பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் நிறுவனங்களுக்கு புதிய சிக்கல்.. எல்லாம் உத்தரகாண்ட் செய்த வினை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவில் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்த துறைகளில் ஈகாமர்ஸ் முதன்மையானதாகும். கடந்த சில வருடமாக இத்துறை நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் அதிரடி முதலீடுகளால் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், இதன் அசுர வளர்ச்சிக்குத் தடையாக மாறியுள்ளது உத்தரகாண்ட் மாநில அரசு எடுத்த முடிவு..

அப்படி என்ன முடிவு.. வாங்கப் பார்ப்போம்..!

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி

நாடாளுமன்றத்தில் தினமும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் குறித்த விவாதம் தினசரி நடந்து வரும் நிலையில், ஈகாமர்ஸ் துறையைப் பற்றியும் இத்துறையின் மீது விதிக்கப்பட உள்ள வரி மற்றும் புதிய சட்டங்கள் குறித்து அவ்வப்போது விவாதம் செய்யப்படுகிறது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ள ஈகாமர்ஸ் துறையின் மீதான தனது முடிவுகள் மூலம் இத்துறை நிறுவனங்கள் கவலையில் மூழ்கியுள்ளது.

 

10 சதவீத வரி

10 சதவீத வரி

ஆன்லைனில் விற்பனைக்காக ஈகாமர்ஸ் நிறுவனங்களில் பட்டியலிடப்படும் பொருட்களின் மீது நுழைவு வரியாக (Entry tax) 10 சதவீத வரியை உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

பொதுவாக உத்தரகாண்ட் மாநில அரசு எடுக்கும் வரி மற்றும் பிற வர்த்தகம் சார்ந்த அனைத்து முடிவுகளையும் அண்டை மாநிலங்களும், இந்தியாவின் முக்கிய வர்த்தக மாநிலங்களும் அப்படியே ஏற்றுக்கொள்ளும். இதனால் இப்புதிய வரி விதிப்பு நாட்டின் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பிளிப்கார்ட் போட்டது வழக்கு..
 

பிளிப்கார்ட் போட்டது வழக்கு..

உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்த நுழைவு வரி விதிப்பை எதிர்த்துப் பிளிப்கார்ட் நிறுவனம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

இப்புதிய வரியை விதிக்கக் கூடாது என்றும், தற்போதைய அறிவிப்புக்குத் தற்காலிக தடை உத்தரவை அளிக்குமாறு நாட்டின் மிகப்பெரிய ஈகாரமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

 

பிற மாநிலங்கள்

பிற மாநிலங்கள்

மேலும் எக்னாமிக்ஸ் டைம்ல் பத்திரிக்கை அறிவித்துள்ள படி உத்தரகாண்ட் மாநிலம் அறிவித்த நுழைவு வரி விதிப்பை ஏற்றுப் பிகார் மற்றும் அஸ்சாம் மாநிலங்களும் வரி விதிப்பை அமலாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

மாநில அரசுகள்

மாநில அரசுகள்

நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளாதல், மாநில அரசுகள் புதிய வருவாய் வாய்புகளை தேடி வருகிறது.

இதன் அடிப்படையிலேயே வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் துறையைக் கொண்டு மாநில அரசுகள் குறிப்பிடத்தக்க அளவிலான வருமானத்தைப் பெற வேண்டும் திட்டமிட்டு, இப்புதிய வரி விதிப்பு முடிவுகளை அறிவித்துள்ளது.

இதனை எதிர்த்துப் பிளிப்கார்ட் மட்டும் அல்லாமல் பிற நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளது.

வரிப் பிரச்சனைகள்

வரிப் பிரச்சனைகள்

ஸ்டார்ட் அப் உலகில் இருந்து மிகப்பெரிய அளவில் உயர்ந்த ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வரி சம்பந்தமான பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.

தற்போது நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் மாநில அரசின் வருவாய் அளவுகள் குறைய வாய்ப்புகள் உள்ள காரணத்தால், மாநில அரசுகள் வருவாய் வாய்ப்புகளைத் தேடி வருகிறது. இதன் காரணமாகத் தற்போது இந்த வலையில் ஈகாமர்ஸ் துறை சிக்கியுள்ளது.

கர்நாடக மற்றும் கேரள அரசு ஈகாமர்ஸ் துறைக்கு வைத்த செக்.

 அமேசானும்.. கர்நாடாக மாநிலமும்..

அமேசானும்.. கர்நாடாக மாநிலமும்..

சில மாதங்களுக்கு முன் கர்நாடாக மாநிலத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தின் சரக்குக் கிடங்குகளில் வைக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கு விற்பனை வரி விதிக்கக் கர்நாடாக மாநில அரசு அறிவித்தது.

இதனை எதிர்த்து அமேசான் தொடுத்த வழக்கின் மூலம் தனது வர்த்தக முறையை நீதிமன்றத்தில் விவரித்தபின், விற்பனை விரி விதிக்கப்பட வேண்டும் என்றால் விற்பனையாளர்களுக்கு விதிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துக் குறிப்பிடத்தக்கது.

 

கேரள அரசு

கேரள அரசு

அதேபோல் பிளிப்கார்ட் மற்றும் சக நிறுவனங்களும் கேரள மாநிலத்தில் விற்பனை வரி மற்றும் மாநில அரசின் விரி சட்டங்களை மீறியதன் மூலம் 54 கோடி ரூபாய் அபராதம் செலுத்த உதிரவிட்டது நீதிமன்றம். இதைப்போல் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வரி சார்ந்த பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.

என்ன தான் முடிவு

என்ன தான் முடிவு

உத்தரகாண்ட் மாநில அரசின் அறிவிப்புகளை எதிர்த்துப் பிளிப்கார்ட் தொடுத்த வழக்கு விசாரணைக்குப் பின் இதன் நிலைப்பாடு தெரிய வரும்.

மோர்கன் ஸ்டான்லி

மோர்கன் ஸ்டான்லி

கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்த பிளிப்கார்ட் 2015ஆம் ஆண்டில் நிலையான வர்த்தகத்தைப் பெற்றாலும் செலவினங்களின் அளவுகள் அதிகமாக இருந்தது.

இதன் காரணமாக இந்நிறுவனத்தின் வர்த்தக மற்றும் வருவாய் அளவுகளை ஆய்வு செய்து, மியூச்சுவல் ஃபண்ட் மேலாண்மை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி பிளிப்கார்ட் நிறுவனங்கள் பங்குகள் மதிப்பை 27 சதவீதம் குறைத்தது.

 

ஈகாமர்ஸ்

ஈகாமர்ஸ்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பீடு குறைந்ததை அடுத்து இத்துறை சார்ந்த பிற நிறுவனங்களின் மதிப்பும் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இனி ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் முதலீட்டு அளவுகள் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வீழ்ச்சி

வீழ்ச்சி

இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்கள் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு முறையை முழுமையாக மாற்றியமைத்து வருகின்றனர்.

இதனால் ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் சுக்கிரன் திசை முடிந்தது.

 

2,000 கோடி நஷ்டம்

2,000 கோடி நஷ்டம்

2015ஆம் ஆண்டில் பிளிப்கார்ட் நிறுவனம் விற்பனை சந்தையில் அமேசான், ஸ்னாப்டீல் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் அதிரிபுதிரியாகத் தள்ளுபடிகளை வாரி வழங்கியதில் இந்நிறுவனம் சுமார் 2,000 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தது.

தவறு செய்த பிளிப்கார்ட்

தவறு செய்த பிளிப்கார்ட்

2015ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு செல்ல அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்கள் தங்களின் தளத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்த நிலையில், பிளிப்கார்ட் தன் தள்ளுபடி வேலையைக் காட்டி சுட்டுக்கொண்டது.

ஸ்னாப்டீல் அசத்தல்..

ஸ்னாப்டீல் அசத்தல்..

நாட்டின் முன்னணி ஈகார்மஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் 2016ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வில் தனது ஊழியர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு 20 சதவீதத்திற்கும் அதிகமான சம்பளத்தை அளித்து அசத்தியுள்ளது.

இதனால் பிற நிறுவனங்களும் இத்தகைய சம்பள உயர்வை அளிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஆமீர் கான் வாயால் கெட்டது ஸ்னாப்டீல்!ஆமீர் கான் வாயால் கெட்டது ஸ்னாப்டீல்!

சாயம் வெளுக்கத் துவங்கியது

சாயம் வெளுக்கத் துவங்கியது

இந்தியாவில் உணவு டெலிவரி 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களின் சாயம் வெளுக்கத் துவங்கியது..!இந்தியாவில் உணவு டெலிவரி 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களின் சாயம் வெளுக்கத் துவங்கியது..!

பிக் பேஸ்கட்

பிக் பேஸ்கட்

பேஸ்புக் வாடிக்கையாளர்களை நம்பிக் களமிறங்கும் பிக் பேஸ்கட்..பேஸ்புக் வாடிக்கையாளர்களை நம்பிக் களமிறங்கும் பிக் பேஸ்கட்..

இத்துறை குறித்து பிற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள் இதை கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In India more states are following in the footsteps of Uttarakhand after the state imposed a 10 percent entry tax on goods sold online.ecommerce
Story first published: Tuesday, March 15, 2016, 15:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X