இந்திய நிறுவன ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு நிச்சயம்.. அதிரடி சர்வே ரிப்போர்ட்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2017ஆம் நிதியாண்டு துவங்க உள்ள நிலையில், இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் 2017ஆம் ஆண்டு ஊதிய உயர்வு குறித்து ஆய்வு செய்த போது, இந்தியாவில் ஈகாமர்ஸ், லைப் சைன்ஸ், மீடியாவின் வளர்ச்சி மற்றும் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், இந்த வருடம் இந்திய நிறுவனங்கள் தாராளமாக 10 சதவீத ஊதிய உயர்வை அளிக்கும் என ஆய்வின் முடிவுகள் தெரிய வந்துள்ளது.

எல்லோருக்கும் 10% ஊதிய உயர்வு இல்லைங்க.. சில துறைக்கு இன்னும் அதிகமாம்.. வாங்க முழுமையான விபரங்களைத் தெரிந்துகொள்வோம்.

(("கிளிக்2இன்வெஸ்ட்-யுலிப்ஸ்".. நீங்க அவசியம் இதைப் பத்தி தெரிஞ்சுக்கனும்!)

ஆய்வு

ஆய்வு

Aon Hewitt என்ற நிறுவனம் இந்தியாவில் சுமார் 700 நிறுவனங்கள் மத்தியில் செய்த ஆய்வில் ஈகாமர்ஸ், லைப் சைன்ஸ், மீடியா நிறுவனங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 15.6 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

700 நிறுவனங்கள்

700 நிறுவனங்கள்

கடந்த சில வருடங்களாக இந்திய பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில், இந்திய நிறுவனங்கள் தங்களது நிறுவனம் மற்றும் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளத் திறமையான ஊழியர்களுக்குச் சம்பத்தை வாரி வழங்கத் தயாராக உள்ளது என 700 நிறுவனங்களில் செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

15.6% ஊதிய உயர்வு
 

15.6% ஊதிய உயர்வு

இந்த வரும் ஈகாரமர்ஸ் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஊழியர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வர வைக்கும் அளவிற்கு 15.6 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கத் தயாராக உள்ளது.

மீடியா

மீடியா

ஈகாரமர்ஸ் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடர்ந்து இண்டர்நெட் மற்றும் சாமானிய மக்கள் மத்தியிலும் ஆதிக்கம் செலுத்தும் மீடியா (ப்ரின்ட் மற்றும் எலக்ட்ரானிக்) நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு 11.2 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

11-10 சதவீத உயர்வு

11-10 சதவீத உயர்வு

அதேபோல் கன்சியூமர் பிராடெக்ட்ஸ் (10.8%), ரிடைல் (10.7%), ITeS(10.3%), டெலிகாம் (9.7%) மற்றும் நிதியியல் நிறுவனங்கள் 8.8 சதவீதம் வரை ஊதியத்தில் உயர்வு அளிக்கத் தயாராக உள்ளது.

இரண்டு இலக்க உயர்வு

இரண்டு இலக்க உயர்வு

2007, 2008 மற்றும் 2015ஆம் ஆண்டுகளைப் பார்க்கும் போது 15.1%, 13.1%, 10.4% வரையிலான உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, இதனால் இந்தியாவில் மட்டும் அல்லாமல் ஆசிய பசிபிக் பிராந்தியங்களிலும் நிலவும்.

இதன் மூலம் நாம் வர்த்தகத்திலும், பொருளாதாரத்திலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதை மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

 

பணவீக்கம்

பணவீக்கம்

மேலும் நாட்டின் நிலவும் குறைவான பணவீக்கமும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதிய உயர்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

7வது சம்பள கமிஷன்

7வது சம்பள கமிஷன்

ஊழியர்களின் ஊதிய உயர்வில் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியும் முக்கியப் பங்கு வகித்தாலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதிய உயர்வு குறித்த 7வது சம்பள கமிஷன் அறிக்கை வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Inc is set to witness an average salary increase of around 10.3% this year, with sectors such as e-commerce, life sciences and media receiving maximum hikes, revealed a survey.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X