ராஜ வாழ்கை வாழும் விஜய் மல்லையா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜய் மல்லையா பல சர்ச்சைகளை அசால்ட்டாக எதிர்கொள்ளும் மிகப்பெரிய வர்த்தகர் என்றால் மிகையாகாது. இவரின் வாழ்க்கை பலருக்கு ஒரு பாடம் என்ற சொல்ல வேண்டும்.

 

ஆடம்பர வாழ்க்கை, மதுபான வியாபாரம் என இந்திய பில்லியனர்கள் பட்டியலில் செழிப்பாக இருந்த விஜய் மல்லையா தற்போது இடம் தெரியாத அளவிற்கு, ஏன் சொல்லிக்கொள்ளாமல் நாட்டை விட்டும் ஓடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த மோசமான நிலையிலும் தனது நீண்ட நாள் கேள்பிரென்டான பிங்கி என்பவரை 3வதாக திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார் விஜய் மல்லையா.

பிங்கி லால்வாணி

பிங்கி லால்வாணி

விஜய் மல்லையாவின் தற்போது தனது முன்னாள் 2 மனைவிகளை விடுத்து தனது நீண்ட நாள் கேள்பிரென்டான பிங்கி லால்வாணி உடன் வாழ்ந்து வருகிறார். இவர் தனது வாழ்வின் உயர், சரிவு என அனைத்துக் கடினமான இடத்திலும் பிங்கி இருக்கிறார், இதனால் இவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார் விஜய் மல்லேயா.

எல்லோருக்கும் பாதிப்பு

எல்லோருக்கும் பாதிப்பு

விஜய் மல்லையாவிற்கு வங்கிகள் கடன் கொடுத்தால் வங்கிகள் பாதிப்புக்குள்ளானது, இவரது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர், மல்லையா தயாரிக்கும் மதுபானத்தைக் குடித்ததால் இந்தியாவில் இருக்கும் கடைக்கோடி மக்களும் உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் இவரால் பாதிக்கப்படாதது யாருமே இல்லை என்று சொன்னாலும் மிகையாகாது.

சுவாரஸ்ய தகவல்களை
 

சுவாரஸ்ய தகவல்களை

இப்படி இவரைப் பற்றிப் பல பெருமைகள் உண்டு. இந்நிலையில் விஜய் மல்லையா-வின் வாழ்க்கை முறை, சொத்து விபரங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இப்போது பார்க்கலாம் வாங்க.

கடன் அளவுகள்

கடன் அளவுகள்

விஜய் மல்லையா அளிக்க வேண்டிய கடன் தொகையில், 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தலைமையிலான எஸ்பிஐ வங்கிக் குழு கிங்பிஷர் நிறுவனத்தின் சில சொத்துக்களை முடக்கி விற்பனை செய்தது போக இன்னும் 7,000 கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.

முக்கிய வங்கிகள்

முக்கிய வங்கிகள்

மல்லையாவிற்கு அதிகக் கடன் அளித்த பெருமை எஸ்பிஐ வங்கிக்குப் போய்ச் சேர்கிறது, இவ்வங்கி மல்லையாவிற்கு 1,600 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகை நிலுவையில் உள்ளது. இதைத்தொடர்ந்து பிஎன்பி, ஐடிபிஐ வங்கிகள் 800 கோடி என நாட்டின் முன்னணி வங்கிகள் அனைத்தும் வாரி வழங்கியுள்ளது.

இவை அனைத்தும் மக்கள் பணம் என்பதை நினைவுபடுத்துக் கொள்ள வேண்டும்

இந்தியாவில் இருக்கும் இவரது சொத்துக்கள்

இந்தியாவில் இருக்கும் இவரது சொத்துக்கள்

1. யுனைடெட் பிரீவரிஸ் நிறுவனத்தின் 33% பங்குகள், இதன் மதிப்பு 7,000 கோடி ரூபாய்.

2. மங்களூரு கெமிக்கல் மற்றும் உரம் நிறுவனத்தில் 22 சதவீத பங்குகள், இதன் மதிப்பு 140 கோடி ரூபாய்.

3.யுபி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் 52 சதவீத பங்குகள்.

4. பேயர் கார்ப் சயன்ஸ் நிறுவனத்தில் 1 சதவீத பங்குகள். மற்றும் இந்நிறுவனத்தின் தலைவர் பதவி.

மேலே குறிப்பிட்டுள்ள சொத்துக்களில் 50 சதவீதத்திற்கு அதிகமான பங்குகளை இவர் கோர முடியாத நிலையில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

துவக்கம்.. உயர்வு..

துவக்கம்.. உயர்வு..

விஜய் மல்லையா வின் தந்தை 1983ஆம் ஆண்டுக் காலமான பிறகு தனது 28வது வயது யுபி குரூப் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் விஜய் மல்லையா.

அதேபோல் இவர் வர்த்தகக் காலத்தில் கிங்பிஷர் ஸ்டாரங் பிர் அறிமுகம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. இன்று வரை இந்தியாவில் அதிகளவில் விற்கப்படும் பிர் வகை என்றால் அது இதுவே.

2002ஆம் ஆண்டு ராஜ்ஜிய சபா உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிங்பிஷர் ஏர்லையன்ஸ் துவக்கம்

கிங்பிஷர் ஏர்லையன்ஸ் துவக்கம்

2005: கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட அறிமுகம்.

  • ராய்ல் சேலேஞ் பிராண்ட் விஸ்கியை தயாரிக்கும் ஷா வாலேஸ் நிறுவனத்தைக் கைப்பற்றினார்.

2006: பேக்பைபர் விஸ்கி மற்றும் ரமனாவ் வோட்கா தயாரிக்கும் Herbertsons நிறுவனத்தைக் கைப்பற்றினார் மல்லையா.

2007: ஸ்பைகர் என்னும் பார்மூலா ஒன் கார் நிறுவனத்தை வாங்கி ஃபோர்ஸ் இந்தியா எனப் பெயர் மாற்றினார்.

ஏர் டெக்கான்

ஏர் டெக்கான்

2007: அதிக நஷ்டத்தில் செயல்பட்டுக் கொண்டு இருந்து ஏர் டெக்கான் நிறுவனத்தை வர்த்தகப் போட்டியின் காரணமாக வாங்கினார்.

  • வைட்டி அண்ட் மெக்கே என்னும் பிரிட்டிஷ் விஸ்கி நிறுவனத்தை 595 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றினார்.

2008: 111.6 மில்லியன் டாலர் மதிப்பில் ராயல் சேலேஞ் என்னும் ஐபிஎல் கிரிக்கெட் அணியை வாங்கினார்.

  • பெங்களூரில் யுபி சிட்டி துவங்கப்பட்டது.

2009: இந்திய மக்கள் அனைவரும் வாயைப் பிளக்கும் வகையில் மாண்டி கார்லோவில் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள தீவு ஒன்றை வாங்கி அசத்தினார்.

வெளிநாட்டுச் சொத்துக்கள்

வெளிநாட்டுச் சொத்துக்கள்

நியூயார்க் டிரம்ப் டவரில் வீடுகள், சான் பிரான்சிஸ்கோவில் மதிப்பறியாத ஆடம்பர வீடு, தென் ஆப்பிரிக்காவில் கேம் ரெசார்ட், கோவா-வில் பிச்பிரென்ட் வில்லா

200க்கும் மேற்பட்ட ஆடம்பர பழமையான வின்டேஜ் கார், 95 மீட்டர் நீளம் உள்ள ஆடம்பர படகு, கல்ப்ஸ்டீரிம் என்னும் ஆடம்பர பிரைவேட் ஜெட் என இவரது சொத்துக்கள் நீண்டுகொண்டே போகிறது.

ஆனால் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க மட்டும் பணம் இல்லை.

கிங்பிஷர் ஏர்லையன்ஸ்

கிங்பிஷர் ஏர்லையன்ஸ்

2012: ஏர் டெக்கான் நிறுவனத்தின் மூலம் ஏற்பட்ட கடன் சுமையின் காரணமாகக் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் விஜய் மல்லையா.

 ஊழியர்கள் போராட்டம்

ஊழியர்கள் போராட்டம்

இதன் தொடர்ச்சியாகச் சம்பள நிலுவையின் காரணமாக இந்நிறுவன ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கினர். இதனால் இந்நிறுவனத்தின் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

வருமான வரி துறை

வருமான வரி துறை

வருமான அறிக்கையைத் தாக்கல் செய்யாதது, போன்ற பல காரணங்களுக்காக இந்நிறுவனத்தின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.

இதற்கு முன் பல வருடங்களாகக் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டே நிறுவனத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஏர்லையன்ஸ் முடக்கம்

ஏர்லையன்ஸ் முடக்கம்

அக்டோபர் மாதம் இந்நிறுவனத்தின் விமானங்களுக்கான குத்தகை பணக் கொடுக்க முடியாத காரணத்தால் இந்நிறுவன விமானங்களைக் குத்தகை நிறுவனங்கள் கைப்பற்றியது.

இதன்பின் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் விமானத் துறைக்கு அளிக்க வேண்டிய கட்டணம் மற்றும் வரியைச் செலுத்தாத காரணத்திற்காகவும், இயக்குவதற்கு விமானங்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்திற்காகவும் இந்நிறுவனத்தின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டது.

டியாஜியோ

டியாஜியோ

2013: 2012ஆம் ஆண்டு இறுதியில் பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டியாஜியோ யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டது.

இதன் பின் 2013ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் னைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் 27 சதவீத பங்குகளைச் சுமார் 6,500 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. இந்தத் தொகையிலும் KFA நிறுவனத்திற்குக் கடன் அளித்த வங்கிகளுக்கு எவ்விதமான தொகையும் அளிக்கப்படவில்லை.

 நாணயமற்றவர்

நாணயமற்றவர்

2014: கிங்பிஷர் நிறுவனத்திற்காகப் பெற்ற கடனை அளிக்க முடியாத விஜய் மல்லையாவை முதல் முறையாக யுனைடெட் வங்கி நாணயமற்றவர் என அறிவித்தது.

இதன்பின் சில வங்கிகள் அறிவித்தது. இதனைப் பல நீதிமன்றங்களில் தொடுத்த வழக்குகள் மூலம் தன் மீது படிந்த கறையைத் துடைத்தார் மிஸ்டர். மல்லையா.

பதவி விலக வேண்டும்

பதவி விலக வேண்டும்

2015: ஏற்கனவே சனி பகவான் உச்ச தலையில் இருப்பதைக் கவனிக்காத விஜய் மல்லையா டியாஜியோ முதலீடு செய்யப் பணத்தைத் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பல நிறுவனங்களுக்கு முறைகேடாகக் கொடுத்தார்.

இதனால் டியாஜியோ விஜய் மல்லையாவை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன தலைவர் பதிவில் இருந்து விலகுமாறு கேட்டது. இதனை மறுத்தார் மல்லையா.

டாட்டா பை பை...

டாட்டா பை பை...

இதன் பின் 2016ஆம் ஆண்டில் டியாஜியோ அறிவித்த 515 கோடி ரூபாய் ஆஃபரை ஏற்றுக்கொண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

பிரதமர் உதவியை நாடிய ஊழியர்கள்..

பிரதமர் உதவியை நாடிய ஊழியர்கள்..

2012ஆம் ஆண்டு முடங்கப்பட்ட கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் 2017 வரையில் 1,500 ஊழியர்கள் பணியில் இருந்தனர். மார்ச் 5 ஆம் தேதி இந்நிறுவன ஊழியர்கள் மல்லையாவிற்கு ரத்த கண்ணீர் வடிக்காத குறையாகக் கடிதம் எழுதினார்.

இதற்கு முன்னரே அதாவது மார்ச் 2ஆம் தேதியே மல்லையா நாட்டை விட்டு ஒடிவிட்டார். இதன் காரணமாக இந்நிறுவன ஊழியர்கள் தங்களது சம்பள நிலுவை குறித்த கோரிக்கையைப் பிரதமரிடம் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

ஜாமீன்

ஜாமீன்

பிரிட்டனில் இருக்கும் விஜய் மல்லையா மீது இந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதன் பின்னர்ப் பிரிட்டன் போலீஸார் அவரைக் கைது செய்த சில நிமிடங்களில் ஜாமீன் பெற்றும் மீண்டும் வெளியே வந்தார் விஜய் மல்லையா.

வழக்குகள்

வழக்குகள்

தற்போது இவர் மீது இந்தியா மற்றும் பிரிட்டன் நீதிமன்றங்களில் வழக்கு நடந்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையில் ஏதேனும் ஒரு காரணங்களைக் காட்டி தப்பித்து வருகிறார்.

இந்தியாவுக்கு வருகை..

இந்தியாவுக்கு வருகை..

இந்தியாவிற்கு வரும்படியும், கடன் நிலுவை தொடர்பாக இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க உதவி கேட்டபோது, இந்தியாவிலும், இந்திய சிறையிலும் தன் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்தார் விஜய் மல்லையா.

பல வங்கிகளில் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் கடன் வாங்கிப் பணத்தை முறைகேடாகப் பல நாடுகளில் போலி நிறுவனத்தை உருவாக்கி வெளிநாட்டில் இருக்கும் தனது வங்கி கணக்கிற்குப் பணத்தை மாற்றியுள்ளார். இதுக்குறித்தே தற்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிறைவாசம்

சிறைவாசம்

தற்போது விஜய் மல்லையா போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளார். ஆனாலும் தனது ஆடம்பர வாழ்க்கையை சற்றும் குறையாமல் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.தனது செலவிற்காகக் கூடுதல் நிதி ஒதுக்குமாறு விஜய் மல்லையா லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்த நிலையில், தற்போது மல்லையாவிற்கு அளிக்கப்பட்டு வரும் 5000 பவுண்டு நிதியை 18,325 பவுண்டாக உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ரூபாய் மதிப்பில் இது 16 லட்சம் ரூபாய்.

நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி

நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி

விஜ்ய மல்லையா செய்ய 7000 கோடி ரூபாய் மோசடியை தூக்கி சாப்பிடும் அளவிற்கு தற்போது நீர்வ மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான மோசடியை செய்துள்ளனர்.

சுவாரஸ்யங்கள்

சுவாரஸ்யங்கள்

'விஜய் மல்லையா' பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள்

குட்டி சொர்கம்

குட்டி சொர்கம்

கோவா என்றாலே பலருக்கும் பல நியாபங்கள்.. ஆனால் இங்கு உள்ள ஒரு குட்டி சொர்கம் உள்ளது தெரியுமா உங்களுக்கு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya: King of bad times

From a flamboyant billionaire to a man who watched his empire go bust, here’s how the journey unfolded for Vijay Mallya
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X