இந்திய சோலார் மின் திட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் சீனா..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்யவும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் மத்திய அரசு சோலார் மின்சாரத்தைத் தேர்ந்தெடுத்தது. இத்திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்தவும் திட்டமிட்டது.

 

இதன்படி பல தனியார் நிறுவன கூட்டணியில் அரசு இணைந்து மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி தளங்களை அமைத்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் அனைத்து அரசு நிறுவனங்களும் மத்திய அரசின் 40 சதவீத நிதியுதவி உடன் சோலார் மின் தளங்களை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.

இத்திட்டத்திற்காக 2015ஆம் நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் சுமார் 4.41 கோடி சோலார் பேனல்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் 66 சதவீதம் சீனாவில் இருந்து மட்டும் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனா

சீனா

2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 4.41 கோடி சோலார் மின் தளங்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 66 சதவீதம் அதாவது 2.92 கோடி பேனல்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என மத்திய மின்வாரியத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

70 சதவீதம்.. அம்மாடியோவ்..

70 சதவீதம்.. அம்மாடியோவ்..

2014ஆம் நிதியாண்டில் மத்திய அரசு சுமார் 16.15 கோடி சோலார் பேனல்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் 70 சதவீதம் சீனா இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2013ஆம் ஆண்டில் இதன் அளவு 65 சதவீதமாகவும் இருந்தது.

பிற நாடுகள்
 

பிற நாடுகள்

சீனாவை விடுத்து, தைவான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிடம் இருந்து இந்தியா சோலார் பேனல்களை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் சோலார் மின்சாரத்தை உருவாக்கவும் கட்டமைப்புகளை அமைக்கவும் மத்திய அரசு சில அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

1,328 மெகா வாட் மின்சாரம்..

1,328 மெகா வாட் மின்சாரம்..

பியூஷ் கோயல் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில் 2015ஆம் நிதியாண்டில் சுமார் 1,328 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் தளங்களை அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் சோலார் பேனல்களின் உற்பத்தி அதிகரிக்கவும் ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. குறிப்பாகச் சோலார் செல் மற்றும் பேனல்களைத் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களின் இறக்குமதிக்கு வரியை அதிகளவில் குறைத்துள்ளது.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

மேலும் மத்திய அரசு சோலார் மின் திட்டத்திற்காகச் சுமார் 1,584.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.இதேபோல் காற்றாலை மின் உற்பத்திக்கு 272.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

மொத்த உற்பத்தி

மொத்த உற்பத்தி

நவம்பர் 26ஆம் தேதி வரையில் மத்திய அரசு சுமார் 4,666.60 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சோலார் தளங்களை நிறுவியுள்ளது. அதேபோல் 24,677.72 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை நிறுவியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலக்கு

இலக்கு

மத்திய அரசு சோலார் மின் திட்டத்தின் மூலம் 1 லட்சம் மெகாவாட் வரையிலான மின் சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

66% of imported solar panels are from China: Power Minister

About 66 per cent of all solar power panels imported were from China during the first three months of the fiscal, the Parliament was informed on Thursday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X