வர்த்தக விரிவாக்கம் செய்ய பணமில்லா 'மார்கெட்டிங்' உத்திகள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றளவில் பிசினெஸ் செய்ய ஆசைப்பட்டு அதற்கான பணம் இல்லாமல் தவிக்கும் பிரிச்சனை ஒருபுறம் இருந்தாலும், அவற்றை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் மார்கெட்டிங் வேலைக்கான செலவுகளைக் கணக்கிட்டால், தலையைச் சுற்றிவிடும்.

 

உங்கள் கையைக் கடிக்காமல் உங்கள் பிசினெஸை விரிவாக்கம் செய்யப் பல மார்கெட்டிங் உத்திகள் உள்ளது. இதுகுறித்து நாட்டின் முன்னணி நிதி நிறுவனம் செய்த ஆய்வில் பல வழிகளை வகுத்துள்ளது. சரி இது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.

ஒரு சமூக வட்டத்தை உருவாக்குங்கள்

ஒரு சமூக வட்டத்தை உருவாக்குங்கள்

மக்களை உங்கள் வியாபாரத்தை நோக்கி ஈர்க்க இணையத்தில் பயன்படும் உக்திகளில் முக்கியமானது சமூகத் தொடர்புகளை உருவாக்குவது. பேஸ்புக்கில் அல்லது லின்க்டின் வலைத்தளங்களில் குழுக்களை உருவாக்குவது உங்களுடைய சொந்த வலைத்தளத்தில் கருத்துக்களைக் கேட்பது அல்லது ஏன் சமூக வலைத்தளங்களில் உங்களைத் தொடருவோருடன் அவ்வப்போது உரையாடுவதன் மூலமும் இதைச் செய்யமுடியும்.

தொழில்முறை கூட்டுமுயற்சி

தொழில்முறை கூட்டுமுயற்சி

உங்கள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மற்றொரு வர்த்தக நிறுவனத்துடன் இணைந்து புதிய முயற்சிகளில் இறங்குங்கள். இதை நேரடியாக ஒரு சிறப்பு நிகழ்ச்சி மூலம் உள்ளூரிலோ அல்லது ஆன்லைனில் வெபினார் அல்லது இலவசப் பரிசுகள் அளிப்பு ஆகியவை மூலமாகவோ செய்யலாம். நீங்கள் தனியாகச் செய்யும் முயற்சியை விட மற்றவருடன் இணைந்து செய்யும் முயற்சி இருமடங்கு பலனையும் விளம்பரத்தையும் தரும். உங்களுடைய வர்த்தகத்துடன் தொடர்புடைய மற்றொருவருடன் நீங்கள் கூட்டு வைக்கும்போது உங்களுக்கு முற்றிலும் புதிய பார்வையாளர்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது போன்ற வாய்ப்புகளுக்குப் பலர் பெருமளவில் செலவழிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

வர்த்தக விருதுகள்
 

வர்த்தக விருதுகள்

பெரும்பாலான நிறுவனங்கள் வர்த்தக விருதுகளை வழங்குகின்றன. அவற்றை வெல்வதன் மூலம் அந்த விருது முத்திரைகளை உங்கள் இணையத் தளத்தில் நீங்கள் பார்வைக்கு வைக்கலாம். இந்த விருதுகள் உங்கள் நன்மதிப்பை உயர்த்தி உங்கள் விற்பனை அதிகரிக்க வழி செய்யும். உங்கள் வர்த்தகம் தொடர்பான தொழிலில் அதிகம் இது போன்ற விருதுகள் இல்லையெனில் நீங்களே ஒன்றைத் தொடங்கலாமே? இதன் மூலம் மற்றவர்கள் உங்கள் விருதைப் பெற முனைவதுடன் பிற நிறுவனங்களின் பார்வையில் நீங்கள் பிரபலமாக வாய்ப்புகள் உண்டு. இதனால் வணிகத் தொடர்புகள் அதிகரிக்கும்.

கொரில்லா மார்கெடிங்

கொரில்லா மார்கெடிங்

கொரில்லா மார்கெடிங் என்பது உங்கள் நிதி ஒதுக்கீடுகளில் ஆக்கத் திறனை அதிகரிப்பதுடன் இதில் பயன்படுத்தப்படும் உக்திகள் மிகவும் மலிவானதாகவும் எளிதானதாகவும் இருக்கும் குறிப்பாக உள்ளூரில் இதை நீங்கள் மேற்கொள்ளும்போது.

உங்கள் ட்விட்டர் பக்கங்கள், உபயோகமற்ற உங்கள் இணையமுகப்பு ஆகியவற்றை ஓவியங்கள் அல்லது வடிவமைப்புகளால் அலங்கரிப்பதால் உங்கள் இணையதளத்தைப் பார்வையிடுவோர் ஒரு முறைக்கு இருமுறை காண முனைவார்கள். இதில் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு அதிக இடம் நிறைய உண்டு என்பதுடன் நீங்கள் அதிகம் செலவும் செய்ய வேண்டியதில்லை.

 

ஈமெயில் மார்கெடிங்

ஈமெயில் மார்கெடிங்

உங்கள் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் அவர்களுடனான உறவை பலப்படுத்தவும் ஈமெயில் மார்கெடிங் ஒரு நல்ல கருவியாகத் திகழ்கிறது. புதிதாக உங்கள் இணையதளத்தைப் பார்வையிடுபவர்களை உங்களுடைய வர்த்தகச் செய்திகளைப் பெற்றுக்கொள்ள விவரப்பதிவு செய்யச் சொல்லுங்கள். இதற்காகக் கூடுதல் தகவல்களை அவர்களுக்கு இலவசமாகத் தரலாம்.

மெதுவாக அவர்களை ஈமெயில் மூலம் பழக்கிக் கொண்டு அவர்களைக் கட்டண வாடிக்கையாளர்களாக மாறத் தயாராக்குங்கள். உங்களுடைய ஈமெயில் மூலமான விளம்பரங்களைத் தொடங்க மெயில்சிம் போன்ற இலவச ஈமெயில் மார்கெடிங் சேவையைக் கொடுங்கள்.

 

கண்டென்ட் மார்கெடிங் (விவர சந்தையிடல்)

கண்டென்ட் மார்கெடிங் (விவர சந்தையிடல்)

கண்டென்ட் மார்கெடிங் பலகாலமாக இருந்தாலும் தற்போது அதிகரித்துவரும் பரிமாற்ற இணையதளங்கள் மூலமாக விவரம் (கண்டென்ட்) பல்வேறு சந்தைப் படுத்தும் முயற்சிகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் ஒரு விவரமானது பல்வேறு பரிமாணங்களில் உபயோகப்படக்கூடியது.

உதாரணமாக, ஒரு ப்ளாக் போஸ்டை உருவாக்கி அதனைச் சமூகவலைத்தளத்தில் பதிந்து அதன் தொடர்பை உங்கள் பதிவுகளோடு தொடர்புப்படுத்துங்கள். அல்லது பார்ப்பதற்கு ஆர்வமூட்டக்கூடிய ஒரு வீடியோ பதிவையோ அல்லது படத்தையோ கூடப் இதற்குப் பயன்படுத்தலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Low Budget Online Business Ideas

Planning to start a business but don’t have sufficient bucks to spend on your business? No worries, because there are plenty of marketing tactics you can make use of that won’t blow your budget. Marketing is one area where there are a lot of opportunities to cut costs in a small business.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X