வருவாய் கணக்கில் டெலிகாம் நிறுவனங்கள் பித்தலாட்டம்.. அரசுக்கு ரூ.12,400 கோடி இழப்பு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகக் கருதப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடா, ஏர்டெல், வோடாபோன், ஐடியா, ஏர்செல் ஆகிய 6 நிறுவனங்கள் தங்களது வருமான அளவுகளைக் குறைத்து கணக்குக் காட்டி மத்திய அரசுக்கு 12,400 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அமைப்பு தெரிவித்துள்ளது.

(குடும்ப 'அரசியல்' போல இது குடும்ப 'வியாபாரம்'..!)(குடும்ப 'அரசியல்' போல இது குடும்ப 'வியாபாரம்'..!)

12,400 கோடி இழப்பு

12,400 கோடி இழப்பு

2006-07 முதல் 2009-10ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடா, ஏர்டெல், வோடாபோன், ஐடியா, ஏர்செல் ஆகிய 6 நிறுவனங்களின் மொத்த வருமான அளவு 46,000 கோடி ரூபாய் எனப் பொய் கணக்கைக் காட்டி 2ஜி அலைக்கற்றைப் பகிர்மானத்தில் மிகப்பெரிய இழப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதாக CAG அமைப்பு தெரிவித்துள்ளது.

மறுப்பு அனுமதியும்..

மறுப்பு அனுமதியும்..

2ஜி அலைக்கற்றைப் பகிர்மானம் குறித்த முந்தைய தணிக்கை அறிக்கையில் திட்டத்தில் இருந்த சில ஒட்டைகள் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான வருமானத்தைக் குறைத்து கணக்குக் காட்டியது.

தற்போது டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் படி CAG அமைப்பு 2ஜி அலைகற்றைப் பகிர்மானத்தின் அறிக்கையை மறு ஆய்வு செய்யும் பணியைச் செய்து வருகிறது.

 

 டெலிகாம் நிறுவனங்களின் சதி

டெலிகாம் நிறுவனங்களின் சதி

வருமான கணக்கில் செய்த தவறுகளை மறைக்க CAG அமைப்பு மறுஆய்வு செய்யக் கூடாது என்ற நோக்கில் 2009ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடா, ஏர்டெல், வோடாபோன், ஐடியா, ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் CAG அமைப்பு உச்ச நீதிமன்றத்தின் செய்ய மேல்முறையீட்டின் மூலம் 2ஜி அலைக்கற்றைப் பகிர்மான அறிக்கையை மறுஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 

1.70 லட்சம் கோடி...

1.70 லட்சம் கோடி...

அனுமதிக்குப் பின் ஆய்வு செய்ததில் first-come, first-serve முறையில் 2ஜி அலைக்கற்றைப் பகிர்மான செய்ததில் அரசுக்கு 1.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டள்ளது என CAG அமைப்புப் பகிரங்கப்படுத்தியது.

உரிமம் மற்றும் பயன்பாட்டுக் கட்டணம்

உரிமம் மற்றும் பயன்பாட்டுக் கட்டணம்

தற்போது நிறுவனங்கள் குறைவான வருமான அளவைக் காட்டியதால், டெலிகாம் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றைப் பயன்படுத்துவதற்காக அளிக்கப்பட்ட உரிமத்திற்கு 3,750 கோடி ரூபாயும், குறைவான வருமானத்தைக் காட்டி அதிகளவில் ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்தியதன் மூலம் 1,460 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வட்டித் தொகை

வட்டித் தொகை

டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய இந்த 5,210 கோடி ரூபாய் தொகைக்கான வட்டி மார்ச் 2015 வரையிலான காலகட்டத்திற்கு 7,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் அரசுக்கு 12,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என CAG அமைப்பு தெரிவித்துள்ளது.

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The CAG has claimed that 6 major telecom companies - Reliance Communications, Tata, Airtel, Vodafone, Idea and Aircel - have allegedly understated gross revenue of over Rs 46,000 crore for a period between 2006-07 and 2009-10 and denied the government its share of income which has been estimated at more than Rs 12,400 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X