ப்பரேட் வரி விகிதத்தை அடுத்த 4 ஆண்டுகளில் 25 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளார்.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

இந்தக் கார்ப்பரேட் வரிக் குறைப்பு மூலம் நிறுவனங்கள் உலகச் சந்தைகளோடு போட்டி போடும் வகையில் வரி சூழலை கொண்டு வர மத்திய அரசு உறுதியளிப்பதாக அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

வரிக்குறைப்பு

வரிக்குறைப்பு

புனேயில் தொழிலதிபர்கள் மத்தியில் பேசிய அருண் ஜேட்லி, நேரடி வரி உலகளாவிய வகையில் போட்டி போடுவதாக இருக்க வேண்டும். அடுத்த 4 ஆண்டுகளுக்குள் கார்ப்பரேட் வரி 34 சதவீதத்திலிருந்து படிப்படியாக 25 சதவீதமாகக் குறைக்கப்படும்.

இது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும், இந்த வட்டிக் குறைப்பை நடவடிக்கை அமலாக்கம் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

முதலீடு

முதலீடு

நடப்புக் காலாண்டில் மத்திய அரசின் செலவுகள் அதிகரித்துள்ளது. முதலீடுகளை அதிகரிக்கத் தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல் பட முன்வரவேண்டும்.

வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை

வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை

நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாதங்களில் மறைமுக வருவாய் 35.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 3.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் திட்டமிட்ட செலவினத்தைக் குறைக்க அவசியமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Corporate tax rate may fall 1% in FY17 while bigger sops remain

Finance minister Arun Jaitley may start with just token measures to phase out corporate tax exemptions in the Budget for FY17 but may nevertheless drop the corporate tax rate by one percentage point.
Story first published: Monday, October 19, 2015, 17:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X