ஜபாங், ஃபேப்பர்னிஷ் நிறுவனப் பங்குகளை விற்க ராக்கெட் இன்டர்நெட் முடிவு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: ஜெர்மானிய நிறுவனமான ராக்கெட் இன்டர்நெட், இந்தியாவில் ஃபர்னீசர்களை விற்கும் ஃபேப்பர்னிஷ் இணையதளம் மற்றும் ஆடை விற்பனை செய்யும் ஜபாங் ஆகிய நிறுவனங்களில் முதலீடும் வர்த்தகத்தையும் நடத்தி வருகிறது.

ராக்கெட் இன்டர்நெட் நிறுவனம் தனது நஷ்டத்தின் அளவுகளைக் குறைக்க ஜபாங், ஃபேப்பர்னிஷ் ஆகிய இரு நிறுவனங்களையும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

பியூச்சர் குரூப்

பியூச்சர் குரூப்

இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான பியூச்சர் குரூப் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி உடன் ராக்கெட் இன்டர்நெட் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இப்பேச்சுவார்த்தையில் கிஷோர் பியானி ஃபேப்பர்னிஷ் நிறுவனத்தை மட்டும் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், ஜபாங் நிறுவனத்தை வாங்க பியூச்சர் குரூப் நிறுவனத்திற்கு விருப்பம் இல்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

 

ராக்கெட் இன்டர்நெட்

ராக்கெட் இன்டர்நெட்

பெர்லின் நகரத்தை தலைமையிடமாக் கொண்டு செயல்படும் இந்த ராக்கெட் இன்டர்நெட் நிறுவனம் இந்தியாவில் கூப்பன் நேஷன், புட் பாண்டா, ஜபாங்ஷ, விம்டூ ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறது.

முதல் நிறுவனம்

முதல் நிறுவனம்

ராக்கெட் இன்டர்நெட் நிறுவனத்தால் முதல் முறையாக விற்கத் திட்டமிடப்படும் நிறுவனம் ஃபேப்பர்னிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேப்பர்னிஷ்

ஃபேப்பர்னிஷ்

ஃபேப்பர்னிஷ் நிறுவனத்தில் இருக்கும் ராக்கெட் இன்டர்நெட் நிறுவனப் பங்கை விற்பனை செய்யப் பியூச்சர் குரூப் உடன் ஒப்புதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஜபாங்

ஜபாங்

இந்நிலையில் 2015ஆம் ஆண்டில் மட்டும் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்ற ஜபாங் நிறுவனத்தைக் கைப்பற்ற பியூச்சர் குரூப் விரும்பவில்லை. இதற்கு முக்கியக் காரணம் கடந்த வருடம் இந்நிறுவனம் 43.6 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

2014ஆம் ஆண்டின் இதன் அளவு 16.6 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய ஈகாமர்ஸ் சந்தை

இந்திய ஈகாமர்ஸ் சந்தை

இந்தியாவில் பிளிப்கார்ட், மைன்திரா, ஸ்னாப்டீல், அமேசான் இந்தியா நிறுவனங்களுக்கு இணையாகவும் சந்தையில் கடுமையான போட்டி அளிக்கும் விதமாக ஜபாங் தற்போது உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

German Rocket Internet, which runs a string of consumer internet companies in India, is in talks with Kishore Biyani-led Future Group for the sale of its online furniture retailer FabFurnish.
Story first published: Wednesday, February 24, 2016, 12:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X