கோடையைத் தணிக்க மினி கேன்.. பெப்ஸி, கோக்க கோலா-வின் 'மெகா பிஸினஸ்' ஐடியா..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் கோடைக் காலத்தில் அதிகளவில் வியாபாரத்தைப் பார்க்கும் பெப்ஸி, கோக்க கோலா போன்ற குளிர்பான நிறுவனங்கள் கடந்த 2 வருடமாகக் குறைந்த அளவிலான வர்த்தகத்தை மட்டுமே பார்த்தது.

 

இதனால் 2016ஆம் ஆண்டின் கோடை கால விற்பனையை மூடுக்கிவிடவும் , அதிகளவிலான விற்பனை செய்யவும் பெப்ஸி, கோக்க கோலா நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்கள் மினி கேன் குளிர்பானங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

மினி கேன்

மினி கேன்

இதன் பிடி பெப்ஸி நிறுவனம் 150மிலி அளவு கொண்ட மினி கேன் வடிவிலான குளிர்பானத்தை 15 ரூபாய்க்கும், கோக்க கோலா நிறுவனம் தனது தயாரிப்பான கோக்க கோலா மற்றும் தம்ஸ்-அப் ஆகியவற்றை 180 மிலி கேன் வடிவில் 20 ரூபாய்க்கும் அறிமுகம் செய்துள்ளது.

பெப்ஸி கோ

பெப்ஸி கோ

இதுகுறித்துப் பெப்ஸி நிறுவனத்தின் துணைத் தலைவர் விபுல் பிரகாஷ் கூறுகையில், இப்புதிய திட்டத்தை முதல்கட்டமாக இந்தியாவின் நகரம் மற்றும் சிறிய நகரங்களில் செயல்படுத்தவும், 2வது கட்டமாக இந்தியா கிராமங்களுக்குக் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளோம் எனக் கூறினார்.

இந்திய வர்த்தகம்
 

இந்திய வர்த்தகம்

மேலும் பிரகாஷ் கூறுகையில் இந்தியாவில் எங்களது மொத்த வர்த்தகத்தில் 30 சதவீதம் கண்ணாடி பாட்டில் வடிவிலானது. இப்புதிய மினி கேன் அறிமுகத்தின் மூலம் கண்ணாடி பாட்டில் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மீதமுள்ள 70 சதவீத வர்த்தகம் பெட் பாட்டில் மூலம் செய்யப்படுவதாக அவர் கூறினார்.

உற்பத்தி

உற்பத்தி

பெப்ஸி நிறுவனம் தற்போது வெளியீட்டு வரும் அனைத்து கேன்களும் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை அடுத்த 2 அல்லது 3 வருடங்களில் இதன் உற்பத்தியை இந்தியாவிலேயே செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் விபுல் பிரகாஷ் கூறினார்.

முதலீடு

முதலீடு

2020ஆம் ஆண்டுக்குள் விற்பனையை இரண்டு மடங்கு வரை உயர்த்த 30,000 ரூபாய் வரை இந்சிய சந்தையில் முதலீடு செய்வதாகக் கோக்க கோலா நிறுவனம் 2012ஆம் ஆண்டு அறிவித்தது.

அதேபோல் சக போட்டி நிறுவனமான பெப்ஸி கோ நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிப்பதற்காக 33,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக 2013ஆம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pepsi goes for mini cans to push sales

Pepsi launches mini-cans of 150ml priced at Rs15; Coca-Cola Co. also has rolled out 180ml cans of Coca-Cola and Thums up priced at Rs20 in select outlets
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X