ரூ.862 கோடி மதிப்பிலான பங்குகளை விற்ற இன்போசிஸ் தலைவர்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழும் இன்போசிஸ் நிறுவனத்தின் 862 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் பொதுசந்தையில் இந்நிறுவனத்தின் தலைவர்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்த முன்னாள் தலைவர்கள் மற்றும் நிறுவனர்களான கிரிஷ் கோபால கிருஷ்ணன், எஸ்.டி.ஷிபுலால் மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து சுமார் 75 லட்சம் பங்குகளைப் பொதுச் சந்தையில் விற்பனை செய்துள்ளனர்.

திடீர் பங்கு விற்பனைக்கு என்ன காரணம்..?

கிரிஸ் கோபால கிருஷ்ணன்

கிரிஸ் கோபால கிருஷ்ணன்

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கிரிஸ் கோபால கிருஷ்ணன் தன் கட்டுப்பாட்டில் உள்ள 50 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த பங்கு எண்ணிக்கையில் இது வெறும் 0.2176 சதவீதம்.

ஷிபுலால் அண்ட் பேமிலி...

ஷிபுலால் அண்ட் பேமிலி...

இதனுடன் ஷிபுலால் மற்றும் அவரது மகளான ஸ்ருதி ஷிபுலால் ஆகியோர் இணைந்து 20 லட்சம் பங்குகளையும், ஷிபுலால் மனைவி குமாரி ஷிபுலால் 5 லட்சம் பங்களுகள் என ஷிபுலால் குடும்பம் சுமார் 25 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளது.

75 லட்சம் பங்குகள்

75 லட்சம் பங்குகள்

கிரிஸ் கோபால கிருஷ்ணன் மற்றும் ஷிபுலால் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து இடைத்தரகராகச் சிட்டி குரூப் நிறுவனத்தை நியமித்து ஒரு பங்கை 1,149.45 ரூபாய் என்ற நிலையில் விற்பனை செய்துள்ளனர்.

என்ன காரணம்
 

என்ன காரணம்

இந்தத் திடீர் பங்கு விற்பனைக்கான காரணத்தை இன்போசிஸ் நிறுவனர்களான கிரிஸ் கோபால கிருஷ்ணன் மற்றும் ஷிபுலால் கேட்ட போது, தனது சொந்த காரணங்களுக்காகவும், நிறுவனப் பங்குகளின் புழக்கத்தை அதிகரிக்கவும், தங்களது பல நன்கொடை திட்டங்களைச் செயல்படுத்தவும் இந்தப் பங்கு விற்பனையைச் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

2014இல்...

2014இல்...

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாராயண மூர்த்தி, நந்தன் நீலகனி, கே.தினேஷ் ஆகியோர் இணைந்து சுமார் 3 கோடி 26 லட்சம் பங்குகளை 6,484 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

பங்குகளின் நிலை

பங்குகளின் நிலை

இந்தத் திடீர் பங்கு விற்பனையின் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் விலை சற்று பாதிப்புக்குள்ளானது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் 1,155 ரூபாய் என்று துவங்கிய இன்போசிஸ் நிறுவன வர்த்தகம்.,

பங்கு விற்பனைக்குப் பின் 1142.95 வரை குறைந்தது.

இதைக் கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys founders sell stake worth Rs. 862 crore

Infosys co-founders Kris Gopalakrishnan and S.D. Shibulal along with his family memberssold about 7.5 million equity shares of the company raising about Rs. 862 crore in an open market transaction.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X