விஜய் மல்லையா ஒரு 'நாணயமற்றவர்'.. ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா அதிரடி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை:கடந்த சில வாரங்களாகத் தலைப்புச் செய்திகளில் இடம்பெற லீவு போட்டு இருந்த விஜய் மல்லையா மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட 7,000 கோடி ரூபாய் கடனை திருப்பி அளிக்க முடியாத காரணத்தால் இந்நிறுவன தலைவர் விஜய் மல்லையா அவர்களை நாணயமற்றவர் என அறிவித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

விஜய் மல்லையா தலைமையில் இயங்கி வந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட 7000 கோடி ரூபாய் கடனை இந்நிறுவனம் முறைவர செலுத்த தவறியது. இதனால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா விஜய் மல்லையா அவர்களையும், மூடப்பட்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான யுனைடெட் ப்ரூவரீஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தையும் ‘wilful defaulter' நாணயமற்றவர் என அறிவித்துள்ளது.

வழக்கு

வழக்கு

விஜய் மல்லையாவிற்குப் பதிலாகத் தனது வழக்கறிஞர் கோர்ட்டில் ஆஜராகவும், வாதாடவும் வேண்டுவதாக மல்லையா மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனு அளித்தார், இதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

இது ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு முரண்பாடாக்க உள்ளது என் எஸ்பிஐ வங்கி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இத்தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்தது. இதுவும் விஜய் மல்லையாவிற்குச் சாகமாக அமைந்தது.

ஆயினும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட 7000 கோடி ரூபாய் கடனுக்கான விசாரணையில் வங்கி தரப்புக்கும், நீதிமன்றத்திற்கு மல்லையாவின் வழக்கறிஞர் வாதம் எடுபடவில்லை இதனால் வழக்கு வங்கித் தரப்புச் சாதகமாக அமைந்துள்ளது.

 

நாணயமற்றவர்
 

நாணயமற்றவர்

இவ்வழக்கில் வெற்றிபெற்ற எஸ்பிஐ வங்கி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன தலைவர் விஜய் மல்லையா மற்றும் அதன் ஹோல்டிங் நிறுவனமான யுனைடெட் ப்ரூவரீஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தையும் நாணயமற்றதாக அறிவித்துள்ளது.

இதனால் இந்நிறுவனத்திற்குக் கடன் அளித்த 17 நிறுவனங்களும் மல்லையா மற்றும் யுனைடெட் ப்ரூவரீஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தை நாணயமற்றதாக அறிவித்துள்ளது.

விஜய் மல்லையா ஒரு விஜய் மல்லையா ஒரு "நாணயமற்றவர்"!! யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா

விஜய் மல்லையா விஜய் மல்லையா "நாணயமற்றவர் அல்ல"!! கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவிப்பு..

திரும்பவும் வழக்கு

திரும்பவும் வழக்கு

ஆனால் வங்கித் துறை வல்லுநர்கள் கூறுகையில், விஜய் மல்லையா எஸ்பிஐ வங்கியின் இத்தகைய செயலை எதிர்த்து அறிவிப்புக்குத் தற்காலிக தடை கோரியும் இத்தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்

17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்

முடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை அளித்துள்ளது.

எஸ்பிஐ தலைமை

எஸ்பிஐ தலைமை

இந்நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அளித்த கடனை தொகையைத் திரும்பப்பெற இந்நிறுவன சொத்துக்களை ஏலம் விட எஸ்பிஐ தலைமையிலான 17 வங்கிக் குழுமங்கள் முடிவு செய்தது.

இதன்பிடி முதற்கட்டமாக மும்பையில் உள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமையக கட்டிடத்தை100 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. தற்போது இரண்டாம் கட் வேலைகளில் இக்கூட்டணி இறங்கியுள்ளது.

கிங்பிஷர் நிறுவன சொத்துக்களை கைப்பற்றியது எஸ்பிஐ தலைமையிலான குழு!!கிங்பிஷர் நிறுவன சொத்துக்களை கைப்பற்றியது எஸ்பிஐ தலைமையிலான குழு!!

எஸ்பிஐ மற்றும் பிற வங்கிகள்..

எஸ்பிஐ மற்றும் பிற வங்கிகள்..

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எஸ்பிஐ வங்கி மட்டும் 1,600 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது, பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கிகள் தலா 800 கோடி ரூபாய், பாங்க் ஆஃப் இந்தியா ரூ.650 கோடி, பாங்க் ஆஃ பரோடா ரூ.550 கோடி. சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா 410 கோடி ரூபாய், யூகோ வங்கி ரூ.320 கோடி, கார்பரேஷன் வங்கி ( 310 கோடி ரூபாய்), ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் ( 150 கோடி ரூபாய்), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ( 140 கோடி ரூபாய்), பெடரல் வங்கி ( 90 கோடி ரூபாய்), பஞ்சாப் அண்ட் சிந் வங்கி ( 60 கோடி ரூபாய்) மற்றும் ஆக்சிஸ் வங்கி ( 50 கோடி ரூபாய்) கடன் அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI tags Mallya, Kingfisher Air, United Breweries as wilful defaulter

After a protracted legal battle, State Bank of India has declared industrialist Vijay Mallya a ‘wilful defaulter’ for defaults on nearly Rs. 7,000 crore loans to the long-grounded Kingfisher Airlines.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X