ரூ.5,000 கோடி விளம்பர வருவாய்.. பன்னாட்டு நிறுவனத்தை நம்பிக் களமிறங்கும் இந்தியன் ரயில்வே..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ரயில்வே துறையில் விளம்பரத்தின் மூலம் 5,000 கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை ஈட்டும் திட்டத்தைத் திறன்படச் செய்து முடிக்கச் சர்வதேச கன்சல்டன்சி நிறுவனமான EY எனப்படும் Ernst &Young நியமிக்கப்பட்டுள்ளது.

<strong><em>(பெட்ரோல், மொபைல் சேவை அடுத்து கேபிள் டிவிக்குள் நுழையும் " title="(பெட்ரோல், மொபைல் சேவை அடுத்து கேபிள் டிவிக்குள் நுழையும் "முகேஷ் அம்பானி"..!)" />(பெட்ரோல், மொபைல் சேவை அடுத்து கேபிள் டிவிக்குள் நுழையும் "முகேஷ் அம்பானி"..!)

ரயில்வே பட்ஜெட் அறிக்கையில் கூட, ரயில்வே துறையின் நிதிநிலையைச் சரி செய்யப் புதிய வருவாய் ஈடும் பல திட்டங்களைத் தான் செயல்படுத்தப்போவதாக இத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

ரயில்வே துறை

ரயில்வே துறை

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமான இந்திய ரயில்வே துறை இந்தியா முழுவதுமாக அனைத்து வழிகளிலும் குறிப்பாக ரயில்கள், ரயில்வே நிலையங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்வதன் மூலம் மிகப்பெரிய வருவாய் பெற வேண்டும் என்ற நோக்கி Ernst &Young நிறுவன துணையோடு இத்திட்டத்தில் கால் வைத்துள்ளது.

வருமானம்

வருமானம்

பிப்ரவரி 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் அறிக்கையில், பயணிகளிடம் இருந்து பெறப்படும் கட்டணத்தைத் தவிரப் பிற வழிகளில் வருமானத்தை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளோம் என ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

நிதிப் பற்றாக்குறையை
 

நிதிப் பற்றாக்குறையை

தற்போது இந்திய ரயில்வே துறை சந்தித்துள்ள 19,000 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையைக் கட்டண உயர்வு ஏதுமில்லாமல் ஈடு செய்யவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மொத்த வருவாயில் 5% மட்டும்

மொத்த வருவாயில் 5% மட்டும்

இந்திய ரயில்வே துறையின் மொத்த வருவாய் அளவுகளில் வெறும் 5 சதவீதம் மட்டுமே கட்டணமில்லா வருவாயாகப் பெறுகிறது. இந்நிலையில் இதன் அளவை அதிகரிக்கும் சில முக்கியத் திட்டங்களை வகுக்க முடிவு செய்துள்ளது ரயில்வே துறை.

சர்வதேச நாடுகளில் உள்ள ரயில் நிர்வாகங்கள் 20 சதவீதம் வரையிலான கட்டமில்லா வருமானத்தைப் பெறுகிறது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Railways has appointed global consultancy firm Ernst &Young (EY) to help the utility mop up advertising revenues worth over Rs.5,000 crore in the next few years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X