மோடி கையினால் துவங்கப்பட்ட புதிய வங்கி: 'ஐடிஎப்சி பாங்க்'

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த சில மாதங்களுக்கு முன் கடுமையான போட்டியின் நடுவில் ஐடிஎப்சி மற்றும் பந்தன் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி இந்தியாவில் முழுமையான வங்கி சேவை அளிக்க ஒப்புதல் அளித்தது. இதில் பந்தன் வங்கி கடந்த மாதம் முழுமையாக இயங்கத் துவங்கியது.

இந்நிலையில் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஐடிஎப்சி வங்கி வெற்றிகரமாகத் துவங்கப்பட்டது.

ஐடிஎப்சி வங்கி துவக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் இந்திய வங்கித்துறையில் நடந்த முக்கியமான வளர்ச்சிகளைப் பற்றி அதிகளவில் பேசினார்ய

இந்திய வங்கித்துறை

இந்திய வங்கித்துறை

மத்திய அரசு இந்திய வங்கித்துறையில் பல புதிய மாற்றங்களையும் வளர்ச்சி திட்டங்களையும் அறிவித்து வருகிறது. குறிப்பாகப் பொதுத்துறை வங்கிகளில் மறு முதலீட்டு நடவடிக்கை, உயர் அதிகாரிகளை நியமிக்கப் புதிய வழிமுறைகள், கருப்புப் பணத்தை ஒழிக்கக் காகிதமில்லா பணப் பரிமாற்ற சேவையே ஆகியவை வங்கித்துறை புதிய வளர்ச்சியை ஏற்படுத்த உள்ளது எனப் பிரதமர் மோடி பேசினார்.

மொபைல் பாங்கிங்

மொபைல் பாங்கிங்

இந்தியாவில் தற்போது தனியார் வங்கி மட்டும் அல்லாமல் பொதுத்துறை வங்கிகளும் தொழில்நுட்ப உதவியுடன் புதிய வளர்ச்சிகளை அடைந்து வருகிறது. இந்நிலையில் இண்டர்நெட் வங்கி சேவைகளையும் தாண்டி தற்போது மொபைல் வங்கிச் சேவை நாட்டில் பிரபலம் அடைந்து வருகிறது.

இது இத்துறைக்குக் கிடைத்த மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் வெற்றியாகும்.

 

காகித பணம்..

காகித பணம்..

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ரூபாய் தாள்களை அச்சடிக்க ஆகும் செலவுகளைக் குறைக்கப் பல வழிகளை ஆலோசனை செய்து வரும் நிலையில் மின்னணு பரிமாற்றம் மிகப்பெரிய அளவில் நன்மை அளித்து வருவதாகவும் மோடி தெரிவித்தார்.

முதலீடு

முதலீடு

மேலும் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் சுமார் 70,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதேவேளையில் வங்கிகளின் மிகப்பெரிய தலை வலியாக விளங்கும் வராக்கடன்களைத் தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிராம மக்கள்

கிராம மக்கள்

வங்கிகள் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கமே கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குச் சேவை புரியவே. வங்கித் துறையில் பல்வேறு புதிய மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன.

பொருளாதார நிலை

பொருளாதார நிலை

உலக அளவிலான பொருளாதார மந்த நிலையை இந்தியா சிறப்பாக எதிர்கொள்ளும் என்று உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Narendra Modi inaugurates IDFC Bank, talks of banking reforms

Prime Minister Narendra Modi on Monday said the government has initiated a series of banking reforms including re-capitalisation of PSU banks, change in rules for hiring top management and paper-less transactions to curb the black money menace.
Story first published: Tuesday, October 20, 2015, 12:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X