மேகி நூடில்ஸ் பிரச்சனையில் 33% சந்தையைக் கைப்பற்றியது ஐடிசி நிறுவனம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடில்ஸில் உள்ள தாதுப்பொருட்கள் அளவு தாறுமாறாக உள்ளதை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் இதன் விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது.

 

இதனால் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடில்ஸ்-இன் (Maggi) விற்பனை அளவுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது. இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் பிற பொருட்களின் விற்பனையும் அதிகளவில் குறைந்தது.

இத்தகைய சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி ஐடிசி நூடில்ஸ் விற்பனையில் 33 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது.

மேகி நூடில்ஸ்

மேகி நூடில்ஸ்

கடந்த வருடம் ஜனவரி மாதம் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடில்ஸின் விற்பனை சந்தை 77 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது விற்பனை தடை மற்றும் சில முக்கிய வழக்குகள் காரணமாக இதன் விற்பனை 42 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐடிசி

ஐடிசி

இந்நிலையில் ஐடிசி நிறுவனத்தின் உணவுப் பொருட்களின் பிராண்டான சன்பீஸ்ட் நிறுவனத்தின் Yippee நூடில்ஸ் நிறுவனம் மக்கள் மத்தியில் அதிகளவிலான நம்பிக்கையைப் பெற்று 33 சதவீத சந்தையைக் கைப்பற்றி 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் இடத்தில் மேகி

முதல் இடத்தில் மேகி

இந்தியாவில் மேகி விற்பனைக்குத் தடை மற்றும் அதன் உற்பத்திக்குத் தடை விதிக்கப்பட்டு நிலையிலும் (நீதிமன்றம் அளித்த தடை உத்திரவிற்கு எதிராக நெஸ்லே வழக்குத் தொடுத்துள்ளது) இதன் விற்பனை சிறப்பாக உள்ளது. இதனால் நூடில்ஸ் விற்பனை சந்தையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது மேகி.

பிற நிறுவனங்கள்
 

பிற நிறுவனங்கள்

மேகி, Yippee நிறுவனங்களுக்கு அடுத்ததாக, டாப் ராமென், கப் நூடில்ஸ், சிங் சீக்ரெட், வாய் வாய் மற்றும் ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் க்நார் ஆகியவை உள்ளது.

வர்த்தகம்

வர்த்தகம்

கடந்த ஜனவரி மாத்தில் நெஸ்லே நிறுவனத்தின் நூடில்ஸ் வர்த்தகம் மட்டும் 3,400 கோடியாக இருந்த நிலையில் தற்போது (ஜனவரி 2016) 2,000 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

450 கோடி ரூபாய் நஷ்டம்

450 கோடி ரூபாய் நஷ்டம்

இந்திய உணவு கட்டுப்பாட்டு அமைப்பு மேகி நூடில்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் தயாரிப்புக்குத் தடை விதிக்கப்பட்ட காலத்தில் இந்தியா முழுவதும் சுமார் 30,000 டன் நூடில்ஸ் அழிக்கப்பட்டது. இதனால் நெஸ்லே நிறுவனத்திற்கு 450 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

நெஸ்லே நிறுவனம்

நெஸ்லே நிறுவனம்

இந்நிறுவனத்தின் பிற தயாரிப்புகள்.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rivals gain as Maggi market share declines

The share of the Nestle's Maggi noodles brand in India dropped to 42% in January from a high of 77% in the year-ago month.
Story first published: Monday, February 22, 2016, 14:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X