லண்டன் பங்குச் சந்தையில் பத்திரங்களை வெளியிட நாங்க ரெடி.. எச்டிஎப்சி, யெஸ் வங்கி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமான எச்டிஎப்சி மற்றும் புதுமை வங்கிச் சேவைகளை அளித்து வரும் யெஸ் வங்கி ஆகியவை லண்டன் பங்குச்சந்தையில் ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

யெஸ் வங்கி

யெஸ் வங்கி

லண்டன் பங்குச்சந்தையில் கிரீன் பாண்ட்ஸ் எனப்படும் முதலீட்டுப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சுமார் 500 மில்லியன் டலார் நிதியைத் திரட்ட யெஸ் வங்கி முடிவு செய்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

இந்த நிதியை இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க யெஸ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்தப் பத்திர வெளியீட்டை டிசம்பர் 2016இல் செய்ய யெஸ் வங்கி முடிவு செய்துள்ளது.

மூதலதனம்

மூதலதனம்

வங்கி மூதலதனத்தை அதிகரிக்க 1 பில்லியன் டாலர் வரையிலான பங்கு மூதலதனத்தைத் திரட்டவும் யெஸ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் யெஸ் வங்கி மற்றும் லண்டன் பங்குச்சந்தை கையெழுத்திட்டுள்ளது.

எச்டிஎப்சி
 

எச்டிஎப்சி

இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் நிதி நிறுவனமான எச்டிஎப்சி மசாலா பாண்ட்ஸ் எனப்படும் வெளிநாடுகளில் வெளியிடப்படும் ரூபாய் மதிப்பிலான முதலீட்டுப் பத்திரங்களை வெளியிட லண்டன் பங்குச்சந்தையுடன் கையெழுத்திட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் எச்டிஎப்சி 750 மில்லியன் டாலர் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

மேலும் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், முதல் முறையாகப் பவுண்ட் மதிப்பிலான முதலீட்டுப் பத்திரங்களை லண்டன் பங்குச்சந்தையில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் சுமார் 5,000 கோடி ரூபாய் அதாவது 500 மில்லியன் பவுண்ட் நிதியைத் திரட்ட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC, YES Bank to list bonds on LSE

The country’s largest mortgage lender Housing Development and Finance Corporation and new generation private sector lender YES Bank are planning to list their bond issuances in London.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X