ஓரே வருடத்தில் 15 கார்கள் அறிமுகம்.. அதிரடியாய் செயல்படும் மெர்சிடிஸ் பென்ஸ்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய ஆடம்பர சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன கார்களுக்குத் தனி இடம் உண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதீத விற்பனையால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் கணிசமாகக் குறைந்த 2ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

சந்தையில் தனது இடத்தை மீண்டும் பிடிக்க 15 இன் 15 திட்டத்தை வகுத்தது.

 ஓரே வருடத்தில் 15 கார்கள் அறிமுகம்.. அதிரடியாய் செயல்படும் மெர்சிடிஸ் பென்ஸ்..!

இதன் படி 2015ஆம் ஆண்டில் புதிய திட்டங்களுடன் பென்ஸ் இந்திய சந்தைக்குள் களமிறங்கி ஒரே ஆண்டில் சுமார் 15 புதிய மாடல் கார்களைப் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

2015ஆம் ஆண்டில் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட புதிய மடல்கள் கார்களின் மூலம் இந்தியாவில் ஆடம்பர கார் விற்பனை பிரிவில் பென்ஸ்முதன்மையாகத் திகழ்கிறது. அதுமட்டும் அல்லாமல் நடப்பு நிதியாண்டில் 14 டீலர்ஷிப் கிளைகளைத் திறந்துள்ளது. டிசம்பர் மாத முடிவிற்குள் புதிதாக ஒரு கிளையைத் திறக்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகளையும் துவங்கியுள்ளது.

 ஓரே வருடத்தில் 15 கார்கள் அறிமுகம்.. அதிரடியாய் செயல்படும் மெர்சிடிஸ் பென்ஸ்..!

இந்நிலையில் நேற்று இளைஞர்களைக் கவரும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் தனது ஏ கிளாஸ் பிரிவில் புதிய கார்களை அறிமுகப்படுத்தியது. இப்புதிய காரின் விலை 24.95 லட்சம் முதல் 25.95 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுவதாகப் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் புதிய அறிமுகம் சந்தையில் கண்டிப்பாக வெற்றியடையும் என மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரோனால்டு போல்கார் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mercedes-Benz unveils new A Class in India, its 15th car in 2015

As per Mercedes-Benz ‘15 in 15' strategy where in it has introduced 15 new cars in 2015 to regain its number one position in the market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X