ஜப்பான் சந்தையைப் பிடிக்க நோவார்டீஸ் நிறுவனத்துடன் புதிய டீல்: சன் பார்மா

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய மருந்து விற்பனை மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சன் பார்மா, சுவிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்டீஸ் போர்போலியோவில் உள்ள சில பழைய பிராண்டுகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

ஜப்பான் சந்தையில் இருக்கும் நோவார்டீஸ் நிறுவனத்தின் சில பழைய பாரண்டு மருந்துகளைச் சன் பார்மா நிறுவனம் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சன் பார்மா, ஜப்பான் சந்தையில் புதிய வர்த்தகத்தையும் சந்தையும் பெற உள்ளது.

ஜப்பான் சந்தையைப் பிடிக்க நோவார்டீஸ் நிறுவனத்துடன் புதிய டீல்: சன் பார்மா

இந்த டீலின் மொத்த மதிப்பு 300 மில்லியன் டாலர் (2,000 கோடி ரூபாய்) எனச் சன் பார்மா நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இந்த டீல் வெற்றிகரமான முறையில் முடிவடைந்தால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கான மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் சன் பார்மா நிறுவனம் உலகளவில் 2வது இடத்தைப் பிடிக்கும்.

ஜப்பான் சந்தையைப் பிடிக்க நோவார்டீஸ் நிறுவனத்துடன் புதிய டீல்: சன் பார்மா

அமெரிக்காவிற்கு நிகராக மருந்து விற்பனை சந்தையில் ஜப்பான் உள்ளது. ஜப்பான் ஒரு வருடத்திற்கு 90 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்து வர்த்தகத்தைச் செய்கிறது.

மேலும் இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் பிராண்டு கைப்பற்றும் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள்ள முடிவடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் நோவார்டீஸ் நிறுவனம் இதுகுறித்து எந்த விதமான பதில்களும் தகவல்களும் அளிக்கவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 2,000 crore Novartis deal to help Sun Pharma rise in Japan

Sun Pharmaceutical, India's largest drugmaker by sales and market value, is in advanced talks to buy a portion of Swiss drugmaker Novartis' portfolio of old branded products in Japan in a deal estimated at $300 million (about Rs 2,000 crore).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?