காப்பீட்டு ஆவணங்களைப் பாதுகாக்கும் மின்னணு காப்பீடு கணக்கைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உங்களின் குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கும் வண்ணம் காப்பீடுகளை நோக்கிப் பயணிக்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம், காகித கோப்புகள் வேகமாகச் சேருவதை!. நீங்கள் மற்றொரு காப்பீட்டை எடுத்தால், காகித கோப்புகள் இன்னமும் வேகமாகச் சேரும்.

இதில் பெரிய விஷயம் என்னவென்றால் இவை அனைத்தையும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதனால் நமக்குத் தெரிய வருவது: அவற்றைச் சரிவரச் சீர்ப்படுத்தவில்லை என்றால் நீங்கள் காகித கடலில் தான் நீந்த வேண்டும். இந்த இம்சையில் இருந்து தப்பிக்க ஒரு எளிய வழி உள்ளது; அதுதான் மின்னணு காப்பீடு கணக்கு (ஈ.ஐ.ஏ. - எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ் அக்கௌன்ட்).

குடும்பத்தாரால் எடுக்கப்படும் ஆயுள் காப்பீடுகள் பற்றித் தெரியாதவர்களுக்கும் கூட இது உபயோகமாக இருக்கும். சொல்லப்போனால், இந்தக் காரணத்தால் தான், 2009-10 மற்றும் 2012-13 இடைப்பட்ட நான்கு வருட காலக் கட்டத்தில், ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் கோரப்படாத தொகை 250% அதிகமாக வளர்ந்துள்ளது.

காப்பீட்டு ஆவணங்களைப் பாதுகாக்கும் மின்னணு காப்பீடு கணக்கைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு..?

2012-13 நிதியாண்டு முடிவில், ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் உள்ள கோரப்படாத தொகை ரூ. 4,866 கோடிகளாகும். 2009-10 நிதியாண்டில் இந்தத் தொகை ரூ. 1,373 கோடிகளாக இருந்துள்ளது. ஈ.ஐ.ஏ. இருந்தால் இவற்றை நீங்கள் தவிர்க்கலாம்.

மின்னணு காப்பீடு கணக்குகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள், இதோ!

ஈ.ஐ.ஏ. என்றால் என்ன?

சிக்கலான பெயரை கேட்டுக் குழம்பி விடாதீர்கள். மின்னணு காப்பீடு கணக்கு என்பது ஒரு வங்கி கணக்கை போன்றது தான். உங்கள் பணத்தைச் சேமிப்பதற்குப் பதிலாக, உங்களது காப்பீடு ஆவணங்களை மின்னணு வடிவத்தில் இணையத்தில் சேமித்திட ஈ.ஐ.ஏ. உதவிடும்.

காப்பீட்டை இணையதளம் மூலமாக வாங்கும் போதும், அதனை இணையத்தில் பராமரிக்கும் போதும், அது கைக்கடமாகவும் எளிமையாகவும் இருக்கும். அதனால் உங்களது அனைத்து மின்னணு பாலிசிகளையும் ஒரே இடத்தில் வைக்கலாம். உங்களது மொத்த பாலிசிகளையும் ஒரு சொடுக்கில் அணுகலாம்.

ஈ.ஐ.ஏ. எப்படிச் செயல்படுகிறது?

வங்கி அல்லது டீமேட் கணக்கைப் போலவே, சேவை அள்ளிப்பவர் மூலமாகத் தான் 'காப்பீடு களஞ்சியத்தை'த் திறக்க முடியும். உங்களது அனைத்துக் காப்பீடு நகல்களைக் கொண்டிருக்கும் மத்திய வைப்பிடமாக இது அமையும். உங்கள் வங்கி தான் காப்பீடு களஞ்சியம் என வைத்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் வைப்பில் இருந்து வங்கிகள் வைத்திருக்கும் லட்சங்கள் மற்றும் கோடிகளைப் போல், இந்தக் களஞ்சியமும் மின்னணு வடிவில் காப்பீடு பாலிசிகளை வைத்திருக்கும்.

உங்கள் மின்னணு காப்பீடு கணக்கைத் திறக்க நீங்கள் காப்பீடு களஞ்சியத்தை அணுக வேண்டும். அப்படிச் செய்த பின், உங்களுக்குத் தனித்துவமான கணக்கு எண் கிடைக்கும். இது உங்களது வங்கி சேமிப்புக் கணக்கைப் போலவே இருக்கும். இந்த எண் தான் உங்களது அடையாளம் மற்றும் காப்பீட்டு உடைமைகளைக் குறிக்கும்.

ஈ.ஐ.ஏ.-வின் பயன்கள் என்ன?

• அனைத்து பாலிசிகளும் ஒரே இடத்தில் இருப்பதால், உங்களது முதலீடுகளைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்து வைத்திருக்க முடியும்.

• உங்களிடம் அனைத்துத் தரவுகளும் இருப்பதால் வரித் தாக்கல்களுக்கு நீங்கள் சிறந்த முடிவுகளை எடுக்கலாம்.

• பௌதீக வடிவிலான பாலிசி காகிதங்களைப் பராமரிக்கும் கஷ்டமான வேலையில் இருந்து விடுபடலாம்.

• ஒற்றை மின்னணு காப்பீடு கணக்கின் கீழ் உங்களது அனைத்து ஆயுள் காப்பீடு பாலிசிகளை இனி நீங்கள் பராமரிக்கலாம்.

• இதனுடன், ஈ.ஐ.ஏ. திறப்பதற்கான கட்டணமும் இலவசம். ஈ.ஐ.ஏ. கணக்கைத் திறந்து விட்டு, ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, இனிமேலான ஆவணச் சமர்ப்பித்தலை பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. ஈ.ஐ.ஏ. உங்களது தகவலை வைத்திருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறை புதிய பாலிசி வாங்கும் போதும் இது பயன்படுத்தப்படும்.

• உங்களது பாலிசியில் முகவரி போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை மாற்ற ஈ.ஐ.ஏ. எளிமையான முறையில் உதவுகிறது. கணக்கைத் திறந்து, தனிப்பட்ட விபரங்களைக் கொண்டுள்ள பத்தியில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இந்த மாற்றம் அனைத்து பாலிசிகளிலும் உடனே தானாகப் பிரதிபலிக்கும். அதனால் உங்கள் விவரங்களைப் புதுப்பிக்கவும், ப்ரீமியமை கட்டவும் இனியும் காப்பீடு நிறுவனத்தை நாடிச் செல்லத்தேவையில்லை. ஒரு சொடுக்கிலேயே இவையனைத்தும் எளிதில் செய்து முடித்து விடலாம்.

எங்கே ஈ.ஐ.ஏ-வை தொடங்கலாம்?

காப்பீடு சந்தை சீர்படுத்தியான இன்ஷூரன்ஸ் ரெகுலடரி அண்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (ஐ.ஆர்.டி.ஏ) கீழ்கூறிய ஐந்து நிறுவனங்களைக் காப்பீடு களஞ்சியமாகச் செயல்பட அனுமதியளித்துள்ளது. மின்னணு காப்பீடு கணக்குகளைத் திறக்க இவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

என்.எஸ்.டி.எல். டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட்
சென்ட்ரல் இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரி லிமிடெட்
எஸ்.எச்.சி.ஐ.எல். ப்ராஜக்ட்ஸ் லிமிடெட்
கார்வி இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரி லிமிடெட்
சி.ஏ.எம்.எஸ். ரெபாசிட்டரி செர்விசஸ் லிமிடெட்

காப்பீட்டாளர்களின் சார்பாகக் காப்பீடு பாலிசிகளை மின்னணு வடிவில் பராமரிக்க இந்த ஆணையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈ.ஐ.ஏ.-வை திறப்பது எப்படி?

வங்கி கணக்கை இணையதளத்தில் திறப்பதை போல இதுவும் சுலபமாகும். வெறும் மூன்றே மூன்று செயல்முறைகள் தான். விருப்பப்பட்ட காப்பீடு களஞ்சியத்திடம் இருந்து ஈ.ஐ.ஏ.திறப்புப் படிவத்தைத் தரவிறக்கம் செய்து அவற்றில் உங்களது விவரங்களை நிரப்ப வேண்டும்.

உங்களது பிறந்த தேதி, பான் அல்லது யு.ஐ.டி அட்டை, முகவரி சான்று மற்றும் நீக்கப்பட்ட காசோலை ஆகியவற்றின் நகல் தேவை. இந்த ஆவணங்களை உங்கள் கையெழுத்தால் சுய சான்றொப்பமிட்டு, உங்கள் கணினியில் ஸ்கேன் செய்யவும். உங்களிடம் ஸ்கேன் கருவி இல்லையென்றால், அருகில் இருக்கும் சைபர் கஃபேக்கு சென்று உங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்து கொள்ளவும். பின் இந்த ஆவணங்கள் பி.டி.எஃப் அல்லது புகைப்பட வடிவில் கிடைத்து விடும்.

இந்த ஆவணங்களைப் படிவத்துடன் சேர்த்து காப்பீடு களஞ்சியம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வளவு தான்; உங்களது காப்பீடு தொகையைச் சுலபமாகப் பராமரித்து, கோரலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

All you need to know about Electronic Insurance Accounts

Once you start down the path to insuring, one thing that you'll notice is that the paperwork piles up fast. You buy another set of insurance policies, and you get another set of papers that you need to safeguard.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X