கச்சா எண்ணெய் விலை 50% வரை குறையலாம்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தேவைக்கு அதிகமான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து வருவதால், எண்ணெய் சந்தை கட்டுப்பாடு இல்லாமல் விலை சரிவையும், முதலீடுகளையும் பெற்று வருகிறது.

 

இதனால் அடுத்த ஒரு வருடத்திற்குக் கச்சா எண்ணெய்யின் உற்பத்தி அளவில் மாற்றம் இல்லாததால் கச்சா எண்ணெயின் விலை 50 சதவீதம் வரை குறையும் எனக் கோல்டுமேன் சாக்ஸ் முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கு எல்லாம் அமெரிக்கா தான் காரணம்..

(மழையால் பாதிக்கப்பட்டது சென்னை மட்டும் அல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவும் தான்..!)(மழையால் பாதிக்கப்பட்டது சென்னை மட்டும் அல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவும் தான்..!)

OPEC அமைப்பு

OPEC அமைப்பு

கடந்த வெள்ளிக்கிழமை 13 உறுப்பினர்கள் கொண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி அமைப்பு, தற்போது உற்பத்தி செய்து வரும் 31.5 மில்லியன் பிபிடி அளவில் எவ்விதமான தளர்வுகளும் இருக்காது என OPEC அமைப்பு அறிவித்துள்ளது.

OPEC அமைப்பின் அறிவிப்பின் படி அடுத்த ஒரு வருடத்திற்கு இவ்வமைப்பில் உள்ள 13 நாடுகளின் ஒரு நாள் உற்பத்தி அளவுகள் சராசரியாக 31.8 மில்லியன் பேரல்களாக இருக்கும் எனக் கோல்மேன் சாக்ஸ் கணித்துள்ளது.

 

கோல்மேன் சாக்ஸ்

கோல்மேன் சாக்ஸ்

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் 13 நாடுகளின், உற்பத்தி அளவுகளில் மாற்றம் ஏதும் இல்லாததால் 2016ஆம் ஆண்டு 4ஆம் காலாண்டு வரை தேவையும், உற்பத்தியும் நிலைபெறாது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை 50 சதவீதம் வரை குறையலாம் எனக் கோல்டுமேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியின் உயர் அதிகாரி டேமெயின் கோர்வாலின் தெரிவித்தார்.

ஈரான்
 

ஈரான்

மேலும் அடுத்த வருடம் ஜூன் மாதம் ஈரான் நாட்டு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களிடம் நடைபெறும் கூட்டத்தில் கோல்டுமேன் சாக்ஸ் உற்பத்தி அளவுகள் குறித்து விவாதிப்பதாகவும் தெரிவித்தது.

விலை நிலவரம்

விலை நிலவரம்

அதீத உற்பத்தியால் ஏற்கனவே சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாகக் குறைந்துள்ளது. தற்போது OPEC அமைப்புகளின் அறிவிப்புகள் பார்க்கும்போது கச்சா எண்ணெயின் விலை இன்னமும் குறையும். தோராயமாக 50 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணிப்புகள்

கணிப்புகள்

அடுத்தச் சில மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 40 டாலர் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் கோல்டுமேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விற்பனை..

கச்சா எண்ணெய் விற்பனை..

எண்ணெய் உற்பத்தி செய்யும் 13 நாடுகள், தங்களின் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் செலவில் எவ்விதமான கூடுதல் லாபமுமின்றி விற்பனை செய்து வருகிறது. ஏன் இப்படிச் செய்கிறது..? இதுவே விலை சரிவிற்கு முக்கியக் காரணமும் ஆகும்.

ஏன் இப்படி..??

ஏன் இப்படி..??

அமெரிக்க ஷேல் எண்ணெயின் உற்பத்தி கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளது. இதனால் OPEC அமைப்புகளில் உள்ள நாடுகள் அமெரிக்காவிற்கு இணையாக உற்பத்தி செய்து இயக்க விலையிலேயே (Operating cost) விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

இதன் காரணமாகத் தான் எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இந்தியாவிற்குக் கொண்டாட்டம்..

இந்தியாவிற்குக் கொண்டாட்டம்..

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற கதையாக எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் போட்டி என்றால் கச்சா எண்ணெய் வளம் இல்லாத இந்தியா போன்ற நாடுகளுக்குக் கொண்டாட்டம் தான்.

கச்சா எண்ணெய் விலை குறைந்தால் நாட்டுப் பொருளாதாரத்தின் உயிர் நாடியாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

 

 

ஒரு பிரச்சனை..

ஒரு பிரச்சனை..

ஆனால் தற்போது உற்பத்தி அதிகரித்து விலைக் குறைந்தாலும், உற்பத்தி செய்த கச்சா எண்ணெயை சேமிப்பதில் பிரச்சனை உருவாகியுள்ளது. இதனைக் களையவே உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Goldman Sachs thinks oil prices could fall another 50%

Goldman is forecasting oil prices over the next few months to be near $40 a barrel, there could be another 50% to fall as continuing Opec output pushes producers towards the absolute lowest level they can conceivably manage.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X