'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு பேஸ்புக் நிதியுதவி.. பிஎஸ்என்எல் உடன் புதிய கூட்டணி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாகச் சமுக வலைத்தள ஜாம்பவான் பேஸ்புக் நிறுவனம், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் 100 வை-ஃபை ஹாட்ஸ்பாட்களை அமைக்கும் திட்டத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது.

 

100 வை-ஃபை ஹாட்ஸ்பாட்

100 வை-ஃபை ஹாட்ஸ்பாட்

இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு மற்றும் தென் இந்தியாவில் 100 வை-ஃபை ஹாட்ஸ்பாட்களை அமைக்கும் பணியில் மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இறங்கியுள்ளது.

5 கோடி ரூபாய்

5 கோடி ரூபாய்

இத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம், 100 வை-ஃபை ஹாட்ஸ்பாட்களை அமைக்கும் திட்டத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

 பிஎஸ்என்எல்
 

பிஎஸ்என்எல்

இதுக்குறித்துப் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், இந்தியாவில் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைக்கப்படும் 100 வை-ஃபை ஹாட்ஸ்பாட்களின் பேண்டுவித் கட்டணத்திற்காக வருடத்திற்கு 5 கோடி ரூபாயை அளவிலான நிதியுதவியை அளிக்கப் பேஸ்புக் ஒப்புதல் அளித்துள்ளது என அவர் தெரிவித்தார்.

அதாவது வருடத்திற்கு ஒரு ஹாட்ஸ்பாடிற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்த 5 கோடி ரூபாய் நிதியுதவியைப் பேஸ்புக் அளிக்க உள்ளது.

 

ஹாட்ஸ்பாட்

ஹாட்ஸ்பாட்

இந்தியாவில் ஹாட்ஸ்பாட் அமைக்கும் பணியில் Quad Zen ஈடுபட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஏற்கனவே 25 ஹாட்ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

மேலும் மத்திய அமைச்சர்கள் சிலரும் இந்திய கிராமங்களில் ஹாட்ஸ்பாட் அமைக்கும் திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்தியாவில் அடுத்த 5 வருடத்திற்குள் Quad Zen மற்றும் Trimax நிறுவனங்களுடன் இணைந்து சுமார் 2,500 ஹாட்ஸ்பாட்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook to help BSNL set up 100 wi-fi hotspots in rural India

Boosting the Government’s ambitious ‘Digital India’ drive, social media giant Facebook has come forward to facilitate state-run BSNL in setting up 100 wi-fi sites in rural areas of western and southern India.
Story first published: Monday, November 2, 2015, 11:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X