மின்சாரக் கட்டணங்கள் உயரும் அபாயம்.. மத்திய அரசின் புதிய கட்டண விதிமுறைகள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: புதன்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தில் மின் உற்பத்தி நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரி, எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம், மத்திய மற்றும் மாநில அரசின் கூடுதல் வரி விதிப்புகளின் பாதிப்புகளைத் தணிக்கும் வகையில், நிறுவனம் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் மின்சாரத்தின் மீது கூடுதல் வரி மற்றும் கட்டணங்களை விதித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்தச் சில வாரங்களில் மின் கட்டணம் அதிகளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த அனுமதியின் மூலம் மின்சார உற்பத்தி நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

புதிய மாற்றங்கள்

புதிய மாற்றங்கள்

மத்திய மற்றும் மாநில அரசுகளின் எரிபொருள் மற்றும் வரியில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை அடைந்து வருகிறது.

இதனைத் தடுக்கவும், இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தூய்மை மின்சார உற்பத்தியை ஊக்கப்படுத்தும் விதமாகவும், மத்திய அரசு மின்சாரக் கட்டண திட்டத்தில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

 

கட்டணங்கள் உயர்வு..

கட்டணங்கள் உயர்வு..

மின் உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தும் எரிபொருள் மீது மத்திய மற்றும் மாநில அரசு விதிக்கப்படும் கூடுதல் வரியின் மூலம் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகம் மற்றும் நிதிநிலை பாதிப்பு அடைந்து வருகிறது. அதேபோல் இதர வரி மற்றும் கட்டணங்களினால் நிறுவனத்தின் லாப அளவுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இத்தகைய பாதிப்புகளைத் தடுக்கவே நிறுவனம் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் மின்சாரத்தின் மீது கூடுதல் வரி, கட்டணங்களை விதித்துக்கொள்ள மத்திய அரசு மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

 

நிதியுதவி

நிதியுதவி

5,000 மெகாவாட் சோலார் இணைப்புக் கொண்ட மின்சார உற்பத்தி தளத்தை அமைக்க 5,050 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவியை அளிக்க CCEA அமைப்பு முடிவு செய்துள்ளது.

உபரி மின்சாரம்

உபரி மின்சாரம்

மேலும் நிறுவனம் உற்பத்தி செய்யும் உபரி மின்சாரத்தை எவ்விதமான தடையுமின்றிப் பவர் எக்ஸ்சேஞ்ச் மூலம் விற்பனை செய்யவும் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.

அனல் மின் நிலையங்கள்

அனல் மின் நிலையங்கள்

புதிய கட்டணத் திட்டத்தின் படி அனல் மின் நிலையங்கள், தனது உற்பத்தித் திறனுக்கு இணையாகப் புதுப்பிக்கத்தக்க மின் நிலையத்தை அமைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பவர் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனங்கள்

பவர் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனங்கள்

2022ஆம் ஆண்டு நாட்டின் மின்சாரத் தேவையின் படி பவர் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனங்கள் குறைந்தது 8 சதவீத மின்சாரத்தையாவது உற்பத்தி செய்ய வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது.

சோலார் மற்றும் காற்றாலை

சோலார் மற்றும் காற்றாலை

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 40 சதவீத மின்சாரம் சோலார் மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Cabinet on Wednesday approved several changes to the tariff policy for the power sector, with the broad objectives of promoting renewable energy, incentivising exchange-based power trading and shielding the producers from fluctuations in fuel and tax costs due to government decisions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X